Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
முதுகுவலியை கட்டுப்படுத்தும் சூரியக்குளியல்!

அலுவலகத்திற்கு மோட்டர் பைக், கார் போன்ற வாகனங்களில் பெரும்பாலோனோர் சென்று வருகின்றனர். நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு முதுகுவலி வர வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் காலையிலோ, மாலையிலோ சரியான அளவில் உடற்பயிற்சி செய்யவேண்டும்
மசாஜ் செய்வதன் மூலம் முதுகுவலியை குறைக்க முடியும் என்று கூறும் நிபுணர்கள். வெள்ளைப் பூண்டு எண்ணெயை வைத்து முதுகுப்புறங்களில் மசாஜ் செய்யலாம் என்கின்றனர். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேனை ஊற்றி குடிப்பதன் மூலம் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர்.
வைட்டமின் ‘டி சத்து குறைவாக இருந்தால் கண்டிப்பாக முதுகுவலி வரும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனுக்கு சுமார் 1000 யூனிட் முதல் சுமார் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு வைட்டமின் டி' தேவை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். நமது உடலிலுள்ள பற்களும், எலும்புகளும் உறுதியாக இருக்க வைட்டமின் டி' முக்கியத் தேவை.
முதுகுவலியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வைட்டமின் டி சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பால், மீன் எண்ணெய், முட்டை, ஈரல், இறைச்சி, கொழுப்பு, தானியங்கள் ஆகியவற்றில் இயற்கையாகவே வைட்டமின் டி' சத்து குறைவான அளவில் உள்ளது. நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுப் பொருட்களில் வைட்டமின் டி' சேர்க்கப்படுகிறது. கீரைகள், ராகி போன்றவைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம் இதனால் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி' சத்து கிடைக்கும்.
வைட்டமின் டி' இயற்கையாகக் கிடைக்க மிகச்சிறந்த வழி சூரியஒளி' மட்டுமே. உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் மூலாதாரமே சூரிய ஒளிதான். இயற்கையான, மிக சக்தி வாய்ந்த, மிகவும் பயனுள்ள சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதே வைட்டமின் டி' சத்து நமது உடலுக்கு கிடைப்பதற்காகவே!. எனவே உடலில் குறிப்பிட்ட அளவு சூரிய வெளிச்சம் படாமல் வாழ்பவர்கள் முதுகுவலியினால் அவஸ்தைப் படவேண்டியதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.
இன்றைக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரியவெளிச்சம் உடலில் படவேண்டும் என்பதற்காகவே அதிக தூரம் நடந்தே பயணம் செய்வார்கள். கடற்கரையில் சூரியக்குளியல் நடத்துவார்கள். ஆனால் நம் ஊரில் எளிதாக மிக மலிவாக காசு செலவில்லாமல் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தை நாம் கண்டுகொள்வதில்லை. இதனால்தான் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகவேண்டியிருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
பாடாய் படுத்தும் முதுகுவலியில் இருந்து தப்பிக்க காலை, மற்றும் மாலை நேரத்தில் இதமான சூரிய வெளிச்சம் படுமாறு வாக்கிங், ஜாக்கிங் செல்வதன் மூலம் இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்யமுடியும் என்பது நிபுணர்களின் ஆலோசனையாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications