Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தூக்கம் குறைந்தால் பிபி எகிறும்... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

இத்தாலியைச் சேர்ந்த பிஸா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. 58 வயதுடைய உயர்ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் சோதனை செய்தபோது அனைவரும் 5 மணிநேரத்திற்கு குறைவாக உறங்குவது கண்டறியப்பட்டது.
இதேபோல் மற்றொரு ஆய்வில் 75 வயதிற்கு மேற்பட்ட தூக்க குறைபாடினால் பாதிக்கப்பட்ட 784 பேர் பங்கேற்றனர். 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை அவர்களின் ரத்த அழுத்தம் சராசரியாக இருந்தது. அதே சமயம் தூக்கக்குறைபாடினால் பாதிக்கப்பட்ட பின்னர் 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களில் 243 பேர் உயர்ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன்மூலம் தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு உயர் ரத்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சீக்கிரம் உறங்கப் போங்க
அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்டுவேர்டு மருத்துவக் கல்லூரி நிபுணர்கள் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பங்கேற்றவர்களை வழக்கமா உறங்கும் நேரத்தை விட ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்கு செல்ல அனுமதித்தனர். 6 வாரம் தொடர்ந்து அவர்கள் நன்றாக உறங்கி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுத்தினர். பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.
அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்து சராசரி அளவாக இருந்தது. எனவே வழக்கத்தைவிட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தூங்கினால் ரத்த அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
