Latest Updates
-
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா?
கொசுவிரட்டிகள் நுரையீரலுக்கு கெடுதலை விளைவிக்குமாம்!!!

மேலும் அந்த ஆய்வில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் கெமிக்கலான அலெத்ரின் (alletrin) இருக்கிறது. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை, நமது நுரையிரல்களையும் அழிக்கிறது. ஏனெனில் அதனை இரவில் தூக்கும் போது அதிகம் சுவாசிப்பதால், நமது உடலில் நல்ல ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு, மாசுபட்டிருக்கும் காற்றை சுவாசிப்பதால், நுரையீரலில் அந்த காற்று அடைபட்டு, நுரையீரலின் அரையை பாதிக்கிறது.
சிலர் கொசுக்களுக்கு பயந்து மாலை நேரத்தில் இருந்தே, வீட்டு ஜன்னல்கள், கதவுகள் என்று அனைத்தையும் அடைத்துவிட்டு, இந்த கொசு விரட்டிகளை போட்டுவிடுகின்றனர். அதுமட்டுமல்லாமல், அவ்வாறு அடைத்துவிடுவதால், வீட்டில் சமைக்கும் போது வரும் புகை, இந்த கொசு விரட்டிகளால் வரும் புகை என்று வீட்டில் நல்ல காற்றை விட, அசுத்தமான காற்று இருப்பதால், அவற்றை சுவாசிக்கும் போது, அந்த கொசு விரட்டிகளில் உள்ள விஷம் உடலில் வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக முதலில் சளி, காய்ச்சல் என்று ஆரம்பிக்கும்.
இவை மூன்று நாட்கள் நீடித்தால், அதனை அலர்ஜி என்று முடிவு செய்து, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு ஒரு நோயாளியாக நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். பின்னர் அந்த நிலை சற்று படிப்படியாக முன்னேறியதன் அறிகுறியாக, உடலில் ஆஸ்துமா என்னும் நோய் வந்து விடுகிறது. சில பிறந்த குழந்தைகள் அந்த மேட் புகையை சுவாசித்தால், வலிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று லக்னோ கிஸ் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த புகையை சுவாசிப்பதால் சிலசமயங்களில் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்றும், கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உருவாக்க வல்லது என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
ஆகவே கொசுக்களை விரட்ட பணத்தை செலவழித்து கொசு விரட்டிகளை வாங்குவதை விட, ஈஸியாக கொசு வலைகளை கட்டி சுத்தமான காற்றை சுவாசித்து, ஆரோக்கியமாக வாழலாம் என்றும் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
