Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
செல்லப்பிராணிகளாலும் உடல் ஆரோக்கியம் அடையும்!!!

அத்தகைய செல்லப் பிராணிகளிடம் இருக்கும் ஒரு சிலவற்றை நாமும் கடைபிடித்தால் ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழலாம். நண்பனாக நினைக்கும் செல்லப் பிராணியிடம் இருந்து ஒரு சில பாடங்களை கற்றுக் கொள்வதில் யாரும் வெட்கப்பட வேண்டாம். சரி, என்ன பழக்கங்களை நாம் கற்றுக்கொண்டு, கடைபிடிக்க வேண்டும் என்று பார்ப்போமா!!!
1. பொதுவாக செல்லப்பிராணிகளுக்கு வெளியே 'வாக்கிங்' அல்லது 'ஜாக்கிங்' அழைத்துச் சென்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் நாய்களுக்கு வெளியே அழைத்துச் செல்கிறோம் என்று தெரிந்தால் அது துள்ளிக் குதித்து ஓடி வரும். இதற்காக "ஹாவார்டு யூனிவர்சிட்டி"யில் நீண்ட நேரம் நடந்தால் என்ன நன்மை என்று ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் எவ்வளவு தூரம் நடக்கிறோமோ அவ்வளவு நாள் உயிருடன் வாழலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே நீண்ட நாட்கள் உயிரோடு வாழ, வீட்டில் வளர்க்கும் நாயுடன் தினமும் 'வாக்கிங்' செல்லுங்கள். இவ்வாறு செல்வதால் சுத்தமான காற்றை சுவாசித்து, உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.
2. உடலானது ஆரோக்கியமாக இருக்க நன்கு தூங்க வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் ஒரு ஆய்வில் பகல் நேரத்தில் 15 நிமிடம் தூங்குவது, பல மணிநேரம் தூங்குவதற்கு சமம் என்று கண்டுகிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பழக்கம் அனைத்து பிராணிகளிடமும் இருக்கும். வேண்டுமென்றால் கவனித்துப் பாருங்கள், எந்த ஒரு பிராணியும் நீண்ட நேரம் தூங்காது. இதனால் தான் அனைத்து பிராணிகளும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு பிட் ஆகவும் இருக்கிறது.
அதே போல் மனிதர்களாகிய நாமும் அதிக வேலையின் காரணமாக 8-9 மணிநேரம் தூங்க முடியாது. ஆகவே அப்படி இருப்பவர்கள் எப்போதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தூங்கி ஓய்வு எடுக்கலாம். இதுவும் உடலுக்கு ஒரு சிறந்த பலனை கொடுக்கும்.
3. அனைத்து பிராணிகளும் உணவு உண்பதில் ஒரு டையட் மேற்கொள்ளும். மேலும் அது உண்ணும் போது உணவை நன்கு மென்று அரைத்து பின்னரே விழுங்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் உணவை எப்போதும் சரியான நேரத்திற்கு உண்ணும். ஆகவே இத்தகைய பழக்கத்தையும் நமது செல்லப் பிராணிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதனால் பல நோய்களில் இருந்து உடலைக் காக்கலாம்.
4. நாம் சில சமயம் நமது செல்லப்பிராணிகளை அழைக்கும் போது அவை கேட்காத மாதிரி இருக்கும். ஏனெனில் நமக்கு ஞாபகம் இருக்காது, நாம் அதனைத் திட்டியிருப்பது. ஆனால் அது சரியாக ஞாபகம் வைத்துக் கொண்டு நம்மிடம் கோபமாக இருக்கும். இருப்பினும் அந்த கோபம் நம் மீது இருக்கும் அன்பினில், அதற்கு விரைவில் போய்விடும். அது போல் நம்மை எவரேனும் திட்டினாலோ அல்லது கெடுதல் செய்தாலோ, நாம் மிகுந்த டென்சன் ஆகாமல், பொறுமையாக இருந்து நம் மனதை அமைதிப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் தேவையில்லாததை நினைவில் கொள்ளாமல் மறந்துவிடவும்.
5. செல்லங்களை நன்கு கவனித்தால், அவை நன்கு மூச்சை உள்வாங்கி வெளிவிடுவதை நன்கு உணரலாம். இது ஒரு நல்ல பழக்கம். ஏனெனில் காற்றை நன்கு உள்வாங்கி வெளிவிட்டால், உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பதோடு, உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது. இதனால் மனஅழுத்தம் குறைவதோடு, மனதில் இருக்கும் கஷ்டமும் குறைந்து ஒரு நிம்மதியை உணர முடியும்.
ஆகவே இவற்றையெல்லாம் உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளிடம் இருந்து கற்றுக் கொண்டு, ஆரோக்கியமாக வாழுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
