Latest Updates
-
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 03, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்கப்போகுதாம்
அல்சர் இருக்குதா? கவனமா இருங்க புற்றுநோய் வந்துவிடும்...
இன்றைய உலகில் தற்போது அனைவரும் பாதிக்கப்படும் ஒரு நோய்களில் அல்சரும் ஒன்றாகும். அல்சர் என்பது வயிற்றில் இருக்கும் இரைப்பையில் புண்களை ஏற்படுத்தும். மேலும் எப்பொழுது வயிற்றில் இருக்கும் பாதுகாப்பைத் தரும் ஒரு உறையானது சரியாக வேலை செய்யாமல் இருக்கிறதோ, அப்போது வயிற்றில் வீக்கம் அல்லது புண் போன்றவை ஏற்படும். அத்தகைய அல்சர் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட போது, அந்த ஆய்வில் அல்சர் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் அல்சர் உருவாதற்கு முக்கிய காரணம் இரைப்பையில் பாக்டீரியாவான ஹெலிகோபேக்டர் பைலோரி (helicobacter pylori) தாக்குவதால் வருகிறது. அல்சரை உருவாக்கும் இந்த பாக்டீரியா, கார்சினோமாவுடன்தொடர்புடையது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாக்டீரியா எளிதில் உடலை தாக்கி அல்சரை உண்டாக்கும் தன்மையையும் உடையது.

அதுமட்டுமல்லாமல் டி.என்.ஏ-வில் மாறுபாட்டை ஏற்படுத்துவதோடு, வயிற்றில் இருக்கும் பாதுகாப்பு உறையையும் பாதிப்பை எற்படுத்திவிடும். இதனை எளிதில் சரிசெய்துவிட முடியாது. நீண்ட நாட்கள் வயிற்றில் புண்கள் இருந்தால், அவை வயிற்று புற்றுநோயை உண்டாக்கிவிடும். ஏனெனில் அவ்வாறு பாதிக்கப்பட்ட வயிற்று திசுக்கள் நீண்ட நாட்கள் இருப்பதால், இயற்கையாக அவை ஃபைபரஸ் திசுக்களாக மாற்றப்படுகின்றது. இதனால் நாளடைவில் வயிற்று புற்றுநோயானது ஏற்பட்டுவிடும்.
ஆகவே அல்சர் இருப்பவர்கள் ஆஸ்பிரின் அல்லது மற்ற அழற்சி மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் வயிற்றில் உற்பத்தியாகும் பாதுகாப்பான கோழையானது குறைந்துவிடும். மேலும் அந்த மருந்துகள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரித்து. வயிற்றுக்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைத்து, உடலின் திறனை பலவீனப்படுத்தும் செல்களை சரி செய்யாமல் இருக்கும். இத்தகைய காரணங்களால் புற்றுநோய் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும் கூறுகின்றனர்.
அல்சர் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை...
மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பாக்கு போடுதல் போன்றவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அல்சரிலிருந்து, வயிற்று புற்றுநோய்க்கு வழிவகுக்கும். மேலும் அவை வயிற்றில் அதிகமான அளவு அமிலத்தை உற்பத்தி செய்யும். ஆகவே வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்பட்டால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும். மேலும் அல்சர் ஏற்பட்டால் கடைகளில் அதற்கான மருந்துகளை வாங்கி சாப்பிட்டு சரிசெய்யலாம். இதனால் புற்றுநோய் அளவுக்கு கொண்டு போகாமல் தடுக்கும்.
அல்சரானது சரிசெய்யக் கூடிய ஒன்றே. அதிலும் வயிற்று புற்றுநோய் ஆரம்பத்தில் இருந்தால் கூட சரிசெய்துவிட முடியும். ஆனால் எதற்கு அந்த அளவு வரை நாம் இருக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே மருத்துவரை ஆலோசித்து சரியான மருந்துகளை உட்கொண்டு, அல்சரை தடுக்கலாமே!!!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
