Latest Updates
-
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா?
மருந்து மாத்திரைகளும் உடல் நலத்தை பாதிக்குமாம்!!!
இன்றைய மக்களுள் நிறைய பேர் ஒரு கெட்ட பழக்கத்தை கொண்டுள்ளனர். அது தான் எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை போடுவது. அதிலும் அந்த மருந்து மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு போடமாட்டார்கள். ஏனெனில் கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை சாப்பிட்டால் நிச்சயம் உடல்நலம் சரியாகிவிடும், பின் எதற்கு மருத்துவரை அணுக வேண்டும் என்று அலட்சியத்தோடு ஒரு எண்ணம் இருப்பதால் தான். அவ்வாறு அலட்சியத்தோடு, எந்த ஒரு மருத்துவரின் ஆலோசனையும் இல்லாமல் போடுவதால், உடல் நலத்திற்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எப்போதும் அந்த மாதிரியான மருந்துகளை வாங்கிப் போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் எந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால் என்ன பிரச்சனை உடலுக்கு ஏற்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தூக்க மாத்திரை
பொதுவாகவே தூக்க மாத்திரைகள் ஒரு வகையான அடிமைத் தன்மையை ஏற்படுத்தும் பொருள் தான். ஏனெனில் அது முதலில் மூளை செயல்களைத் தான் பாதிக்கும். அதிலும் இதனை தினமும் போட்டு தூங்குபவர்களுக்கு, ஒரு நாள் போடாமல் இருந்தாலும், தூக்கம் வராமல் இருக்கும். சொல்லப்போனால் அதற்கு அடிமை ஆகிவிட்டது போல் இருப்பார்கள். மேலும் சில ஆய்வுகளில் தூக்க மாத்திரைகள் மன அழுத்தத்தை அதிகம் ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆன்டாசிட்
அசிடிட்டிக்கு விற்கப்படும் மாத்திரைகளால் நல்லது ஏற்படுவதை விட, பாதிப்பு தான் அதிகம் ஏற்படும். அதிலும் எப்போதெல்லாம் வயிற்று சரியாக இல்லை, சற்று எரிச்சலோடு இருக்கிறதோ, அப்போது இந்த மாத்திரைகளை சாக்லேட் போல் சாப்பிடுவார்கள். இதனால் உண்மையில் உடலில் செரிமானக் கோளாறு ஏற்படுவதோடு, பின்னர் அல்சர், பைல்ஸ், சிறுநீரகக் கல் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.

தலைவலி மாத்திரைகள்
அனைவருக்குமே ஏற்படும் உடல் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைவலி. அந்த நேரத்தில் அனைவரின் மனதில் தோன்றும் ஒரு விஷயம், எந்த மாத்திரையை போட்டால், தலைவலி குறையும் என்பது தான். அவ்வாறு அந்த மாத்திரைகளைப் போடுவதால், நிறைய பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நேரத்தில் வலியை குறைக்க ஏதாவது மசாஜ் செய்யலாம்.

சளி மற்றும் இருமல் மருந்துகள்
பொதுவாகவே குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்பட்டால் தரும் மருந்துகள் அனைத்துமே உடலுக்கு கெடுதல் தான். அதிலும் அந்த மருந்துகள் நுரையீரலைத் தான் பாதிக்கும். ஆகவே அப்போது எப்போதும் மருத்துவரிடம் ஆரோசனையின்றி எந்த மருந்துகளையும் சாப்பிடக்கூடாது. மேலும் அளவு தெரியாமல் அதிக அளவில் கொடுத்துவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்
அதிக வேலைச்சுமையின் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்க மாத்திரைகளை சிலர் சாப்பிடுகின்றனர். அவ்வாறு சாப்பிடுவதால், இந்த மருந்துகள் மூளையை நன்கு செயல்படுத்தக்கூடிய செரோட்டீன் மற்றும் குளுக்கோஸின் அளவை மாற்றிவிடும். அதனால் தான், இந்த மருந்துகளை சாப்பிட்டால், உடல் பருமனடைகிறார்கள். ஆகவே மனஅழுத்தத்திற்கான மருந்துகள் உடல் நலத்தை பாதிக்கும்.
ஆகவே எந்த ஒரு உடல் பிரச்சனைக்கும் செயற்கை மருந்துகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதை விட, இயற்கை மருந்துகளை சாப்பிடுவது நல்லது. மேலும் அவ்வாறு சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, உடலில் உள்ள பிரச்சனையும் எந்த ஒரு பக்கவிளைவுமின்றி நீங்கிவிடும்.



Click it and Unblock the Notifications