Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
வயிற்றில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்பை கரைக்கணுமா? இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க...
Weight Loss Tips: தொப்பை என்பது ஒருவரது அழகை கெடுப்பது மட்டுமின்றி, ஆரோக்கியம் பாழாகிக் கொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கும் முக்கியமான அறிகுறியாகும். இன்றைய நவீன காலத்தில் ஜங்க் உணவுகள் நம்மைச் சுற்றி அதிகம் உள்ளன. அதே வேளையில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையையும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதன் விளைவாக உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் ஜீரணமாகாமல் அப்படியே வயிற்றில் தங்கி தொப்பையை உண்டாக்குகின்றன. தொப்பை வந்துவிட்டால் அதை குறைக்க உடனே முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக உடலை ஆக்கிரமித்து, பல்வேறு நோய்கள் வர வழிவகுத்துவிடும்.

தொப்பையைக் குறைப்பதற்கு வெறும் உடற்பயிற்சிகளை மட்டும் செய்தால் போதாது. உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஒருசில பானங்களைக் குடிக்க வேண்டும். அதுவும் அந்த பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதன் மூலம் விரைவில் தொப்பையைக் குறைக்கலாம். இப்போது வயிற்றில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்பைக் கரைக்க உதவும் அந்த பானங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. எலுமிச்சை நீர்
உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதில் எலுமிச்சை நீர் மிகவும் சக்தி வாய்ந்த பானமாகும். எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை ஏராளமாக உள்ளன. இவை சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகின்றன. எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை செரிமானத்தை மேம்படுத்துகிறது, கல்லீரலை சுத்தப்படுத்துகிறது மற்றும் கொழுப்புக்களை திறம்பட கரைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட எலுமிச்சையின் சாற்றினை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து விட்டு, பின் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்கள் திறம்பட குறையும்.
2. க்ரீன் டீ
க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதில் சிறப்பான பானம். இதில் உள்ள கேட்டசின்கள், குறிப்பாக EGCG கலோரிகளை கரிப்பதோடு, கொழுப்புக்களையும் வேகமாக கரைக்கின்றன. கூடுதலாக க்ரீன் டீயில் காப்ஃபைன் மிதமான அளவில் இருப்பதால், உடலின் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. அதற்கு நல்ல சூடான நீரில் க்ரீன் டீ பேக்கை 3-5 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துவிட்டு, பின் அந்த டீயில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடித்தால், இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
3. ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிரும் எடை இழப்புக்கு பெரிதும் உதவி புரியும். மேலும் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. முக்கியமாக இதில் உள்ள அசிட்டிக் அமிலம் கொழுப்புக்களை வேகமாக கரைத்து, தட்டையான வயிற்றை விரைவில் பெற உதவி புரியும். அதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதனால் வேகமாக தொப்பை குறைவதைக் காணலாம்.
4. இஞ்சி டீ
இஞ்சி டீயும் தொப்பையைக் குறைக்க உதவும் மற்றொரு பானமாகும். இஞ்சியில் உள்ள தெர்மோஜெனிக் பண்புகள், கொழுப்புக்களை வேகமாக குறைக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும், மெட்டபாலிசத்தை வேகப்படுத்தவும் உதவுகின்றன. கூடுதலாக இது செரிமான பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. தொப்பையை வேகமாக குறைக்க நினைப்பவர்கள், நற்பதமான இஞ்சியை சிறிது எடுத்து அதை தட்டில் கொதிக்கும் நீரில் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
5. வெள்ளரிக்காய் மற்றும் புதினா நீர்
வெள்ளரிக்காய் மற்றும் புதினாவை நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, அந்நீரை காலையில் எழுந்ததும் குடிப்பதன் மூலம், உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, உடல் சுத்தமாக இருக்கும். ஏனெனில் இந்நீரில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும். மேலும் இந்நீர் வயிற்றை சாந்தப்படுத்தி, செரிமானத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக இந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
