Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Weight Loss: ப்ளாக் காபியுடன் இந்த 5 உணவுகளை சேர்த்து குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையும்..
Weight Loss Tips In Tamil: உலகளவில் ஆண், பெண் என இருபாலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் உடல் பருமன். இப்படி உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் அதிகரித்த உடல் எடையைக் குறைக்க ஏராளமான வழிகளைப் பின்பற்றி வருகின்றனர்.
ஆனால் அப்படி பின்பற்றும் வழிகள் அனைத்துமே அனைவருக்கும் சிறப்பான பலன்களைத் தந்துவிடாது. ஏனெனில் ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரியானவை. மேலும் உடல் பருமனுக்கான மூல காரணத்தை அறிந்து, அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொண்டால் சில நல்ல மாற்றங்களைக் காணலாம்.

அதுவும் உடல் எடையைக் குறைக்க எவ்வளவு டயட்டுகள், உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், ஒரு கப் ப்ளாக் காபி உடலின் மெட்டபாலிச கவலைகளை நிவர்த்தி செய்ய ஒரு சக்திவாய்ந்த ஊக்கியாக இருக்கும். ஆனால் இன்னும் நிறைய பேருக்கு ஒரு விஷயம் தெரியாது. ப்ளாக் காபியை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது உடல் எடையை கணிசமாக குறைக்க உதவும்.
ஏனெனில் ஆய்வுகளில் ப்ளாக் காபியில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பண்புகள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ப்ளாக் காபியை வெறுமனே குடிப்பதை விட, அத்துடன் குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து உட்கொள்ளும் போது, மெட்டபாலிசம் இருமடங்கு அதிகரித்து, உடல் எடை வேகமாக குறைவதாக கூறப்படுகிறது. இப்போது உடல் எடையைக் குறைக்க ப்ளாக் காபியுடன் எந்த பொருட்களை சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
1. பட்டை
ப்ளாக் காபியுடன் 1 சிட்டிகை பட்டை தூளை சேர்ப்பது, ப்ளேவரை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்பை வேகமாக குறையும். அதுவும் பட்டையில் உள்ள இன்சுலின்-உணர்திறன் பண்புகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், பசியைக் குறைக்கவும், முழுமையின் உணர்வுகளை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. எனவே இந்த நல்ல மணம் நிறைந்த பட்டையை எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களின் ப்ளாக் காபியில் சேர்த்து வந்தால், சிறப்பான பலன்களைப் பெறலாம்.
2. தேங்காய் எண்ணெய்
ப்ளாக் காபியுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலக்கும் போது, அது க்ரீமியான அமைப்பை தருவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை கரைக்கும். அதுவும் இதில் உள்ள நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் பசியைக் கட்டுப்படுத்துகிறது, மனநிறைவை தருகிறது மற்றும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. எனவே எடையைக் குறைக்க முயற்சித்து வந்தால், ப்ளாக் காபியுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள்.
3. இஞ்சி
ப்ளாக் காபியுடன் இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து குடிக்கும் போது, இஞ்சியில் உள்ள தெர்மோஜெனிக் பண்புகள் உடலின் வெப்பநிலையை தூண்டி, கலோரிகளை எரிப்பதை மேம்படுத்தி, கொழுப்பை வேகமாக குறைக்க உதவுகிறது. மேலும் இது பசியைக் கட்டுப்படுத்துகிறது, கலோரிகளைக் குறைக்க உதவுகிறது. எனவே நீங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், உங்களின் காலை ப்ளாக் காபியில் இஞ்சியை தட்டிப் போட்டு குடியுங்கள்.
4. எலுமிச்சை சாறு
ப்ளாக் காபியுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், அதில் உள்ள வைட்டமின் சி உடலினுள் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. மேலும் இது செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் திறம்பட எரிக்கப்படும்.
5. ஆப்பிள் சீடர் வினிகர்
வெதுவெதுப்பான ப்ளாக் காபியுடன் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து குடிக்கும் போது, அது செரிமான மேம்படுத்தும், இரத்த சர்க்கரையை சீராக்கும் மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும். அதுவும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, எடை இழப்பிற்கு உறுதுணையாக உள்ளது. இருப்பினும் இதை அளவாக குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அசிடிட்டி பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
