Latest Updates
-
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க
கஷ்டப்படாம தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இத 1 டம்ளர் குடிங்க போதும்...
Weight Loss Drinks In Tamil: உலகில் தொப்பையால் ஏராளமானோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமே கொழுப்புகள் தான். அதுவும் ஒருவருக்கு தொப்பை வந்துவிட்டால், அதைக் குறைப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. அதற்காக தொப்பையை குறைக்க முயற்சிக்காமல் இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அதுவே பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.
நீங்கள் அதிகம் சிரமப்படாமல் தொப்பையைக் குறைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இரவு தூங்கும் முன் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஒருசில பானங்களை குடித்து வாருங்கள். கொழுப்பைக் கரைக்கும் பொருட்கள் நிரம்பிய பானங்களைக் குடிக்கும் போது, தொப்பை குறைவதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். இப்போது தொப்பை குறைய இரவு நேரத்தில் குடிக்க வேண்டிய பானங்கள் என்னவென்பதைக் காண்போம்.

1. எலுமிச்சை நீர்
பொதுவாக எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் தான் தொப்பை குறைவதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் இந்த எலுமிச்சை நீரை இரவு தூங்கும் முன் குடிப்பதனாலும் தொப்பை திறம்பட குறையும். ஏனெனில் எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகின்றன. மேலும் இதில் உள்ள அசிடிட்டி கல்லீரலை நச்சுநீக்கம் செய்ய உதவுகிறது. அதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும்.
2. ஆப்பிள் சீடர் வினிகர்
தற்போது மக்களிடையே ஆப்பிள் சீடர் வினிகர் அதன் ஆரோக்கிய நன்மைகளால் பிரபலமாக உள்ளது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க இது பெரிதும் உதவி புரிகிறது. அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, இரவு தூங்கும் முன் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதோடு, கண்ட உணவுகளின் மீதான நாட்டமும் குறையும். அதுவும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவுகிறது. ஆனால் அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை சரியான அளவில் நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
3. மஞ்சள் பால்
மஞ்சள் பால் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பால் மட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. அதுவும் மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இது மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. எனவே தொப்பை குறைய நினைப்பவர்கள் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் மஞ்சள் பாலை குடித்து வாருங்கள்.
4. இளநீர்
இளநீர் ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் பானம் மட்டுமின்றி, உடலின் மெட்டபாலிசத்தை பராமரிக்கவும் உதவுகிறது. முக்கியமாக இளநீரில் கலோரிகள் குறைவு மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் என்பதால், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த இளநீரை காலையில் மட்டுமின்றி, இரவு தூங்கும் முன் குடித்தாலும், தொப்பையைக் குறைக்கலாம்.
5. இஞ்சி டீ
இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் இஞ்சி டீ குடித்தால், செரிமான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். ஒருவரது செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்தால், உடலில் கொழுப்புக்கள் தேங்குவது தடுக்கப்பட்டு, தொப்பை வருவது தடுக்கப்படும். கூடுதலாக இஞ்சியில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது மற்றும் தூங்கும் போது கொழுப்புக்களை திறம்பட எரிக்கிறது. இப்படிப்பட்ட இஞ்சி டீயை தினமும் இரவு தூங்கும் முன் குடித்து வர, தொப்பையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications