Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதய நோய் வராமல் தடுக்க... இந்த 'ஒரு' காயை சாப்பிட்டா போதுமாம்..!
Benefits Of Edamame In Tamil: நம் உடல் ஆரோக்கியத்தில் உணவுகள் முக்கிய பங்குகின்றன. சில காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. அவற்றை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் பெறலாம்.
சமீப காலங்களில் பிரபலமடைந்த வரும் பச்சை சோயாபீன்ஸ் காய்களான எடமேமை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதை மீண்டும் மீண்டும் சாப்பிட ஆர்வமாக இருக்கிறீர்களா? ஆம். எனில், எடமாமின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சாப்பிடுவது என்பதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் எடமேமையும் விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது உங்கள் நாவின் மொட்டுகளுக்கு சுவையை சேர்ப்பதோடு, அதன் ஊட்டச்சத்து மதிப்புகளின் காரணமாக ஆரோக்கியத்திற்கு நன்மைகளையும் வழங்குகிறது. எடமேம் அளவில் மட்டுமே சிறியது. இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
எடமேம் என்றால் என்ன?
முதிர்ச்சியடையாத சோயாபீன்ஸ்கள் எடாமேம் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை சில சமயங்களில் காய்கறி வகை சோயாபீன்ஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றன. சோயாபீன்ஸ் ஒரு பல்துறை உணவுப் பயிராகும், இது சோயா தயாரிப்புகளான டோஃபு, சோயாபீன் எண்ணெய், சோயா சாஸ், மிசோ மற்றும் டெம்பே ஆகியவற்றில் உருவாக்கப்படலாம். இது எடமேம் அல்லது பச்சை சோயாபீன்ஸ் வடிவத்திலும் உட்கொள்ளலாம்.
எடமேமின் ஊட்டச்சத்து விவரங்கள்
எடமேம் ஒரு முழுமையான புரதமாக கருதப்படுகிறது. இது தசை பராமரிப்புக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. வெறும் 100 கிராம் எடமேமில் சுமார் 9.4 கிராம் புரதம் மற்றும் 129 கிலோ கலோரி உள்ளது.
இது வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களின் மதிப்புமிக்க ஆதாரமாகும். கூடுதலாக, இதில் ஆரோக்கியமான நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது.
எடமேம் ஒரு பயனுள்ள தாவர புரதம்
புரதம் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கியமான கட்டுமானப் பொருள். அசைவ உணவு உண்பவர்களுக்கு நல்ல தரமான புரதத்தைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தாலும், சைவ உணவு உண்பவர்களுக்கு அது மிகவும் கடினம். ஏனெனில், பல தாவர உணவுகளில் ஒப்பீட்டளவில் குறைந்த புரத உள்ளடக்கம் மட்டுமே உள்ளது.
ஆனால், உங்கள் உணவில் எடமேமை சேர்ப்பது இந்த சிக்கலை தீர்க்கும். ஏனெனில் இந்த தாவர புரதம் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களுடன் நிரம்பியுள்ளது. இது சைவ உணவு உண்பர்வர்களுக்கு தேவையான புரதத்தை வழங்குகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
ஆய்வுகளின்படி, எடமேம் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சோயாபீன்ஸ் புரதத்தின் பண்புகள் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். பெரும்பாலும் தாவர அடிப்படையிலான கொழுப்புகள் நிறைவுறாதவை, அதேசமயம் விலங்கு கொழுப்புகள் நிறைவுற்றதாக இருக்கும்.
அதிக நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வது இதய நோய் மற்றும் பிற இருதய பிரச்சனைகளுக்கு பங்களிக்கும். எனவே, விலங்கு புரதத்துடன் ஒப்பிடும்போது, எடமேமில் நிறைந்திருக்கும் புரதம் ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான மாற்றாக இருக்கும்.
எடையை குறைக்க உதவும்
உங்கள் உணவில் நல்ல எடை இழப்புக்கு உதவும் பொருளை சேர்த்துக்கொள்ள விரும்பினால், எடமேமை சேர்த்துக்கொள்ளுங்கள். இதை சிற்றுண்டியாகவும் கூட சாப்பிடலாம். எடமேம் எடை இழப்புக்கு ஒரு நல்ல தேர்வாகும். இது அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது, கூடுதல் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மெனோபாஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவும்
எடமேமின் நுகர்வு சூடான ஃப்ளாஷ்கள், சோர்வு, எரிச்சல் மற்றும் இரவில் வியர்த்தல் உள்ளிட்ட மாதவிடாய் நிற்கும் அறிகுறிகளைக் குறைப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது. ஐசோஃப்ளேவோன்கள் என்றும் அழைக்கப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களின் இயற்கையான அளவுகள் இதற்குக் காரணம்.
ஆஸ்டியோபோரோசிஸை நிர்வகிக்க உதவும்
இந்த சோயாபீன்ஸ் ஐசோஃப்ளேவோன்கள் எலும்பு இழப்பை மெதுவாக்கலாம் மற்றும் எலும்பு வலிமையை மேம்படுத்த உதவுகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸின் மிகவும் புலப்படும் அறிகுறிகளைக் குறைக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சருமத்திற்கான எடமேமின் நன்மைகள் பரவலாக அறியப்படுகின்றன. எடமேமில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் தோலில் உள்ள கொலாஜனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இது மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற பொதுவான தோல் வயதான அறிகுறிகளில் குறைவதற்கு வழிவகுக்கிறது. இருப்பினும், இதுகுறித்து விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
நீரிழிவு மேலாண்மை
கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த சிறிய பீன்ஸ் சிறந்த தேர்வாக இருக்கும். எடமேமின் நுகர்வு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்று கூறப்படுகிறது. ஆதலால், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் எடமேமை சேர்த்துக்கொள்ளலாம்.
புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து குறைக்கப்பட்டது
சோயா தயாரிப்புகள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. மேலும், இந்த சோயா பீன்ஸ், ஆண்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆரோக்கியமான கர்ப்பத்தை ஆதரிக்கவும்
ஆரோக்கியமான கர்ப்பத்தின் முக்கிய அம்சம் உணவுமுறை. எடமேம் ஃபோலேட், இரும்பு மற்றும் தாவர அடிப்படையிலான புரதத்தின் வளமான ஆதாரமாக இருப்பதால், கர்ப்ப காலத்தில் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், இது ஒரு மதிப்புமிக்க உணவாக அமைகிறது.
எடமேம் ஒரு சிறந்த ஹீம் அல்லாத இரும்பு மூலமாகும். இது இரத்த சோகையை தடுக்க உதவும். பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இரத்த சோகை இருப்பதால், இந்த பச்சை சோயாபீன்களை உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கிறது
எடமேமில் உள்ள ஃபோலேட் உள்ளடக்கம், ஹோமோசைஸ்டீன் எனப்படும் ஒரு பொருளை உடலில் உருவாக்குவதைத் தடுப்பதன் மூலம் மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்கிறது. அதிகளவு ஹோமோசைஸ்டீன் இரத்தம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மூளையை அடைவதைத் தடுக்கலாம். மேலும் அவை செரோடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியில் தலையிடக்கூடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
