Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Curry Leaves With Hot Water Benefits In Tamil: இந்திய சமையல் அனைத்திலும் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. குழம்பு, குருமா, பொரியல், சட்னி, சாம்பார் என அனைத்திலும் சுவைக்காகவும், மணத்திற்காகவும், அழகுக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை நிறைய பேர் தூக்கி எறிவார்கள்.
ஆனால் கறிவேப்பிலையில் நாம் நினைத்திராத அளவில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. கறிவேப்பிலை சாப்பிட்டால் தலைமுடி நன்கு கருகருவென்று வளரும் என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் உட்கொண்டு வந்தால், அதனால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் பிற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே உடலின் பல்வேறு உறுப்புக்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை.
இப்படிப்பட்ட கறிவேப்பிலையை தினமும் காலையில் ஒரு 5 இலைகளை சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்து வந்தால், உடலில் பலவிதமான அதிசயங்கள் நடைபெறும். இப்போது தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
1. ஆக்ஸிஜனேற்ற சேதத்தை தடுக்கும்
கறிவேப்பிலையில் உள்ள தாவர கலவைகள் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாகும். தினமும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அது ஆக்ஸிஜனேற்ற சேதத்தை தடுக்கும். இதன் விளைவாக இதயம், நரம்பு மண்டலம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும்.
2. புற்றுநோய் அபாயம் குறையும்
தினமும் கறிவேப்பிலை உட்கொண்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்து வந்தால், அது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்பது தெரியுமா? ஆம், கறிவேப்பிலையில் உள்ள ப்ளேவோனாய்டுகள் ஒரு புற்றுநோய் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. இது உடலினுள் வளரும் புற்றுநோய் எதிர்ப்பு செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
3. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் தினமும் கறிவேப்பிலையை சாப்பிட்டு சுடுநீரைக் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பது ஆய்வுகளிலும் தெரிய வந்துள்ளன. இதற்கு கறிவேப்பிலையில் உள்ள நார்ச்சத்து தான் காரணம். நார்ச்சத்தானது செரிமானத்தை மெதுவாக்குவதோடு, இரத்த சர்க்கரை அளவு சட்டென அதிகரிப்பதைத் தடுக்கிறது. முக்கியமாக கறிவேப்பிலை இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
4. மலச்சிக்கல் நீங்கும்
கறிவேப்பிலையில் மலமிளக்கும் பண்புகள் உள்ளன. எனவே கறிவேப்பிலையை தினமும் காலையில் உட்கொண்டு சுடுநீர் குடிக்கும் போது மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படுவதோடு, பிற செரிமான பிரச்சனைகளும் தடுக்கப்படும். கூடுதலாக கறிவேப்பிலையில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டுகள் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
5. மசக்கையை தடுக்கும்
மசக்கையால் அவதிப்படும் கர்ப்பிணிப் பெண்கள் கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து விடுபடலாம். ஒருவேளை மசக்கை அதிகமாக இருந்தால், 5 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடிக்க, மசக்கை மற்றும் குமட்டல் தடுக்கப்படும்.
6. மூளைக்கு நல்லது
தினமும் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள குறிப்பிட்ட பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் உற்பத்தியை அதிகரித்து, மூளையைப் பாதுகாக்கும். சொல்லப்போனால் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால், அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோயைத் தடுக்கலாம். மேலும் கறிவேப்பிலையில் உள்ள பண்புகள், நியூரான்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
7. இரும்புச்சத்து அதிகரிக்கும்
கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு, சுடுநீர் குடித்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
8. கண் புரையைத் தடுக்கும்
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன. கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ மிகவும் இன்றியமையாதது. எனவே தினமும் கறிவேப்பிலையை காலை வேளையில் உட்கொண்டு வந்தால், அது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கண் புரை ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும்.
9. வாய் ஆரோக்கியம்
கறிவேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகமாக உள்ளன. ஒருவர் தினமும் காலையில் கறிவேப்பிலையை வாயில் போட்டு நன்கு மென்று, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடிப்பதன் மூலம், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாயில் உள்ள தொற்றுகள் நீங்கி, வாயின் ஆரோக்கியம் மேம்படும்.
10. கொலஸ்ட்ரால் குறையும்
கறிவேப்பிலையில் உள்ள அல்கலாய்டுகள் கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிக்க உதவுகின்றன. உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அந்த கொலஸ்ட்ராலைக் குறைக்க தினமும் காலையில் கறிவேப்பிலையை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீரை குடித்து வாருங்கள். இதனால் கொலஸ்ட்ரால் குறைவதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications