Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்குறீங்களா? அப்ப உடம்புல அழுக்கு அதிகமா தேங்கியிருக்குன்னு அர்த்தம்..
Symptoms Of Toxins In The Body: நீங்கள் சமீப காலமாக ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது எதனால் என்பதை உடனே கவனித்து, அதற்கான காரணத்தை அறிந்து, உடனே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். நமது உடல் சுத்தமாக இருந்தால், உடல் ஆரோக்கியத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது.
ஆனால் தற்போதைய உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மற்றும் நாம் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்திலும் நச்சுக்கள் உள்ளன. என்ன தான் நமது உடலில் நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறைகள் இருந்தாலும், நச்சுக்கள் அதிகமாக சேரும் போது, அது இந்த செயல்முறைகளை மழுங்கடித்து, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை வரத் தூண்டும்.

சரி, உடலில் நச்சுக்கள் அளவுக்கு அதிகமாக இருந்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று நீங்கள் கேட்கலாம். கீழே உடம்பில் அழுக்குகள் அதிகமாக இருந்தால் உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை அதிகம் சந்தித்தால், உடனே உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.
1. மிகுந்த உடல் சோர்வு
நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் மிகுந்த உடல் சோர்வை தினமும் சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம். இந்த சூழ்நிலையில் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்க காபி, டீ போன்றவற்றைக் குடிக்காதீர்கள். இல்லாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். சில சமயங்களில் ஹார்மோன் மாற்றங்களினாலும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கலாம்.
2. உடல் எடை அதிகரிப்பு
நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும், உங்களால் உடல் எடையை சற்றும் குறைக்க முடியவில்லையா? அப்படியானால் உடல் எடையைக் குறைக்க எது தடையாக உள்ளது என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்ட. தவறான உணவுப் பழக்கம், தவறான உணவுகள் போன்றவற்றால் உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கும். இப்படி உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கியிருந்தால், எவ்வளவு முயற்சித்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியாது.
3. மலச்சிக்கல்
ஒருவர் தினமும் தங்கள் உடலில் இருந்து நச்சுக்கள்/கழிவுகளை வெளியேற்ற வேண்டியது முக்கியம். அதற்கு குடலியக்கம் சீராக இருக்க வேண்டும். குடலியக்கம் மோசமாக இருந்தால், உடலில் நச்சுக்கள் அப்படியே தேங்கி, அந்த நச்சுக்கள் இரத்தத்தில் மீண்டும் கலந்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீரழித்துவிடும்.
4. வாய் துர்நாற்றம்
உங்கள் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் உள்ளதா? அதுவும் நீங்கள் பேசும் போது அந்த வாய் துர்நாற்றம் மற்றவர்களின் முகத்தை சுளிக்க வைக்கிறதா? அப்படியானால் உங்கள் வாயில் நச்சுக்கள் மற்றும் துர்நாற்றத்தை உண்டாக்கும்பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என்று அர்த்தம். எப்போது கல்லீரல் மற்றும் குடல் நச்சுக்களை சரியாக வெளியேற்றவில்லையோ, அப்போது இந்த வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
5. தசைப் பிடிப்பு மற்றும் மூட்டு வலி
தற்போது நிறைய பேர் சந்திக்கும் ஒரு ஆரோக்கிய பிரச்சனை தான் மூட்டு வலி, தசைப் பிடிப்புகள். இந்த பிரச்சனைகளானது ஒருவரது தினசரி செயல்பாடுகளை கடினமாக்கும். ஆனால் இந்த பிரச்சனையை ஒருவர் தினமும், அதுவும் காரணமின்றி திடீரென்று சந்தித்தால், உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
6. முகப்பரு மற்றும் சரும அரிப்புகள்
உடலில் நச்சுக்கள் அதிகம் இருந்தால் வெளிப்படும் மற்றொரு அறிகுறி தான் முகப்பரு மற்றும் சருமத்தில் அரிப்புக்கள். அதுவும் இந்த பருக்கள் முகத்தில் அதிகமாக வரும், கண்கள் வீங்கும் மற்றும் சருமத்தில் தடிப்புகளுடன் அரிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
7. அடிக்கடி நோய்வாய்ப்படுவது
நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறீர்களா? அப்படியானால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். நோயெதிர்ப்பு மண்டலம் பல்வேறு காரணங்களால் பலவீனமடையக்கூடும். அதில் ஒன்று அதிகப்படியான நச்சு. உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கியிருந்தால், அதன் விளைவாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் எளிதில் உடலைத் தாக்கி, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை வரவழைக்கும்.
8. தூங்குவதில் சிரமம்
உடலில் நச்சுக்கள் அதிகமாக தேங்கியிருந்தால் சந்திக்கும் மற்றொரு அறிகுறி உங்களால் இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும். ஆம், இரவு நேரத்தில் ஒருவர் தூங்க முடியாமல் போக, உடலில் நச்சுக்கள் அதிகமாக இருப்பதும் ஒரு காரணம். எப்படியெனில் நச்சுக்கக் அதிகமாக இருக்கும் போது, அது உடலின் சர்க்காடியன் தாளத்தை பாதித்து, தூங்குவதில் சிரமத்தை உண்டாக்குகின்றன.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள். உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்காமல் இருக்க மிகச்சிறந்த எளிய வழி நீரை அதிகம் குடிப்பது தான். இது தவிர மூலிகை பானங்களை குடிப்பது, யோகா செய்வது, நாக்குகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, நற்பதமான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை உண்பது ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications