Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தொடர்ச்சியாக இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல வைட்டமின் கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்..
Mineral And Vitamin Deficiency Signs In Tamil: நீங்கள் மிகவும் பலவீனமாக உணர்கிறீர்களா? அடிக்கடி ஏதாவது நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறீர்களா? அப்படியானால் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். நமது உடலியக்கம் சீராக இருக்க வேண்டுமானால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.
இப்படி சத்துக்கள் கிடைக்காமல் இருந்தால், அதன் விளைவாக பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்தித்தால், அதுவும் தினசரி செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாத அளவில் சிரமங்களை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இப்போது உடலில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை குறைவாக இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.

1. அடிக்கடி நோய்வாய்ப்படுவது
நமது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால் தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். நேயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் போன்றவை சிறப்பான அளவில் இருக்க வேண்டும். இந்த சத்துக்கள் உடலில் குறைவாக இருந்தால், நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைந்து, அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். இப்படிப்பட்ட வைட்டமின் சி ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்களிலும், வைட்டமின் ஈ பாதாமிலும், ஜிங்க் ராஜ்மாவிலும் அதிகம் நிறைந்துள்ளன.
2. பலவீனம்
உடலில் ஆற்றலை உற்பத்தி செய்யவும், அதை திறம்பட பயன்படுத்தவும் பல்வேறு வைட்டமின்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த வைட்டமின்கள் குறைவாக இருந்தால், உடல் செல்களால் சரியாக செயல்படாமல், அதன் விளைவாக உடல் சோர்வு மற்றும் பலவீனம் போன்றவற்றை சந்திக்க வைக்கும். அதுவும் உடலுக்கு வேண்டிய ஆற்றலை உற்பத்தி செய்வதிலும், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும், ஆற்றல் அளவைப் பராமரிக்கவும் பி வைட்டமின்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த பி வைட்டமின்கள் பால், தயிர் போன்றவற்றில் அதிகம் உள்ளன.
3. பலவீனமான எலும்புகள்
கனிமச்சத்துக்கள் உடலில் குறைவாக இருந்தால், அது எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதித்து, எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். ஒருவரது எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான், சிரமமின்றி நடக்கவோ, தினசரி செயல்பாடுகளை செய்யவோ முடியும். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கால்சியம், வைட்டமின் டி போன்றவை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இச்சத்துக்கள் பால் பொருட்களான, பால், தயிர், வால்நட்ஸ் போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளன.
4. தசை வலி மற்றும் பலவீனம்
தசைகள் பலவீனமாகவோ அல்லது தசைகளில் அடிக்கடி வலியை சந்தித்தாலோ, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை குறைவாக இருந்தால், அது தசைகளின் செயல்பாட்டை பாதிக்கும். எனவே தசை வலி, தசை பலவீனம் போன்றவற்றை சரிசெய்ய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
5. சருமம், நகம் மற்றும் முடி பிரச்சனைகள்
தலைமுடி அதிகம் உதிர்ந்தாலோ, நகங்கள் எளிதில் உடைந்தாலோ அல்லது சரும பிரச்சனைகளை அதிகம் சந்தித்தாலோ, உடலில் பயோடிக் குறைபாடு உள்ளது என்று அர்த்தம். இப்படியான பிரச்சனைகளை சந்திப்பவர்கள் பயோடின், ஃபோலிக் அமிலம் நிறைந்த பிஸ்தா, வால்நட்ஸ், பாதாம், முந்திரி, முட்டைக்கோஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: Freepik
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications