Latest Updates
-
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
சர்க்கரை நோய் கல்லீரலை மோசமாக பாதித்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
Liver Damage Symptoms In Tamil: சர்க்கரை நோய் என்பது இரத்த சர்க்கரை அளவு வரம்பிற்கு அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை முழுமையாக குணப்படுத்த முடியாது. அதே சமயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்து வர வேண்டும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல் இருந்தால், அது உடலின் பிற உறுப்புக்களில் மிகவும் மோசமான அளவில் சேதத்தை ஏற்படுத்திவிடும். முக்கியமாக கல்லீரலில் நினைத்து பார்க்க முடியாமல் அளவில் பாதிப்பை ஏற்படுத்தி, சில சமயங்களில் உயிரைப் பறிக்கும் அபாயமும் உள்ளது. எனவே தான் சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது கண்காணித்து கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இப்போது உயர் இரத்த சர்க்கரை கல்லீரலை சேதப்படுத்த தொடங்கிவிட்டால், எந்த மாதிரியான அறிகுறிகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து காண்போம். உங்களுக்கும் இப்படியான அறிகுறிகள் தெரிந்தால், நிலைமை மோசமாவதற்குள் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
அடர் நிற சிறுநீர்
பொதுவாக கல்லீரலில் சேதம் ஏற்பட்டால் முதலில் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். அதுவும் சர்க்கரை நோயாளிகளின் கல்லீரலில் சேதம் ஏற்பட்டிருந்தால், அந்நோயாளி அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீரைக் கழிக்க நேரிடும். ஏனெனில் கல்லீரல் சேதமடைந்திருந்தால், இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் கல்லீரலால் அகற்ற முடியாமல் அதிகரிக்கும். இதன் விளைவாக அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீரை கழிக்கக்கூடும்.
அடிவயிற்று வலி
சர்க்கரை நோயாளிகள் அடிவயிற்றுப் பகுதியில் திடீரென்று தாங்க முடியாத வலியை சந்தித்தால், அது கல்லீரல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். அதோடு இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது என்பதையும் இது குறிக்கிறது. இந்த வகையான அடிவயிற்று வலி கல்லீரலில் வீக்கம், அழற்சி அல்லது வடு போன்றவற்றால் ஏற்படலாம்.
மஞ்சள் நிற கண்கள்
பொதுவாக மஞ்சள் நிற கண்கள் மஞ்சள் காமாலையைக் குறிக்கும். அதுவும் சர்க்கரை நோயாளிகளின் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், கல்லீரல் பெரிய ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம். இப்படி ஏற்பட காரணம் பிலிரூபின் என்னும் கழிவுப்பொருள் கல்லீரலால் அகற்றப்படாமல், இரத்தத்தில் அதிகம் தேங்கியிருப்பது தான். எனவே இம்மாதிரியான அறிகுறியை சாதாரணமாக எடுத்துவிடாதீர்கள்.
மிகுந்த உடல் சோர்வு
சர்க்கரை நோயாளிகளின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் மற்றொரு அறிகுறி மிகுந்த உடல் சோர்வு அல்லது களைப்பு. எப்போது ஒருவரது கல்லீரல் சரியாக செயல்படாமல் போகிறதோ, அப்போது உடலின் வழக்கமான செயல்பாடுகளை செய்ய முடியாமல் எப்போதும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கக்கூடும். இப்படி எதனால் ஏற்படுகிறது என்று கேட்டால், சர்க்கரை நோயால் கல்லீரல் சேதமடையும் போது, அது இன்சுலின் செயலாக்கத்தை கடினமாக்குகிறது. மேலும் இது இரத்தத்தில் க்ளுக்கோஸ் அளவை அதிகரித்து, உடல் சோர்வை ஏற்படுத்தும்.
வெளிரிய நிறத்தில் மலம்
பொதுவாக கழிக்கும் மலத்தின் நிறத்தில் திரென்று மாற்றம் ஏற்பட்டால், கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்று அர்த்தம். அதுவும் சர்க்கரை நோயால் கல்லீரல் சேதமடைந்திருந்தால், மலத்தின் நிறமானது வழக்கத்தை விட மிகவும் வெளிரிய நிறத்தில் இருக்கும். இம்மாதிரியான அறிகுறியை அனுபவித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications