Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
30 வயசாகிடுச்சா? அப்ப இந்த இரத்த பரிசோதனைகளை 6 மாசத்துக்கு ஒருமுறை கட்டாயம் எடுத்து பாருங்க..
Important Blood Tests After 30: உடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்த உதவும் ஒரு வழி தான் இரத்த பரிசோதனை. ஒரு இரத்த பரிசோதனையில் பலவிதமான பிரச்சனைகளை கண்டறிய முடிவது மட்டுமின்றி, இரத்தத்தில் உள்ள புரோட்டீன்கள், செல்கள் மற்றும் கெமிக்கல்கள் போன்றவற்றின் நடத்தையையும் பகுப்பாய்ப்பு செய்யவும் முடியும்.
பொதுவாக வயது அதிகரிக்கும் போது நமது உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும் மற்றும் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதற்கான அபாயமும் அதிகம் உள்ளன. எனவே நமது உடல் ஆரோக்கியத்தை நாம் கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியம். குறிப்பாக 30 வயதை எட்டிவிட்டால், வழக்கமான இரத்த பரிசோதனைகளை செய்ய வேண்டியது அவசியம். இப்படி செய்வதன் மூலம் பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.

இப்போது 30 வயதை எட்டியவர்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய இரத்த பரிசோதனைகளை எவையென்பதைக் காண்போம். இந்த பரிசோதனைகளை 6 மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் மேற்கொள்ளும் போது, பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆரம்ப காலத்திலேயே முறையாக சிகிச்சைகளை மேற்கொண்டு, தடுக்க முடியும்.
1. கொலஸ்ட்ரால் சோதனை
கொலஸ்ட்ரால் சோதனையை லிப்பிட் சோதனை என்று அழைப்பர். இந்த சோதனையில் இரத்தத்தில் உள்ள கொலழுப்பு மற்றும் ட்ரை கிளிசரைடுகளின் அளவு அளவிடப்படுகிறது. உலகளவில் இதயநோயால் நிறைய பேர் இறப்பதற்கு உயர் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் தான் காரணம். எனவே 30 வயதை எட்டிய பின் கொலஸ்ட்ரலைக் கட்டுப்பாட்டில் பராமரிக்க வேண்டும். அதற்கு உடலில் கொலஸ்ட்ரால் அளளை அறிய கொலஸ்ட்ரால் பரிசோதனையை 6 மாதத்தற்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
2. தைராய்டு பரிசோதனை
தைராய்டு பரிசோதனையில் இரத்தத்தில் உள்ள தைராய்டு தூண்டுதல் ஹார்மோன் (TSH) மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் (T3 மற்றும் T4) அளவு அளவிடப்படுகிறது. தைராய்டு ஹார்மோன்களின் அளவு பாதிக்கப்பட்டால், அதன் விளைவாக மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக உடல் பருமன், உடல் சோர்வு மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த தைராய்டு சோதனையை 30 வயதை எட்டியவர்கள் கட்டாயம் செய்து பார்க்க வேண்டும்.
3. முழு இரத்த எண்ணிக்கை (CBC) சோதனை
இந்த முழுமையான இரத்த எண்ணிக்கை சோதனையில் இரத்தத்தில் உள்ள பல்வேறு செல்களின் அளவுகள் அளவிடப்படுகின்றன. அதாவது இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் ப்ளேட்லெட்டுகள் போன்றவை அளவிடப்படுகின்றன. இந்த சோதனையின் மூலம் இரத்த சோகை, தொற்றுகள் மற்றும் பிற இரத்த பிரச்சனைகளை கண்டறிய முடியும். எனவே உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் இரத்தம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த வகை இரத்த பரிசோதனையை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
4. இரத்த க்ளுக்கோஸ் சோதனை
இரத்த க்ளுக்கோஸ் சோதனையின் மூலம் இரத்தத்தில் உள்ள க்ளுக்கோஸ், அதாவது சர்க்கரையின் அளவு அளவிடப்படுகிறது. உயர் இரத்த சர்க்கரை அளவானது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வரும் ஒரு நாள்பட்ட நிலை ஆகும். இந்த க்ளுக்கோஸ் பரிசோதனையை 30 வயதை எட்டிய ஒவ்வொருவரும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வயதிற்கு மேல் தான் சர்க்கரை நோய் வரும் ஆபத்து அதிகம் உள்ளது.
5. வைட்டமின் டி சோதனை
வைட்டமின் டி சோதனையில் இரத்தத்தில் எவ்வளவு வைட்டமின் டி உள்ளது என்பது அளவிடப்படுகிறது. ஒருவரது எலும்புகள், பற்கள், தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வைட்டமின் டி இன்றியமையாதது. இந்த வைட்டமின் குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதுவும் இந்த பரிசோதனையை 30 வயதிற்கு மேலானவர்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வயதிற்கு மேல் வைட்டமின் டியை உற்பத்தி செய்யும் திறன் குறைகிறது. எனவே இந்த பரிசோதனையையும் தவறாமல் மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











