Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
பப்பாளியை வெறும் வயித்துல சாப்பிடாதீங்க.. இல்ல இந்த மோசமான பிரச்சனைகளை சந்திப்பீங்க...
Papaya Side Effects In Tamil: உடல் ஆரோக்கியத்திற்காக நாம் பலவிதமான ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொண்டு வருவோம். அதில் ஒன்று தான் காலையில் பப்பாளியை உட்கொள்வது. பப்பாளி ஆண்டு முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய அற்புதமான பழமாக இருப்பதால், நிறைய பேர் பப்பாளியை தங்களின் அன்றாட உணவில் சேர்த்து வருவார்கள்.
என்ன தான் பப்பாளி ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், அந்த பப்பாளியை அளவாக சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதுவும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதன் விளைவாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். பப்பாளியில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாகவும் இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போருக்கு அற்புதமான பழம்.

ஆனால் பப்பாளி அனைவருக்குமே ஏற்ற பழமல்ல. சிலருக்கு பப்பாளியை ஒருசில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இப்போது சத்துக்களை அதிகம் கொண்ட பப்பாளியை வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
1. சுவாச அலர்ஜி
நீங்கள் தினமும் காலையில் நன்கு கனிந்த பப்பாளியை சாப்பிடுபவரானால், அதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதி ஒரு சக்தி வாய்ந்த அலர்ஜி பொருளாகும். எனவே ஏற்கனவே சுவாச பிரச்சனையைக் கொண்டவர்கள் பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம் போன்ற பிரச்சனைகளை வரத் தூண்டும்.
2. சிறுநீரக கல்
ஒரு சிறிய பப்பாளி பழத்தில் 96 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளன. எனவே இந்த பப்பாளியை வெறும் வயிற்றில் அதிகமாக உட்கொள்ளும் போது, அது சிறுநீரகங்களில் கற்களை உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே கவனமாக இருங்கள்.
3. வயிற்று உப்புசம்
பொதுவாக அளவுக்கு அதிகமாக பப்பாளியை உட்கொள்வது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். அதுவும் பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்தே உண்ண வேண்டும். இல்லாவிட்டால் அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை பாதித்து, வயிற்று உப்புசம், வயிற்று பிடிப்புகள் மற்றும் வயிற்று எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
4. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நல்லதல்ல
பப்பாளி பழத்தில் உள்ள நொதிப் பொருட்கள் குழந்தைகளுக்கு நல்லதல்ல. அது பலவிதமான பிரச்சனைகளை வரவழைக்கும். ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பப்பாளி சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே உட்கொள்ள வேண்டும்.
5. இரத்தத்தை மெலிதாக்கும் விளைவுகள்
பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் இரத்தத்தை மெலிதாக்கும் விளைவுகளை அதிகரிக்க வல்லது. எனவே ஏற்கனவே இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொண்டு வருபவர்கள், பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
6. சரும அரிப்பு
பப்பாளி சாப்பிட்டால் சருமம் பொலிவாக இருக்கும். ஆனால் அந்த பப்பாளியை வெறும் வயிற்றில் ஒருவர் அதிகமாக உட்கொள்வதால், அது சருமத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. ஏனெனில் பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அனைத்துவிதமான சருமத்தினருக்கும் பொருத்தமானது அல்ல. இந்த லேடெக்ஸ் சருமத்தில் அரிப்புக்களை ஏற்படுத்தலாம்.
7. இதயத் துடிப்பை மெதுவாக்கும்
ஏற்கனவே மாரடைப்பு வந்த நோயாளிகள் பப்பாளியை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இப்பழத்தில் உள்ள பாப்பைன் என்னும் பொருள் இதயத்துடிப்பைக் குறைக்கும் திறன் கொண்டது. இதன் விளைவாக மாரடைப்பு போன்ற தீவிரமான இதய நோயைத் வரத் தூண்டும்.
8. வயிற்றுப்போக்கை தீவிரமாக்கும்
பப்பாளியில் நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன. எனவே இந்த பழத்தை அளவுக்கு அதிகமாக வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது வயிற்றுப்போக்கை தீவிரமாக்கும். வயிற்றுப்போக்கு தீவிரமானால், அது நீரிழப்பை ஏற்படுத்திவிடும். எனவே கவனமாக இருங்கள்.
9. மலச்சிக்கலை உண்டாக்கும்
பொதுவாக பப்பாளி பழம் மலச்சிக்கலைப் போக்குவதில் பயனுள்ளது. ஆனால் அந்த பப்பாளியை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது மலச்சிக்கலில் இருந்து விடுவிப்பதற்கு பதிலாக, மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே அதிகமாக பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.
10. நச்சுக்கள் அதிகமாகும்
பப்பாளியில் ஆன்டெல்மிண்டிக் ஆல்கலாய்டு கார்பைன் உள்ளது. அதுவும் இதன் இலைகள், விதைகள் மற்றும் சதைப்பகுதிகளில் அதிகமாக உள்ளன. இது வயிற்றில் இருந்து ஒட்டுண்ணிப் புழுக்களை திறம்பட வெளியேற்ற உதவி புரியும். ஆனால் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். எனவே உஷாராக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications