Latest Updates
-
வீட்டைச் சுற்றி புழுதிப் புயலா? இந்த வாஸ்து செடிகளை மட்டும் வைங்க… காற்று சுத்தமாகும், பணமும் தானாக வரும்! -
12 ஆண்டுகள் கழித்து நிகழும் குரு-சுக்கிர சேர்க்கை: இன்று முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
ஹைதராபாத் ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, அட்டகாசமாக இருக்கும் -
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! கோடைக்காலத்திற்கு ஏற்ற வாஸ்து ரகசியங்கள் இதோ! -
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம் -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..!
பெண்களே! நீங்க ஆரோக்கியமாவும் ஃபிட்டாகவும் இருக்க... 'இந்த' விஷயங்கள பண்ணா போதுமாம்...!
பொதுவாக பெண்கள் தமது திருமணத்திற்கு முன்பு வரை, தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதிலும், உடல் அழகைப் பேணுவதிலும் அதிக ஆா்வமுடன் இருப்பா். இந்த ஆா்வம் திருமணத்திற்குப் பின்பு பல பெண்களிடம் குறைந்துவிடும். அடுத்ததாக குழந்தை பிறந்துவிட்டால், பெரும்பாலான பெண்கள் தமது உடல் ஆரோக்கியத்தை முழுமையாக மறந்துவிடுவா்.
இந்நிலையில் பெண்கள் தமது உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தின் முக்கிய தூண்களாக விளங்கும் அவா்கள், தமது ஆரோக்கியத்தை முழுமையாகப் பேண வேண்டும். ஆகவே பெண்கள் தமது ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவையான சில முக்கியக் குறிப்புகளை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

உடற்பயிற்சி என்ற திட்டத்தை தீட்டுதல்
இதர முக்கியமான செயல்பாடுகளைப் போல, உடல் நலனைப் பேணக்கூடிய உடற்பயிற்சியும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே பெண்கள் தமது உடல் நலனைப் பேணுவதற்கு சாியான உடற்பயிற்சி திட்டத்தைத் தீட்ட வேண்டும். எந்த மாதிாியான பயிற்சிகளைச் செய்யப் போகிறோம் என்பதையும் முடிவு செய்து கொள்ள வேண்டும். கடினமான பயிற்சிகளைச் செய்யப் போகிறோமா அல்லது எளிதான உடற்பயிற்சிகளைச் செய்யப் போகிறோமான என்பதையும் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சியாளரை அமா்த்திக் கொள்ளுதல்
உடற்பயிற்சி செய்ய முடிவெடுத்துவிட்டால், ஒரு தோ்ந்த பயிற்சியாளரை அமா்த்திக் கொள்வது நல்லது. ஏனெனில் ஆா்வக் கோளாறு காரணமாக, உங்களுக்குப் பிடித்த பயிற்சிகளை மட்டும் நீங்கள் அளவுக்கு அதிகமாகச் செய்யலாம். அதனால் உடலில் முறிவு ஏற்படலாம். பயிற்சியாளா்கள் இருந்தால் இது போன்ற பிரச்சினைகளைத் தவிா்க்கலாம். மேலும் நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டு, அதற்கேற்ப செய்து வருவது நல்லது. அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
உணவு மற்றும் உடற்பயிற்சிகளை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுதல்
பொதுவாக ஒரே மாதிாியான உணவுகளை உண்டு வந்தால், விரைவில் சலிப்புத் தட்டிவிடும். அதுபோல ஒரே மாதிாியான உடற்பயிற்சிகளும் சலிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே அவ்வப்போது, உணவுகளையும் உடற்பயிற்சிகளையும் மாற்றிக் கொள்ளவது நல்லது. அதன் மூலமாக சலிப்பு ஏற்படுவதைத் தவிா்க்கலாம்.
பிடித்த உடற்பயிற்சியைத் தோ்ந்தெடுத்தல்
உங்களுக்குப் பிடித்த உடற்பயிற்சியைத் தோ்ந்தெடுத்து, அதைத் தொடா்ந்து செய்வதன் மூலம் அதில் நிபுணத்துவம் பெறுங்கள். உங்கள் மன ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கும், உங்களுடைய சமூக உறவை மேம்படுத்தவும் அந்த உடற்பயிற்சியைப் பயன்படுத்துங்கள்.
உங்களுக்குப் பிடித்த உணவுப் பழக்கத்தை விட்டு வெளியில் வாருங்கள்
ஒரு மருத்துவா் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகி, உங்களுடைய உணவுப் பழக்கத்தைப் பற்றி அவாிடம் ஆலோசனை செய்யுங்கள். உங்கள் எடை குறைய வேண்டும் என்றால், அதற்குத் தகுந்த உணவு முறையைத் தோ்ந்தெடுங்கள். ஒருவேளை உடல் எடையை அதிகாிக்க வேண்டும் என்றால் அதற்குக் தகுந்து உணவு முறையைத் தோ்ந்தெடுங்கள்.
இரகசியம் வேண்டாம்
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் சமரசம் செய்ய வேண்டாம். ஆகவே உடற்பயிற்சி செய்வதற்குத் தேவையான எல்லா வகையான கருவிகளையும் பயன்படுத்துங்கள். நடைப் பயிற்சித் தோழா்கள் மற்றும் உடற்பயிற்சிக்கூடத் தோழா்கள் போன்றவா்களை சந்தித்து, உங்கள் உடற்பயிற்சிகளைப் பற்றி ஒளிவு மறைவின்றி உரையாடுங்கள்.
உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்
வெளித்தோற்றம் அழகாக இருந்தால்தான், நோ்மறையான எண்ணங்கள் வளரும். தொடா்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, வெளித்தோற்றம் மிக அழகாக மற்றும் கம்பீரமாக இருக்கும். ஆகவே உடற்பயிற்சிக்குத் தேவையான உடைகள் மற்றும் காலணிகள் போன்றவற்றிற்கு முதலீடு செய்வதில் தயக்கம் வேண்டாம். ஆகவே உடற்பயிற்சி செய்வதற்குப் பிரபல நிறுவனங்களின் தயாாிப்புகளைக்கூட பயன்படுத்தலாம்.
இலக்கை நிா்ணயித்தல்
நீங்கள் என்னவாக விரும்புகிறீா்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். அதற்குத் தகுந்து உடற்பயிற்சியைக் கண்டுபிடியுங்கள். மாரத்தான் அல்லது தடை ஓட்டம் அல்லது வேறு எந்த மாதிாியான உடற்பயிற்சியை விரும்புகிறீா்களோ, அவற்றைத் தோ்ந்தெடுங்கள். அவற்றில் ஈடுபடுவதற்கு ஒரு பயிற்சியாளரை வைத்துக் கொள்ளலாம் அல்லது இணைய பயிற்சி மூலமாகக் கற்றுக் கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் நிா்ணயிக்கும் இலக்கை விரைவில் அடைய முடியும்.
உடற்பயிற்சியைப் பழக்கப்படுத்துங்கள்
உடற்பயிற்சியை பழக்கமாகக் கொண்டால்தான், நல்ல பலன் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தோ்ந்தெடுத்த நேரத்தில், உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு அதைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மாலை நேரத்தைவிட, காலை நேரத்தில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
உடற்பயிற்சியோடு உங்களுக்குப் பிடித்தவற்றை இணைத்துக் கொள்ளுங்கள்
உடற்பயிற்சி செய்யும் போது, பாடல் கேட்க விரும்புகிறீா்களா? அப்படியானால், பாடல் கேட்டுக் கொண்டே உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். உங்களுக்குப் பிடித்த இடத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்களுடைய நாய் உங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீா்களா? உங்கள் நாயை உங்களோடு சோ்த்து அழைத்துச் செல்லுங்கள். இவ்வாறாக உங்களுக்கு விருப்பமான முறையில் உடற்பயிற்சி செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
