Latest Updates
-
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானதும் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி: எதனால் ஒருவருக்கு நெஞ்சு வலி வரும்?
Minister Senthil Balaji: தற்போது தமிழகமே பரபரப்பாக உள்ளது. ஏனெனில் ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை பண மோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்ததையடுத்து, அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அ
தைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களாகவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள அவரது மூன்று வீடுகள் மற்றும் அலுவலகத்தில் அவரது அறையிலும், தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிந்ததும், அவரை கைது செய்வது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கும் போதே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது.
இதைப் பார்க்கும் போது பலருக்கும் திரைப்படத்தில் வரும் காட்சிகள் நினைவிற்கு வரலாம். ஆனால் அந்த நெஞ்சு வலி உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கலாம் அல்லவா? ஏனெனில் நெஞ்சு வலியானது ஒருவருக்கு பல காரணங்களால் வரக்கூடும். இப்போது எவையெல்லாம் ஒருவருக்கு நெஞ்சு வலியை வரத் தூண்டும் என்பதைக் காண்போம்.
நெஞ்சு வலி
நெஞ்சு வலியானது தீவிரமான நோயின் அறிகுறியாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆயினும் அடிக்கடி நெஞ்சு வலியை சந்தித்தால் உடனடி மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஒருவேளை உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நினைத்தால், உடனே மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.
மாரடைப்பினால் ஏற்பட்டுள்ள நெஞ்சு வலி என்றால், அந்த வலியானது கைகள், முதுகு, கழுத்து அல்லது தாடை வரை பரவும். மேலும் மார்பு பகுதி மிகவும் இறுக்கமாகவும், பாரமாகவும் இருக்கும். மூச்சுவிடுவதில் சிரமம், அதிகமாக வியர்க்கும். முக்கியமாக இவை அனைத்து 15 நிமிடங்கள் வரை நீடித்திருக்கும்.
எந்த காரணங்களுக்காக நெஞ்சு வலி வரலாம்?
நெஞ்சு வலியானது பல காரணங்களால் வரலாம். இதய பிரச்சனையால் மட்டும் நெஞ்சு வலி வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுவும் நெஞ்சு வலியை அனுபவிக்கும் போது, அத்துடன் சந்திக்கும் ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அவற்றிற்கு எது காரணமாக இருக்கக்கூடும் என்பதை கணிக்க முடியும்.
* உணவு உண்டதும் நெஞ்சு வலிப்பது, வாய் கசப்புச்சுவையுடன் இருப்பது, வயிற்று உப்புசமாக இருப்பது போன்றவை நெஞ்செரிச்சல் அல்லது அஜீரண கோளாறு காரணமாக இருக்கலாம்.
* நெஞ்சு பகுதியில் காயம் அல்லது மார்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்த பின் நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்ததும் நன்றாக உணர்ந்தால், அவை மார்பு சுளுக்கு காரணமாக இருக்கலாம்.
* அதிகப்படியான பதட்டம் அல்லது பயம் காரணமாகவும் ஒருவருக்கு நெஞ்சு வலி வரலாம். அதுவும் அந்த மாதிரியான நெஞ்சு வலியுடன் வேகமான இதயத் துடிப்பு, அதிகமாக வியர்ப்பது, தலைச்சுற்றல் போன்றவற்றையும் சந்திக்கக்கூடும்.
* மார்பு பகுதியில் தொற்று அல்லது நிமோனியா போன்றவை ஏற்பட்டிருந்தால், அதன் காரணமாக நெஞ்சு வலி, சுவாசிப்பதில் மிகுந்த சிரமம், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சளி வெளியேறுவது, அதிக காய்ச்சல் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
நெஞ்சு வலி மற்றும் இதய பிரச்சனைகள்
பெரும்பாலான இதய பிரச்சனைகள் நெஞ்சு வலியை உண்டாக்கும். அதில் கடுமையான நெஞ்சு வலியை ஏற்படுத்தும் இதய பிரச்சனைகள் பின்வருமாறு:
* பெரிகார்டிடிஸ் - இது வழக்கமாக திடீரென்றும், கூர்மையாகவும், குத்துவது போன்ற வலியையும் ஏற்படுத்தும். முக்கியமாக சுவாசிக்கும் போது அல்லது படுத்திருக்கும் போது, வலி இன்னும் தீவிரமாக இருக்கும்.
* ஆஞ்சினா அல்லது மாரடைப்பு - இவை இரண்டுமே ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். ஆனால் மாரடைப்பானது உயிரையே பறிக்கும் அளவில் ஆபத்தானது.
யாருக்கெல்லாம் இதய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது?
இதய பிரச்சனைகளானது வயது அதிகமானால் அல்லது குறிப்பிட்ட சில பழக்கங்கள் அல்லது பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், அவருக்கு இதய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அவை
* புகைப்பிடிப்பது
* உடல் பருமனாக இருப்பது
* உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உயர் கொலஸ்ட்ரால் போன்றவை இருப்பது
* குடும்பத்தில் யாருக்கேனும் மாரடைப்பு அல்லது ஆஞ்சினா வரலாறு இருந்தால், அவருக்கு இதய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications