Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கொரோனாவை எதிர்க்க உதவும் கபசுர குடிநீரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
கபசுர குடிநீருக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே பலரும் கொரோனாவை எதிர்க்க உதவும் கபசுர குடிநீரை வீட்டிலேயே தயாரித்துக் குடிக்க நினைக்கின்றனர்.
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், அன்றாடம் பலரைத் தாக்கி வருகிறது. கொரோனாவை எதிர்கொள்வதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் பல வழிகாட்டுதல்களை வழங்கியது. கொரோனாவிற்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த தொற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதே ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனாவை எதிர்கொள்ள கபசுர குடிநீரையும், நிலவேம்பு கசாயத்தையும் குடிக்க வலியுறுத்தி வருகிறது. இந்த இரண்டிற்கும் மனிதனின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கி, எப்பேற்பட்ட தொற்றுக்களில் இருந்தும் உடலைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. ஆகவே இந்த கபசுர குடிநீருக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் இதனை வாங்கிப் பருக, நாட்டு மருந்து கடைகளுக்கு சென்று வாங்கி பருகுகின்றனர். சிலர் வீட்டிலேயே தயாரித்துக் குடிக்க நினைக்கின்றனர். ஆனால் எந்த பக்குவத்தில் தயாரிப்பது, வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று தெரியாமல் உள்ளனர்.
ஆகவே இம்ப்காப்ஸ் நிறுவன தலைவர் டாக்டர் கண்ணன் மற்றும் மருத்துவ அதிகாரி டாக்டர் கரு. கார்த்திகேயன் அவர்கள் கபசுர குடிநீரை எவ்வாறு வீட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளனர். இப்போது அதை விரிவாக காண்போம்.

கபசுர குடிநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்:
சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்புக் சமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு), முத்தக்காசு (கோரைக்கிழங்கு) ஆகிய 15 மூலிகைகளை தலா 35 கிராம் எடுத்து, நன்கு சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக இடித்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கபசுர குடிநீர் தயாரிக்கும் முறை:
* ஒரு பாத்திரத்தில் 200 மிலி நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் தயாரித்த சூரணத்தில் இருந்து 5 கிராம் எடுத்து, கொதிக்கும் நீரில் போட வேண்டும்.
* பின்பு நீரானது 50 மிலி அளவு வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த நீரை தினமும் 2 அல்லது 3 வேளை பருகலாம்.

யார் எவ்வளவு குடிக்க வேண்டும்?
கபசுர குடிநீரை 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் 5 மில்லியும், 5 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மில்லியும், 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் 30 முதல் 50 மில்லியும் குடிக்க வேண்டும். குறிப்பாக இந்த கபசுர குடிநீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.

எவ்வளவு காலம் குடிக்க வேண்டும்?
கபசுர குடிநீரை வாரத்திற்கு 3 நாட்கள் குடிக்கலாம். அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிப்பது போதுமானது. குறிப்பாக உங்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், தவறாமல் இந்த பானத்தை குடிக்க வேண்டும்.

யார் குடிக்கக்கூடாது?
கபசுர நீரை நாள்பட்ட உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கும் முன், மருத்துவரிடம் கேட்டு அருந்துவது நல்லது. சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த கபசுர குடிநீரை குடிக்கும் போது மட்டுமே தயாரிக்க வேண்டும். குறிப்பாக தயார் செய்த 3 மணிநேரம் கழித்து குடிக்கக்கூடாது.
கபசுர குடிநீரை 1 வயது குழந்தைகள், டைபாய்டு காய்ச்சல் இருப்பவர்கள், வயிற்றுப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள் குடிக்க வேண்டாம். அதேப் போல் கர்ப்பிணிப் பெண்கள் முதல் மூன்று மாதங்களுக்கு குடிக்கத் தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications
