Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
ஞானப் பல் வலி தாங்க முடியலையா? இதோ அதற்கான சில எளிய தீர்வுகள்!
ஞானப் பல் முளைக்கும் போது ஒருவித அசௌகரியம் மற்றும் சிறு வலி ஏற்படலாம். இந்த வலியைப் போக்க எளிய முறையில் வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம்.
ஒரு மனிதனுக்கு ஞானப் பல் முளைக்கும் போது மனிதனின் அறிவு மேலும் வளர்கிறது என்று பெரியவர்கள் கூறி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். பெரும்பாலும் ஞானப் பல் 17-25 வயதிற்கு இடையில் முளைக்கிறது. இவை கடவாய்ப் பற்கள் என்று அறியப்படுகின்றன. இவற்றால் எந்த ஒரு பயனும் இல்லை. ஞானப் பல் முளைக்கும் போது ஒருவித அசௌகரியம் மற்றும் சிறு வலி ஏற்படலாம். இது மட்டுமில்லாமல் ஈறுகள் வீக்கமடையலாம், சிவந்து போகலாம் அல்லது சில நேரங்களில் புண் ஏற்படலாம்.

ஞானப் பல் வளர போதுமான இடைவெளி இல்லாதபட்சத்தில் பற்களின் வரிசையில் இடையூறு ஏற்பட்டு இந்த பாதிப்புகள் உண்டாகலாம். ஆகவே வாயில் உண்டாகும் இந்த பாதிப்புகளை போக்க எளிய முறையில் வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம். இதனால் பற்களில் தொற்று பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் தடுக்கப்படுகிறது.

ஞானப் பல் முளைக்கும் போது உண்டாகும் வலிக்கான காரணம் என்ன?
ஞானப் பல் முளைக்கும் போது உண்டாகும் ஒரு சிறு வலி குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இதற்கான காரணம் குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதனைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
ஞானப் பல் முளைக்கும் முன் மற்ற எல்லா பற்களும் ஏற்கனவே முளைத்திருக்கும். ஞானப் பல் முளைக்க போதிய இடம் இருக்காது என்பதால் மற்ற பற்களை அழுத்தி தனக்கான இடத்தை பெற முயற்சிக்கும். இதனால் ஈறுகளில் ஒருவித அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக ஈறுகள் மற்றும் பற்கள் ஆகியவற்றில் வலி உண்டாகலாம்.
சில நேரங்களில் வலியுடன் கூட ஒருவித துர்நாற்றம் ஏற்படக்கூடும், சாப்பிடுவதில் சிரமம் மற்றும் தலைவலியும் தோன்றலாம். இந்த வலி குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நீடிக்கலாம். இவ்வளவு நேரம் இந்த வலியைத் தாங்கிக் கொள்வது சற்று கடினமான காரியம். சிலருக்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் விட்டுவிட்டு இந்த வலி தொடரலாம். ஒரு வலி நிவாரணி மாத்திரை பயன்படுத்தி இந்த வலியைக் கட்டுப்படுத்துவதை விட சில எளிய தீர்வுகளை முயற்சித்து இந்த வலியை கட்டுப்படுத்த முடியும். இதனால் பற்களில் உண்டாகும் தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.

ஞானப் பல்லால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவும் எளிய வீட்டுத் தீர்வுகள்:
உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பது
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும். உப்பு மிக அதிகம் இல்லாமல் ஒரு சிட்டிகை மட்டுமே போடவும். அதுவே போதுமானது. உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் ஈறுகள் வீக்கமடைவது குறையும்.

வலி நிவாரணத்திற்கு உதவும் பூண்டு
ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டி-பயாட்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த பூண்டு, ஞானப் பல்லால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவும். வலி இருக்கும் பல் அல்லது ஈறுகளில் பூண்டு எண்ணெய் தடவுவதால் தாங்க முடியாத வலியும் குறையும்.

கிராம்பு எண்ணெய்
ஞானப் பல்லில் தீவிர வலி ஏற்பட்டால் பற்களில் மற்றும் ஈறுகளில் கிராம்பு எண்ணெய் தடவலாம். இதனை பின்பற்றுவதால் வலியில் இருந்து நிவாரணம் பெற முடியும். மேலும் இதனால் வாய் ஆரோக்கியம் மேம்படும். தொற்று பாதிப்பு இருந்தாலும் கிராம்பு பயன்படுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை. அடிப்படையில் கிராம்பு எண்ணெய் பற்களுக்கான சிகிச்சையில் சிறந்த தீர்வளிக்கும்.

குறிப்பு
மேலே கூறிய தீர்வுகள் அனைத்தும் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் நல்ல பலனை தரக் கூடியவையாகும். இந்த தீர்வுகளை முயற்சித்தும் எந்த ஒரு பலனும் இல்லாமல் வலி தொடர்ந்து நீடித்தால் பல் மருத்துவரிடம் செல்வது நல்லது. சில நேரங்களில் ஞானப் பல்லை எடுத்து விட்டால் மட்டுமே தீரக்கூடிய சில சிக்கல்களும் ஏற்படக்கூடும். அதனால் பல் மருத்துவரை அணுகுவது நன்மை தரும்.



Click it and Unblock the Notifications