Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
கொரோனா காலத்தில் ஜிம் மற்றும் யோகா நிலையங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!
பிட்னஸ் பிரியர்களுக்கான நற்செய்தியாக பிட்னஸ் நிறுவனங்கள், யோகா பயிற்சி வகுப்புகள் மற்றும் ஜிம் போன்றவற்றை திறக்க இந்திய அரசு முடிவெடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன.
மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து பெரும்பாலான பிட்னஸ் பிரியர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து பிட்னஸ் பயிற்சி எடுத்து தங்கள் உடல் எடையை பராமரித்து வருகின்றனர். ஜிம்மில் வியர்வை வழிய செய்யும் உடற்பயிற்சிகளை மறந்து பல மாதங்கள் ஆகின்றன. பிட்னஸ் பிரியர்களுக்கான நற்செய்தியாக அன்லாக் 3வது காலகட்டத்தில் பிட்னஸ் நிறுவனங்கள், யோகா பயிற்சி வகுப்புகள் மற்றும் ஜிம் போன்றவற்றை திறக்க இந்திய அரசு முடிவெடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தொடர்ந்து அறிவிப்பு வரும்வரை இந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

ஜிம், யோகா நிறுவனம், பிட்னஸ் நிறுவனம் போன்றவற்றை திறந்திருப்பதால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மூடி வைக்கப்பட்டிருந்த வணிக நிறுவனங்கள் அனைத்தும் மெதுவாக திறக்கப்பட்டாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. பிட்னஸ் நிறுவனங்கள் மறுபடி திறப்பதற்கான வழிகாட்டுதல்களை தற்போது நாம் காணலாம்.

யோகா வகுப்புகள் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் அல்லது திறந்த வெளியில் நடத்த திட்டமிடப்படலாம்
தற்போதைய வழிகாட்டுதலின்படி, யோகா வகுப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை அதனை பயிற்சி செய்ய நினைத்தால் திறந்த வெளியில் பயிற்சி பெற வேண்டும். ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.

அதிக அபாயம் கொண்ட மக்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல்
இந்த வழிகாட்டுதல் படி, 65 வயதிற்கு மேல் உள்ள நபர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயுற்றவர்கள், 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் ஆகியோர் பிட்னஸ் நிறுவனம், ஜிம், யோகா நிறுவனம் போன்ற இடங்களுக்கு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டத்தை தவிர்க்கவும்
ஜிம் அல்லது பிட்னஸ் நிறுவனத்திற்கு உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாயிலில் கூட்டத்தை தவிர்க்க வாடிக்கையாளர்களைக் குழுக்களாக பிரித்து குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தர வேண்டும். ஒவ்வொரு பிரிவிற்கும் இடையில் 15-30 நிமிட இடைவெளி வைத்துக் கொள்வதால் உறுப்பினர்கள் வெளியில் செல்வதற்கும் உள்ளே வருவதற்கும் நேர இடைவெளி கிடைக்கும். இதனால் தனி நபர் இடைவெளி பின்பற்றப்படும்.

மாஸ்க், முகமூடி போன்றவற்றை கட்டாயம் அணிய வேண்டும், உடற்பயிற்சி செய்யும் போது வைசர் அணிந்து கொள்ளலாம்
பிட்னஸ் மையங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் மற்றும் முகமூடி அணிவது கட்டாயம் என்று வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்யும் போது வைசர் அணிந்து கொள்ளலாம். முகக்கவசம் மற்றும் முகமூடி அணிந்து உடற்பயிற்சி செய்வதால் குறிப்பாக N95 வகை மாஸ்க் அணிந்து பயிற்சிகள் மேற்கொள்வதால் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி நபர் இடைவெளி குறைந்தபட்சம் 6 அடி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
யோகா மையங்கள் மற்றும் ஜிம் போன்றவற்றில் தனி நபர் பயிற்சியின் போது பயிற்சியாளர் மற்றும் உறுப்பினர் மத்தியில் 6 அடி இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. பயிற்சியாளர் மற்றும் வாடிக்கையாளர் ஆகிய இருவருக்கும் உடல் ரீதியான எந்த தொடர்பும் இல்லாத பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வது அவசியம்.

திறந்த வெளி இடங்களை முடிந்த அளவு பயன்படுத்துங்கள்
கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவக்கூடும் என்பதால் பிட்னஸ் மையங்கள் பெரும்பாலும் திறந்த வெளியில் செயல்படுவது சிறந்தது என்று வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளனர்.

பிட்னஸ் மைய உபகாரணங்களைப் பயன்படுத்தும் போது கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, ஜிம் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு முன்னர் மற்றும் பின்னர் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications
