Latest Updates
-
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது...
தேனீ கடிக்கு உதவக்கூடிய எளிய கை வைத்தியங்கள்!
தேனீ கொட்டியதும் நீங்கள் செய்யும் முதல் காரியம் என்ன? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வைத்தியத்தை மேற்கொள்வதுண்டு. தேனீ கொட்டிவிட்டால் அதற்கான தீர்வை காண்பதை விட, நேரத்தில் முதலுதவி செலுத்துவது அவசியம்.
தேனீ கொட்டியதும் நீங்கள் செய்யும் முதல் காரியம் என்ன? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கை வைத்தியத்தை மேற்கொள்வதுண்டு. தேனீ கொட்டிவிட்டால் அதற்கான தீர்வை காண்பதை விட, நேரத்தில் முதலுதவி செலுத்துவது அவசியம். இப்போது நாம் தேனீ கடிக்கான சில கை வைத்தியங்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

மருத்துவரின் உதவியை நாடுவதற்கு முன்பு இதனை செய்துவிட்டு மற்றதை செய்யுங்கள். இல்லையென்றால், பின்விளைவுகள் மோசமாக வாய்ப்புள்ளது. சரி வாருங்கள், இப்போது தேனீ கொட்டுதலுக்கான கை வைத்தியங்களை பார்க்கலாம்...

தேனீ கொட்டியதும் என்ன நடக்கும்?
சில சமயங்களில், தேனீ கொட்டுவதால் எந்தத் தீங்கும் ஏற்படாது. அதற்காக அதை புறக்கணிக்கக்கவும் கூடாது. ஆரம்பத்தில், இது ஒரு கூச்ச உணர்வுடன் தான் தொடங்கும். அதைத் தொடர்ந்து வீக்கம், சிவத்தல் மற்றும் கூர்மையான வலி ஆகியவை அடுத்தடுத்து ஏற்படும். தேனீ கொட்டுவதால் நிறைய பேருக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடும். எனவே, அவர்களுக்கு இத்தகைய தேனீ கடி நிறைய சிக்கல்களை உருவாக்கக்கூடும். மிக அரிதான சமயங்களில், இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
தேனீ கொட்டிய பின் இறந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இது ஒரு வித்தியாசமான உண்மை தான். தேனீ ஒருவரை கொட்டும் போது, அதன் கொடுக்கானது மனித உடலில் செலுத்தப்பட்டவுடன் அது இறந்துவிடுகிறது. கொடுக்கில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒருவித நச்சுப்பொருள் உள்ளது. தேனீ கொட்டுவதால் ஒவ்வாமை ஏற்படக்கூடியவர்களுக்கு இந்த நச்சு விஷமாகும்.

தேனீ கொட்டுவதனால் ஏற்படக்கூடியவைகள்
* கடுமையான அரிப்பு
* வெளிறிய தோல்
* படை
* அதிகரித்த இதய துடிப்பு
* சுவாச சிரமங்கள்
* நாக்கு மற்றும் தொண்டை அழற்சி
* வாந்தி மற்றும் குமட்டல்
* தலைச்சுற்றல்
* வயிற்றுப்போக்கு

தேனீ கொட்டுதலுக்கான முதலுதவி
ஒரு தேனீ உங்களை கொட்டியவுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள முதலுதவி தீர்வுகளில் ஏதேனும் ஒன்றை செய்யவும். இது வீக்கம், சிவத்தல் ஆகியவற்றை குறைப்பதோடு, உடலில் வெளியாகும் நச்சால் உண்டாகக்கூடிய, ஒவ்வாமை எதிர்விளைவையும் தடுத்திடும்.

சோப்பு நீரால் கழுவி, ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும்
சோப்பு நீரை கொண்டு தேனீ கொட்டிய இடத்தை உடனடியாக கழுவ வேண்டும். பின்னர், ஒரு காட்டன் டவலால் சுத்தம் செய்து, அதில் ஐஸ் கட்டி கொண்டு தடவவும். இது ஒவ்வாமையைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், உடலில் விஷம் பரவுவதையும் தடுத்திடும்.

தேன்
ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளை கொண்டுள்ள தேன், தேனீ கொட்டிய பகுதியில் கிருமி நீக்கம் செய்து, நோய் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்த உதவும். இந்த முதலுதவியின் மூலம், அரிப்பு மற்றும் வலியைக் குறைத்திடலாம். வீக்கம் அதிகமாக இருந்தால், தேனீ கொட்டிய இடத்தில் சிறிது தேன் தடவி, அதை பேன்ட்எய்ட் கொண்டு மூடி, 1 முதல் 2 மணிநேரம் அப்படியே வைத்திருக்கவும்.

சமையல் சோடா
தேனீ கொட்டுவதால் வெளிப்படக்கூடிய விஷத்தை நடுநிலையாக்குவது மிகவும் முக்கியமானது. பேக்கிங் சோடாவில், சருமத்தில் விஷத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை நடுநிலையாக்குவதற்கும், வலி, வீக்கம், சிவத்தல் மற்றும் அரிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவக்கூடிய அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளன. எனவே, பேக்கிங் சோடாவை சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
இது முயற்சிக்க வேண்டிய மற்றொரு பிரபலமான வீட்டு வைத்தியங்களில் ஒன்று. விஷத்தின் நச்சுத்தன்மையை நடுநிலையாக்க வினிகர் உதவுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீர் சேர்த்து கலந்து, ஒரு துணியால் அந்த நீரை தொட்டி பாதிக்கப்பட்ட பகுதி மீது வைத்து ஊறவிடவும்.

பற்பசை (Toothpaste)
பற்பசை தேனீ கடிக்கு ஏன் உதவுகிறது என்பதற்கான எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லை. இருப்பினும், அது வேலை செய்கிறது. அதனால்தான் பெரும்பாலானோர், இதை ஒரு பயனுள்ள தேனீ கடி முதலுதவியாக நம்புகிறார்கள். பற்பசையில், இயற்கையாகவே ஒருவித காரத்தன்மை இருப்பதால் இது தேனீ கொட்டுதலால் ஏற்படக்கூடிய அமில விளைவைக் குறைத்திடும். எனவே, பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிது பற்பசையைத் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.
பெரும்பாலான தேனீ கொட்டுதல் சாதாரணமானது தான். அவற்றிற்கு மருத்துவ உதவியெல்லாம் தேவையில்லை. இருப்பினும், இந்த முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னரும், உங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக உங்களது மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications