For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போதை தெளிய உலகில் பின்பற்றப்படும் சில விசித்திரமான வழிகள்!

பொதுவாக ஹேங்ஓவர் பிரச்சனை அல்லது போதை தெளிவதற்கு எலுமிச்சை ஜூஸ், ப்ளாக் டீ போன்றவற்றை குடிப்போம். உலகின் சில பகுதிகளில் இந்த ஹேங்ஓவரில் இருந்து விடுபட பல வித்தியாசமான மற்றும் விசித்திரமான வழிகளைப் பின

|

தற்போது விடுமுறை நாட்கள் வந்தாலே, பலர் பார்ட்டி அல்லது நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாடுகிறேன் என்று மது அருந்துவார்கள். சிலர் உடல் அலுப்பு நீங்குவதற்கு சரக்கு அடிப்பதாக கூறுவார்கள். அப்படி ஒரு நாள் வார விடுமுறையில் வயிறு நிறைய மது அருந்திவிட்டு, மறுநாள் அலுவலகம் செல்ல முடியாதவாறு பலர் ஹேங்ஓவரால் கஷ்டப்படுவார்கள்.

Crazy Cures For Hangover From Around The World

பொதுவாக ஹேங்ஓவர் பிரச்சனை அல்லது போதை தெளிவதற்கு எலுமிச்சை ஜூஸ், ப்ளாக் டீ போன்றவற்றை குடிப்போம். இது அனைவருக்குமே தெரிந்த பொதுவான வழிகள். ஆனால் உலகின் சில பகுதிகளில் இந்த ஹேங்ஓவரில் இருந்து விடுபட பல வித்தியாசமான மற்றும் விசித்திரமான வழிகளைப் பின்பற்றுகின்றனர். உங்களுக்கு அந்த வழிகளைத் தெரிந்து கொள்ள ஆவல் இருந்தால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமெரிக்கா

அமெரிக்கா

இது உங்களுக்கு விசித்திரமான ஒன்றாக தெரியலாம். ஆனால் இது உண்மை. அமெரிக்கர்கள் ஹேங்ஓவரில் இருந்து விடுபட பச்சை முட்டையைக் குடிப்பார்களாம். இதை ப்ரேரி ஆய்ஸ்டர் என்று அழைப்பார்களாம். இது போதையை சட்டென்று குறைக்க உதவும் பிரபலமான ஓர் வழி. ஒரு பச்சை முட்டை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் ஹாட் சாஸ், வொர்செஸ்டர்ஷைர் சாஸ், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதைக் குடிக்க வேண்டும். இது குடிப்பதற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால் இதைக் குடித்தால், மதுவினால் உடலில் சேர்ந்த நச்சுக்கள் முழுமையாக வெளியேறிவிடுமாம்.

கனடா

கனடா

கனடா மக்களுக்கு ஹேங்ஓவரை கையாள்வது நன்கு தெரியும் என்பது அவர்களது பழக்கத்திலேயே தெரிகிறது. எப்படியெனில், இவர்கள் மது குடிக்கும் போது கடைசியாக சீஸ் தயிர் சேர்க்கப்பட்ட ப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடுவார்களாம். இதைப் பார்க்கும் போது ஹேங்ஓவர் நிவாரணியாகத் தெரியாது. ஆனால், இது மிகவும் சுவையுடன் இருப்பதோடு, போதையை சட்டென்று இறக்கிவிடும்.

போலாந்து

போலாந்து

போலாந்தில் வினிகர் மதுவின் தாக்கத்தைக் குறைக்க உதவுவதாக நம்பப்படுகிறது. ஆகவே இந்நாட்டு மக்கள் மது அருந்திய பின், ஹேங்ஓவரில் இருந்து விடுபட ஊறுகாய் ஜூஸ் குடிப்பார்களாம். இதனால் மதுவினால் ஏற்பட்ட அசௌகரியத்தில் இருந்து விடுபட உதவுவதோடு, மறுநாள் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுவிக்கும்.

ஜெர்மனி

ஜெர்மனி

ஜெர்மனியில் katerfrühstück ஹேங்ஓவரில் இருந்து விடுபட உட்கொள்ளப்படுகிறது. இது ஒரு 'ஹேங்ஓவர் காலை உணவு'. இந்த காலை உணவில் ஒரு தட்டில் ரோல்மாப்ஸைச் சுற்றி வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் கெர்கின் என்னும் காய்கறி வைக்கப்பட்டிருக்கும். இதை காலை உணவாக உண்ண வேண்டும் என்பதற்கு காரணம் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பது தான். அப்படி சாப்பிட்டால் தான், அது நல்ல பலனைத் தரும்.

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பானில் ஹேங்ஓவரை சரிசெய்வதற்கு உமிபோஷி உட்கொள்ளப்படுகிறது. இது வேறொன்றும் இல்லை, உலர்ந்த உமி பழத்தின் ஊறுகாய் தான் இது. இந்த பழம் மிகவும் புளிப்ப்பாக இருப்பதால், இது ஹேங்ஓவரை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. சில மக்கள் இதன் புளிப்புச் சுலையைக் குறைக்க, க்ரீன் டீயுடன் சேர்த்து உட்கொள்வார்கள்.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் ஹேங்ஓவரில் இருந்து விடுபட நெருப்புக்கோழி முட்டை ஆம்லெட் சாப்பிடுவார்களாம். ஒரு நெருப்புக்கோழியின் முட்டை 24 கோழி முட்டைக்கு சமமான சத்தைக் கொண்டது.

நமீபியா

நமீபியா

நமீபிய மக்கள் மது அருந்திய பின் எருமை மாட்டுப் பாலைக் குடிப்பார்களாம். சில சமயங்களில் அவர்கள் எருமைப் பாலை மசாலா ரம், டார்க் ரம், கெட்டியான க்ரீம், முழு க்ரீம் மற்றும் திரவ க்ரீம் போன்றவற்றுடன் கலந்து குடிப்பார்களாம். இது கேட்பதற்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் இதன் சுவை அற்புதமாக இருக்குமாம்.

கிரேக்கர்கள்

கிரேக்கர்கள்

பழங்காலத்தில் கிரேக்க மக்கள் ஹேங்ஓவரில் இருந்து விடுபட ஆந்தை முட்டை மற்றும் செம்மறி ஆட்டு நுரையீரலை காலை உணவாக உண்பார்களாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Crazy Cures For Hangover From Around The World

If you constantly search for remedies for hangover, this article is a must-read! Know what people around the world do to relieve hangover.
Story first published: Saturday, November 2, 2019, 18:28 [IST]
Desktop Bottom Promotion