Latest Updates
-
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
நேற்று அடித்த சரக்கு நாற்றம் இன்னும் வீசுதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!
இங்கு ஒருவர் மீது வீசும் சரக்கு நாற்றத்தைப் போக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Recommended Video

வாரம் முழுவதும் உடலுக்கு போதிய ஓய்வு கொடுக்காமல் ரோபோ போன்று வேலை செய்து பலரும் மிகுந்த மன அழுத்தத்துடனும், உடல் களைப்புடனும் இருப்பார்கள். இந்நிலையில் வார இறுதி வந்தாலே பலரும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பார்கள். குறிப்பாக பேச்சுலர்கள் மிகவும் குதூகலமாக இருப்பர். இதற்கு வார இறுதியில் நடக்கும் பார்ட்டியை காரணமாக கூறலாம்.
தற்போது எதற்கு எடுத்தாலும் பார்ட்டி கேட்கும் பழக்கம் மக்களிடையே வந்துவிட்டது. குறிப்பாக ஆண்களின் பார்ட்டி என்றால் அதில் சரக்கு இல்லாமல் இருக்காது. சரக்கு அடிக்கவே பார்ட்டியை கேட்போர் அதிகம். அதிலும் பேச்சுலர்களாக இருந்தால், வார இறுதியில் வரும் எந்த ஒரு பார்ட்டியையும் விட்டுவைக்க மாட்டார்கள். இப்படி வார இறுதியில் பார்ட்டியில் கலந்து கொண்டு, மறுநாள் அலுவலகத்திற்கு செல்வது என்பது மிகவும் கொடுமையாக இருக்கும்.

அதோடு அதிகமாக சரக்கு அடித்துவிட்டால், அந்த சரக்கின் நாற்றம் மறுநாள் அலுவலகத்திற்கு சென்றாலும் வீசும். இதற்கு காரணம் ஆல்கஹாலில் உள்ள குறிப்பிட்ட மூலக்கூறுகள் தான். இவையே வாயில் கெட்ட நாற்றத்தை வீசச் செய்யும். மேலும் ஆல்கஹால் எளிதில் செரிமானமாகாது. இப்படி மெதுவாக செரிமானமாவதால், அது இரத்த நாளங்கள் மற்றும் உடல் திசுக்களில் தேங்கவும் ஆரம்பித்து, தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களாக தேங்கி, உடல் ஆரோக்கியத்தை பாழாக்கும்.
ஒருவர் ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக மதுவைக் குடித்தால், அந்த நாற்றம் அவ்வளவு எளிதில் உடலில் இருந்து போகாது. சரக்கு அடித்த மறுநாள் வரை அந்த நாற்றம் வீசும். இக்கட்டுரையில் ஒருவர் மீது வீசும் சரக்கு நாற்றத்தைப் போக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக கடைசி ஸ்டைலை தவறாமல் படியுங்கள்.

குடிக்கும் போது ஏதேனும் சாப்பிடவும்
அதிகமான மதுவால் நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், குடிக்கும் போது அல்லது அதற்கு முன்பே சிறிது உணவுகளை உட்கொள்ள வேண்டும். இப்படி உட்கொள்வதால், வாயில் எச்சிலின் உற்பத்தி தூண்டப்படும் மற்றும் வயிற்றில் உள்ள உணவுகள் செரிமானமாகும் போது சிறிது ஆல்கஹாலை உறிஞ்சிவிடும்.
மது அருந்தும் போது வேர்க்கடலை, முந்திரி, பார்கார்ன், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் சாப்பிட ஏற்றதாக இருக்கும். இந்த பொருட்களை பீர் அல்லது காக்டைல் குடிக்கும் போது லேசாக சாப்பிடவும் செய்யலாம்.

அதிகளவு நீர்
மதுவை அருந்தும் போது எப்படி ஏதேனும் உணவுகளை சாப்பிட வேண்டுமோ, அதேப் போல் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டியதும் முக்கியம். ஆல்கஹால் வாயை வறட்சியடையச் செய்வதோடு, அதன் நீர்ப்பெருக்கி பண்புகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்யும். வாய் வறட்சி அதிகமானால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்து வாய் துர்நாற்றம் வீசும். எனவே அடிக்கடி நீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் உடல் வறட்சி நீங்குவதோடு, வாய் துர்நாற்றமும் தடுக்கப்படும்.
ஒருவேளை மதுவைக் குடிக்கும் போது நீர் குடிக்க முடியாவிட்டால், மது அருந்திய பின், சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இப்படி நீர் குடிப்பதால் ஆல்கஹால் நாற்றம் குறைவதோடு, ஹேங்ஓவரின் தீவிரமும் குறையும். உங்களுக்கு வெறும் தண்ணீரைக் குடிக்க பிடிக்காவிட்டால், எலுமிச்சை சாறு கலந்த நீரைக் குடியுங்கள்.

ப்ளாக் காபி
சரக்கு அடித்த நாற்றத்தைத் தடுக்கும் மற்றொரு சிம்பிளான வழி ஒரு கப் ப்ளாக் காபி குடிப்பது. இது இருவேறு நன்மைகளை வழங்கும். அதில் ஒன்று காபி விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதோடு, தலைச்சுற்றலைத் தடுக்கும். மற்றொன்று காபியில் உள்ள நல்ல மணம், சரக்கு நாற்றதை மறைக்கும்.
அதிலும் ஒரு நாளைக்கு 3-4 கப் ப்ளாக் காபியை சீரான இடைவெளியில் குடித்தால், சரக்கு நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம். முக்கியமாக ப்ளாக் காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரை எதையும் சேர்க்க வேண்டாம். அப்படி சேர்த்தால், அது சரக்கு நாற்றத்தை மறைக்க உதவாது.

பற்களைத் துலக்குவது
நல்ல வாய் சுகாதாரம் வாய் துர்நாற்றத்தைத் தடுப்பதோடு, சரக்கு நாற்றத்தைத் தடுக்கவும் செய்யும். ஒருவர் மது அருந்திய பின், பற்களைத் துலக்கிவிட்டால், அது வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும். வாய் சுகாதாரம் என்று வரும் போது, அது நாக்கு சுத்தத்தையும் தான் குறிக்கும். அதிலும் புதினா ப்ளேவர் கொண்ட டூத் பேஸ்ட்டைக் கொண்டு ஒருவர் பற்களைத் துலக்குவது நல்லது.
முக்கியமாக பற்களைத் துலக்கிய பின் ப்ளாஷ் செய்ய மறக்க வேண்டாம். ப்ளாஷ் செய்வதால், பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கும் உணவுத்துகள்கள் வெளியேற்றப்பட்டு, கடுமையான வாய் துர்நாற்றம் தடுக்கப்படும். மேலும் இறுதியில் நீரால் வாயைக் கொப்பளித்தப் பின், ஆல்கஹால்-ப்ரீ மௌத் வாஷ் கொண்டு வாயைக் கொப்பளியுங்கள்.

மூலிகைகளை மெல்லுங்கள்
நல்ல நறுமணம் கொண்ட ரோஸ்மேரி, பார்ஸ்லி, புதினா போன்ற மூலிகைகள் சரக்கு நாற்றத்தை மறைக்க உதவும். இதற்கு இந்த மூலிகைகளில் உள்ள நறுமணப் பண்புகள் தான் காரணம். ஆகவே சரக்கு அடித்து மறுநாள் வரை அந்த நாற்றம் வீசினால், நற்பதமான ரோஸ்மேரி, பார்ஸ்லி, புதினா போன்ற இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள்.

சூயிங் கம்
ஆல்கஹால் நாற்றத்தைப் போக்கும் எளிய வழிகளுள் ஒன்று சுகர்-ப்ரீ சூயிங் கம்மை மெல்லுவது. அதிலும் புதினா ப்ளேவர் சூயிங் கம் மிகவும் சிறப்பானது. இது சரக்கின் நாற்றத்தை மறைக்க உதவுவதோடு, வாயில் எச்சிலின் உற்பத்தியைத் தூண்டி, துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்க உதவும். எனவே மது அருந்திய பின் ஒரு துண்டு சூயிங் கம்மை வாயில் போட்டு சிறிது நேரம் மெல்லுங்கள் பின் நீரால் வாயைக் கொப்பளியுங்கள். வேண்டுமானால், மீண்டும் மற்றொரு சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுங்கள்.

வேர்க்கடலை வெண்ணெய்
உங்களுக்கு வேர்க்கடலை வெண்ணெய் பிடிக்குமா? அப்படியானால் உங்கள் மீது வீசும் சரக்கு நாற்றத்தை மறைக்க வேர்க்கடலை வெண்ணெயை சுவையுங்கள். இது ஒரு நல்ல நறுமணத்தைக் கொண்டது. இதைக் கொண்டு சரக்கு நாற்றத்தை எளிதில் மறைக்கலாம். எனவே திங்கட்கிழமை அலுவலகத்திற்கு செல்லும் போது, உங்கள் மீது வீசும் சரக்கு நாற்றத்தை மறைக்க விரும்பினால், 1-2 துண்டு பிரட்டை டோஸ்ட் செய்து, வேர்க்கடலை வெண்ணெய் தடவி சாப்பிடுங்கள். அத்துடன் ஒரு கப் ப்ளாக் காபியையும் குடியுங்கள்.

பூண்டு
மருத்துவ குணம் கொண்ட பூண்டும் கடுமையான சரக்கு நாற்றத்தை மறைக்க உதவும். சொல்லப்போனால், சரக்கு நாற்றம் எல்லாம் பூண்டின் வாசனைக்கு முன்பு சாதாரணம். சொல்லப்போனால் எவ்வளவு சரக்கு அடித்தாலும் பூண்டு சாப்பிட்டால், பூண்டு வாசனை தான் வீசுமே தவிர சரக்கு நாற்றம் அல்ல. ஆகவே உங்கள் மீது சரக்கு நாற்றம் அதிகம் வீசினால், 1-2 துண்டு பூண்டு சாப்பிட்டு, 1 டம்ளர் நீரைக் குடியுங்கள். அல்லது, உண்ணும் உணவுகளில் பூண்டு பற்களை பொடியாக நறுக்கி தூவி சாப்பிடுங்கள்.

வெங்காயம்
பூண்டு போன்றே வெங்காயமும் நல்ல வாசனைமிக்க ஓர் உணவுப் பொருள். அதிலும் வெள்ளை வெங்காயத்தை விட சிவப்பு வெங்காயம் அதிகளவு வாசனையுடன் இருக்கும். ஆகவே சரக்கு நாற்றம் வீசினால் பச்சை வெங்காயத்தை சிறிது சாப்பிடுங்கள். ஒருவேளை உங்கள் வாயில் இருந்து வெங்காயத்தின் நாற்றம் அதிகம் இருந்தால், பற்களைத் துலக்கி விட்டு, அதிகளவு நீரைக் குடியுங்கள்.

எலுமிச்சை
எலுமிச்சை சரக்கு நாற்றத்தை மறைக்க உதவும் மற்றொரு அற்புதமான பொருள். இதற்கு அதில் உள்ள சிட்ரஸ் பண்புகள் தான். எலுமிச்சை உடலில் உள்ள டாக்ஸின்களை நீக்க உதவுவதோடு, சரக்கு நாற்றத்தையும் குறைக்கும். அதற்கு 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, வாயில் ஊற்றி 1 நிமிடம் கழித்து வெளியே துப்புங்கள். இப்படி 4 மணிநேரத்திற்கு ஒருமுறை செய்தால், ஆல்ஹகால் நாற்றம் நீங்கும். இல்லாவிட்டால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, சுவைக்கு தேன் கலந்து குடியுங்கள்.

குறிப்பு
மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் ஒருவர் அளவுக்கு அதிகமாக குடிப்பது என்பது பல தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே தீங்கு விளைவிக்கும் இந்த கெட்ட பழக்கத்தைக் கைவிடுங்கள். விடுமுறை நாட்களில் மரு அருந்தி உடலை வருத்துவதந்கு பதிலாக, குடும்பம் அல்லது நண்பர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுங்கள். இதனால் மன அழுத்தம் குறைந்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











