Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
ஆணுறை பயன்படுத்தினாலும், இந்த 5 பால்வினை தொற்றுகளை தடுக்க முடியாது - உஷார்!
ஆணுறை பயன்படுத்தினாலுமே, இந்த 5 பால்வினை நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது!
இப்போதைக்கு பால்வினை நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க இருக்கும் ஒரே வழி ஆணுறை மட்டுமே. பாதுகாப்பான செக்ஸ் வாழ்க்கைக்கு உதவும் என்ற பெயரில் தான் ஆணுறைகள் வர்த்தகம் செய்யப்பட்டு பெருமளவு உலகெங்கிலும் விற்கப்பட்டு வருகிறது. மேலும், ஆணுறை பயன்படுத்துவதன் மூலம் அவசியமற்ற கருத்தரிப்பு தவிர்க்க முடியும் என்றும் கூறுகிறார்கள்.
இதில் என்ன விசித்திரம் என்றால்... ஆணுறை பயன்படுத்துவதால் கருத்தரிப்பை நிறுத்த முடியும், பால்வினை தொற்றை தவிர்க்க முடியும் என்பது நூறு சதவிதம் சாத்தியமானது அல்ல.
ஆணுறை பயன்படுத்தும் போது, விந்து, நோய் தொற்று கிருமிகள், இரத்தம் போன்றவை உடலுடன் தொடர்புக் கொள்ள முடியாது என்பதால் தான் இது பால்வினை நோய் தொற்றை தவிர்க்க உதவும் என்று கூறப் படுகிறது.
ஆனால், ஆணுறை பயன்படுத்தினாலுமே கூட ஒருசில பால்வினை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்பது தான் உண்மை...

அந்தரங்க பேன்கள் (Pubic Lice)
இந்த தொற்றின் போது, பப்ளிக் லைஸ் எனப்படும் அந்தரங்க பகுதிகளில் பேன் போன்ற நுண்ணிய பூச்சிகள் உருவாகும். இது ஆண், பெண்ணின் அந்தரங்க பகுதியில் இருக்கும் மயிர் கால்களில் ஏற்படுவது ஆகும்.
இதை ஆணுறை பயன்படுத்தி எல்லாம் தவிர்க்க முடியாது. ஒரு நபரின் அந்தரங்க பகுதி முடியில் இருந்து இன்னொரு நபரின் அந்தரங்க பகுதி முடிக்கு பரவும் இந்த தொற்றை ஆணுறை தடுக்காது. இதை சுகாதார விஷயங்களால் மட்டுமே தவிர்க்க முடியும்.

சிபிலிஸ் / மேக புண்
சிபிலிஸ் எனப்படும் இந்த தொற்று, மிக வேகமாக பரவக் கூடியது. இந்த சிபிலிஸ் தொற்று செக்ஸுவல் தொடர்பு மூலமாக பரவக் கூடியது. அதாவது பிறப்புறுப்பு மூலமான தொடர்பு மட்டுமின்றி, வாய்வழி மூலமாகவும் இது பரவும் வாய்ப்புகள் இருக்கிறது.
இது ஏற்கனவே தொற்று ஏற்பட்டிருக்கும் ஒரு நபரின் சருமத்தில் இருந்து மற்றொரு நபரின் சருமத்திற்கு பரவுகிறது. இதை ஆணுறை பயன்படுத்தி எல்லாம் தடுக்க முடியாது.

மோலச்கம் (Molluscum)
மோலச்கம் ஒரு அசாதாரணமான பால்வினை நோய் தொற்று. இது சருமத்தில் சிவப்பு நிறத்திலான வெடித்த பருக்கள் போன்று தோன்ற கூடியது. இது சில சமயம் பெண்கள் பிறப்புறுப்பின் vulva எனும் பகுதியில் ஏற்பட கூடியது இது வலி மிகுந்ததாகும்.
ஆனால், எளிதாக பரவ கூடியதாக இருப்பினும், இது நீண்ட கால பிரச்சனையாக நீடிக்காது என்று கூறப்படுகிறது.

எச்.பி.வி
எச்.பி.வி (Human Papillomavirus), பரவலாக அறியப்படும் ஒன்பது வகை பால்வினை நோய் தொற்றுகளில் இதுவும் ஒன்று. அதிகளவில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.
எச்.பி.வி எனும் இந்த தொற்று பிறப்புறுப்பு வழியாக பரவுவது இல்லை. இது சருமத்தின் ஊடாகவே பரவுகிறது. ஆகையால் ஆணுறை பயன்படுத்த இந்த பால்வினை தொற்று ஏற்படாமல் தடுக்க முடியாது.

ஹெர்பெஸ்!
ஆசன வாய் மற்றும் தொடை மேல் பகுதியில் ஏற்படும் பால்வினை தொற்று ஹெர்பெஸ். ஆனால், ஹெர்பெஸ் வாய் பகுதியிலும் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. முத்தமிட்டுக் கொள்வதால் இது பரவுகிறது.
பெரும்பாலும் உடலுறவு பிறப்புறுப்பு வழியான ஊடுருவல் மூலமாக அமைந்தாலும், அதற்கு முன்னரும், பின்னரும் கொஞ்சி விளையாடுதலில் இதுப் போன்ற பால்வினை தொற்றுகள் பரவ வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் ஆணுறை மூலம் தடுப்பது என்பது சாத்தியமற்றது.



Click it and Unblock the Notifications
