இத செஞ்சிங்கன்னா ஆயுளுக்கும் ஆஸ்துமா உங்களை எட்டியே பார்க்காது...

Posted By: gnaana
Subscribe to Boldsky

ஆஸ்துமா நோயால் மூச்சுத்திணறல் உண்டாகும். சுவாசக்கோளாறுகள் மற்றும் குறைந்த சுவாசம் ஆகியவை உண்டாகும். இந்த பிரச்னையால் கிட்டதட்ட 20 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

health

குளிர்கால பனிக்காற்றால் சிலருக்கு, காற்றை உள்ளிழுத்து முழுமையாக சுவாசிக்கமுடியாமல், இளைப்பும், இரைப்பும் ஏற்பட்டு, தவித்துவிடுகிறார்கள். இதன் காரணமாகவே, அவர்கள் ஏசி நிரம்பிய அறைகளில் இருப்பதையும், அதுபோன்ற சூழல்களில் வேலை செய்வதையும் தவிர்க்கிறார்கள். எதனால் ஏற்படுகிறது, இந்த இளைப்பு?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளைப்பு நோய்

இளைப்பு நோய்

மூச்சுக்குழாய்களில் கலக்கும் காற்று மாசுக்கள், அவற்றில் வலியை ஏற்படுத்தி, காற்றின் இயக்கம் தடைபடுவதால், ஆஸ்துமா ஏற்படுகிறது. இதனால், மூச்சுக் குழாய்களில் வீக்கம், மற்றும் சளி சுரந்து, சுவாசப் பாதையை ஆக்கிரமித்து, குறுகலாக்குவதால் மூச்சுக்காற்று, நுரையீரலுக்குள் செல்ல முடியாமல், மூச்சுவிடுவது சிரமமாகி, இளைப்பு வருகிறது. ஈழை என்னும் இந்த இளைப்பு பாதிப்பை, ஆங்கிலத்தில், ஆஸ்துமா என்கின்றனர்.

காரணங்கள்

காரணங்கள்

சுற்றுச்சூழலிலுள்ள தூசு, பூக்களின் மகரந்தம் மற்றும் நெடியேற்றும் சென்ட் வகைகள் காரணமாக, சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டு, ஆஸ்த்மா ஏற்படலாம். காற்றுமாசுபாடு, குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகை, மற்றும் குளிர்ந்த சூழல் போன்றவற்றாலும், இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு பரம்பரை பாதிப்புகளாலும், ஈழை ஏற்படலாம்.

ஆஸ்த்மா பாதிப்பை மேலை மருத்துவத்தில், முழுமையாக குணப்படுத்த முடியாது, ஆயினும், பாதிப்பைத்தூண்டும் காரணிகளையறிந்து, அவற்றைத் தவிர்ப்பதன் மூலம், ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும். அவை என்னவென்று பார்க்கலாமா?

காற்றின் ஈரப்பதம்.

காற்றின் ஈரப்பதம்.

ஆஸ்துமா பாதிப்புகளைத் தவிர்ப்பதில், அத்தியாவசியமான ஒன்று, தூய்மையான காற்று. வெப்பமான அல்லது மிகவும் குளிரான வானிலை மற்றும் மாசு நிறைந்த காற்று, பாதிப்புகளை அதிகரித்துவிடும். இதுபோன்ற நிலைகளில், அறைகளின் ஜன்னல்களை மூடியோ அல்லது அறை வெப்பநிலையை சராசரி அளவுகளில் ஏசி மூலம் கட்டுப்படுத்தி வைப்பதன்மூலம், ஆஸ்துமா பாதிப்புகளை தவிர்க்கமுடியும்.

வாய்ப்பிருந்தால், தூய காற்று நிரம்பியிருக்கும், மலைகள், காடுகள் மற்றும் கடற்கரைகளுக்கு சிறுபயணம் சென்று வருவதன் மூலம், சுத்தமான காற்று நுரையீரலில் சேர்வதன் மூலம், பாதிப்புகள் கட்டுப்பட்டிருக்கும்.

சுத்தம்

சுத்தம்

ஜன்னல்கள், சமையலறை சுவர்கள், பாத்ரூம்களில் பூஞ்சைக்காளான்கள், மற்றும் தூசுக்கள் அழுக்கு மற்றும் கறைகளாகப் படிந்திருப்பது அலர்ஜியைத்தூண்டி, ஆஸ்துமாவை அதிகரித்துவிடும். சமையலறை மற்றும் பாத்ரூமில் எப்போதும் தண்ணீர் தேங்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.

பூஞ்சை எதிர்ப்பு சோப் ஆயில் கொண்டு, கறைகளை நன்கு தேய்த்து கழுவி, தரைகளை அலசிவிடுவதன் மூலம், பாதிப்புகளைத் தவிர்க்கலாம். இதைவிட முக்கியம், வீடுகளின் உட்புறம் தொட்டிச்செடிகள் வளர்த்துவந்தால், அவற்றுக்கு ஊற்றும் தண்ணீர், தொட்டியின் கீழே தேங்கி, பூஞ்சையை உருவாக்காமல், பார்த்துக்கொள்வது, அவசியமாகும்.

தூசுகளை கட்டுப்படுத்துவது.

தூசுகளை கட்டுப்படுத்துவது.

தூசிகளிலுள்ள நுண்ணிய அழுக்கு கிருமிகள், ஆடைகளின் பிரிந்த நூல்கள், சோப் மற்றும் இரசாயனத் துகள்கள், சுவாசத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி, ஆஸ்துமாவை, அதிகரித்துவிடும். தூசிகளில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நச்சுகிருமிகள், தலையணைகள், மெத்தை, மற்றும் வீட்டின் இருக்கைகளில் இருக்கக்கூடும். எனவே, மிதியடிகள், திரைச்சீலைகள், படுக்கைகள் மற்றும் போர்வைகளை வெந்நீரில் துவைத்து, காயவைப்பது அவசியம். நாற்காலி போன்ற மர இருக்கைகளில், மஞ்சள்கலந்த வெந்நீரை ஸ்பிரே செய்வதன் மூலம், கிருமிகளின் பாதிப்பை தவிர்க்கலாம். வாரமிருமுறை வாக்குவம் கிளீனிங் மற்றும் மோப்பிங் செய்வதன் மூலம், ஆஸ்துமா பாதிப்புகளைத் தவிர்க்கமுடியும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள், புகைபிடிக்கும்போது, அது, நுரையீரலில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி, மூச்சுக்குழாய்களின் பாதிப்பை அதிகரிப்பதால், ஆஸ்துமாவின் தீவிரம் கூடுகிறது. ஆஸ்த்மா பாதிப்புள்ளவர்கள் புகை பிடிக்காமல் இருந்தாலும், அவர்கள் அருகே, யாராவது புகை பிடித்தாலும், பாதிப்புகள் கடுமையாகும். அதுபோன்ற இடங்களைத்தவிர்ப்பதும், அதேபோல, புகைபிடிக்க அனுமதியுள்ள பொது இடங்களுக்கு செல்லாமல் இருப்பதும், நலமாகும்.

வீடுகளின் சமையலறையில் ஏற்படும் புகையையும், பாதிப்பை ஏற்படுத்தலாம். எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் மூலம் புகையை வெளியேற்றுவதன்மூலம், ஆஸ்த்மா பாதிப்பைத் தவிர்க்கமுடியும்.

செல்லப்பிராணிகள்

செல்லப்பிராணிகள்

செல்லப்பிராணிகள் பலருக்கு அவர்களின் குழந்தைகளைவிட முக்கியமாக இருக்கலாம், ஆயினும் ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள், அவற்றிடமிருந்து விலகியிருப்பது, நலம். அவற்றின் உடல் முடிகள், உடலில் உள்ள உண்ணிகள், இறக்கைகள், உமிழ்நீர் போன்றவை, ஆஸ்த்மாவைத் தீவிரப்படுத்திவிடும்.

வீட்டின் படுக்கையறையிலும், வீடுகளின் நாற்காலி சோபா போன்றவற்றில் அவை அமரவிடாமல் தடுப்பதன் மூலமும், ஆஸ்துமா பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம், கோபம் போன்ற உணர்ச்சிகள், சுவாசத்தை வேகமாக இயங்கவைக்கும். இதன்காரணமாக, மூச்சுக்குழாய்களின் இயக்கம் பாதித்து, மூச்சிளைப்பு ஏற்படுகிறது. மன அழுத்தம், உடல் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமாக்குவதன் மூலம், ஆஸ்த்மா பாதிப்பை அதிகரிக்கிறது.

மூச்சை ஆழமாக உள்ளிழுத்து பயிற்சி செய்வதன் மூலம், கண்களை மூடி சற்றுநேரம் சிந்தனைகளை நிறுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, சிலவகை ஆசனங்கள் செய்வதன் மூலம், மன அழுத்தத்தை, உங்களிடமிருந்து, வெளியேற்ற முடியும். மேலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, ஜாலியாக சிரித்து பேசி மகிழ்வதன் மூலமும், மன அழுத்தத்தை தவிர்த்து, ஆஸ்த்மாவை கட்டுப்படுத்தி வைக்க முடியும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

மிகத் தீவிரமான, நீண்ட நேரம் செய்யும் உடற்பயிற்சிகள் மற்றும் இதயத்துக்கும், நுரையீரலுக்கும் சிரமத்தைத் தரும் பயிற்சிகள், ஆஸ்துமா பாதிப்புகளின் தீவிரத்தை அதிகரித்துவிடும். எனவே அதுபோன்ற உடற்பயிற்சிகளை செய்யாமல், எளியஆசனங்கள் செய்து வரலாம். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். சைக்கிள் ஒட்டி வரலாம். உற்சாகமாக நீச்சல் மேற்கொள்ளலாம். அல்லது ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சிரமம் ஏற்பட்டால், பயிற்சிகளை நிறுத்திவிட்டு, மருத்துவரின் ஆலோசனை பெறுவது, நலமாகும்.

பருவநிலை மாற்றங்கள்

பருவநிலை மாற்றங்கள்

சுவாச பாதிப்புகளால் ஏற்படும் குளிர் ஜுரம், சைனஸ் தொற்று போன்றவை ஆஸ்த்மா பாதிப்பை அதிகரித்துவிடும். நெஞ்செரிச்சல் ஏற்படுவதன் மூலம், மூச்சுக் குழாய்கள் சுருங்கி, நுரையீரலின் இயக்கம் பாதிக்கும்போது, ஆஸ்த்மா கடுமையாகிவிடுகிறது.

பருவநிலை மாற்றங்களால் குளிர்ஜுரம், இருமல் சளி ஏற்படும் காலங்களில், தகுந்த முன் எச்சரிக்கை உணர்வுடன், நோய் அணுகா சூழலை கடைபிடிப்பதன் மூலம், பாதிப்புகளைத் தவிர்க்கமுடியும்.

ஏர்கூலர்.

ஏர்கூலர்.

வீடுகளின் அறைகள் அல்லது வரவேற்பறைகளில் வைக்கப்படும் காற்று குளிரூட்டி மற்றும் ஏர் கூலர் சாதனங்கள், நீராவிகளை வெளியேற்றி, சூடான வறண்ட அறைக்காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. ஆயினும், காற்றில் மிகஅதிகமாக ஈரப்பதம் ஏற்படும்போது, நுண்ணிய தூசுக் கிருமிகளை ஏற்படுத்திவிடுகிறது. பொதுவாக அறையின் ஈரப்பதத்தை, 30 முதல் 45 வரை பராமரித்தால், நுண் கிருமிகளின் பாதிப்பால் ஏற்படும், ஆஸ்த்மா கோளாறு கட்டுப்படும்.

அதிக உடல் எடை, திராட்சையில் செய்யப்பட மதுவகைகள், ஆஸ்பிரின் மற்றும் பெயின்ட் போன்றவையும், ஆஸ்துமா பாதிப்பைத் தூண்டும் காரணிகளாகும், எனவே, இவற்றைக் கவனமாகத் தவிர்ப்பதன் மூலம், எந்த நிலையிலும், ஆஸ்துமா பாதிப்பின்றி, உற்சாகமாக இருக்கமுடியும்.

உணவு மாற்றங்கள்

உணவு மாற்றங்கள்

ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள், உணவில் தகுந்த கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வைட்டமின் C, வைட்டமின் D, வைட்டமின் E, பீட்டா கரோடின், ஃபிளாவனாய்டுகள், மக்னீசியம், ஒமேகா 3, அஸ்கார்பிக் அமிலம், செலெனியம் இவற்றுடன், பூண்டு, மஞ்சள், இஞ்சி மற்றும் தேன் போன்றவற்றை உணவில் சேர்த்துவர, ஆஸ்துமா கட்டுப்படும்.

கேரட், கீரைகள், பிராக்கோலி போன்ற காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, பெர்ரி பழங்கள், ஆளி விதைகள் மற்றும் கடல்மீன்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி வைக்கும். அதேபோல், பதப்படுத்தப்பட்ட அல்லது டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பால் பொருட்களை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 amazing tips for preventing asthma

This makes breathing difficult and causes coughing, wheezing and shortness of breath. This chronic disease affects 20 million Americans.
Story first published: Thursday, April 5, 2018, 18:00 [IST]