மூட்டுவலியில் இருந்து விடுபட உதவும் நல்லெண்ணெய் மசாஜ்!

Written By:
Subscribe to Boldsky

எண்ணெய் தேய்த்து குளிப்பது நமது மரபில் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் இதை இப்போது யாரும் பின்பற்றுவது இல்லை. கெமிக்கல்கள் நிறைந்த வாழ்க்கைக்கு மாறிவருகிறோம். இதனால் தான் பல ஆரோக்கிய பிரச்சனை வருகிறது. நாகரிகம் வளர வளர நம் முன்னோர்கள் காட்டிய ஆரோக்கிய பாதையை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன் விளைவு என்ன? நோய்கள் மற்றும் காலம் முழுவது மருந்து உண்ண வேண்டிய நிலை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனி நீராடு

சனி நீராடு

"சனி நீராடு" என்று கூறுவார்கள். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெயுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, வற்றல் மிளகாய் ஆகியன சேர்த்துக் காய்ச்சி, கைபொறுக்கும் சூட்டில் தலை முதல் பாதம் வரை தேய்த்து சிறிது நேரம் கழித்து நீராட வேண்டும்.

மூட்டு வலி

மூட்டு வலி

தொடர்ந்து எண்ணெய் தேய்த்து வந்தால் மூட்டுக்கள் நன்றாக இருக்கும். மூட்டு வலிகள் மற்றும் உடல் வலிகள் நமது பக்கம் திரும்பி பார்க்கவே அஞ்சும். இதனை செய்வதை விட்டுவிட்டு மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

உடல் வளர்ச்சி

உடல் வளர்ச்சி

எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால் மனித உடல் வளர்ச்சிக்கான சுரப்பு அதிகமாக சுரக்கிறது. ரத்தத்திலிருந்து செரிமானம் ஆன புரதத்தை செல்களுக்கு வேகமாக அனுப்புகிறது. இதன் காரணமாக வளர்ச்சி தூண்டப்படுகிறது.

இந்த சுரப்பு கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட்டின் வேகமான வளர்சிதை மாற்றத்திற்கும் காரணமாகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க இது உதவுகிறது.

குழந்தைகளுக்கு...

குழந்தைகளுக்கு...

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டிவிடுவதால், குழந்தைகளின் வளர்ச்சியில் நம்ப முடியாத மாற்றத்தை காணமுடிகிறது. கண்பார்வை நன்றாக தெரியும். உடல் உஷ்ணமும் நீங்குகிறது.

கிருமிகளை எதிர்க்கும்..

கிருமிகளை எதிர்க்கும்..

நல்லெண்ணை ஒரு கிருமி நாசினியை போலவும் நமது உடலில் செயல்படுகிறது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வைரஸ் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்க பயன்படுகிறது. இதனால் பல தொற்றுக்கள் வருவதில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.

புற்றுநோய்

புற்றுநோய்

நல்லெண்ணெய் புற்றுநோயை உண்டாக்கும் பிற காரணிகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

வியக்கத்தக்க விளைவுகள்

வியக்கத்தக்க விளைவுகள்

நல்லெண்ணெய் உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை செய்கிறது. இது உடலில் வெள்ளை அணுக்களை நுழையவிடாமல் தடுக்கும் காரணிகளை அழித்து, வெள்ளை அணுக்களை பாதுகாப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

நல்லெண்ணெய் குளியல்

நல்லெண்ணெய் குளியல்

நல்லெண்னையை உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கும் போது, கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவு ஆகியவற்றை பயன்படுத்தி குளிக்கலாம். கிரமப்பகுதிகளில் களிமண்களை கூட பூசி குளிப்பார்கள். களிமண் ஆயுர்வேத மருத்துவத்திலும் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Very Easy way for Quick Relief

Very Easy way for Quick Relief
Story first published: Thursday, August 24, 2017, 12:22 [IST]
Subscribe Newsletter