அதிகமாக ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆணுறை பயன்படுத்தினால் கருத்தரிப்பை தவிர்த்து விடலாம் என்பது நூறு சதவித உண்மை கிடையாது. தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது கடின உராய்வுகளால் ஆணுறையில் கிழிசல் ஏற்பட்டாலோ, காலாவதியான, தரமற்ற ஆணுறை பயனப்டுதினாலோ கருத்தரிப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு.

தரமான ஆணுறையாகவே இருப்பினும், அதை சரியாக அணிய தெரியவில்லை எனிலும் நீங்கள பக்கவிளைவுகளை அனுபவிக்க கூடும். எனவே, ஆணுறை சார்ந்த இந்த தவறுகள் இனிமேல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலாவதி!

காலாவதி!

இதர பொருட்களுக்கு காலாவதி நாள் இருப்பது போலவே ஆணுறைக்கும் காலாவதி நாள் இருக்கிறது. எனவே, காலாவதி நாளை தாண்டிய அல்லது காலாவதி நாளை நெருங்கும் ஆணுறைகளை பயன்படுத்த வேண்டாம். இதனால், எளிதாக கிழிசல் ஏற்படலாம், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

லியூபிரிகன்ட்!

லியூபிரிகன்ட்!

தாம்பத்தியத்தின் போது கடினமாக உணராதிருக்க லியூபிரிகன்ட் பயன்படுத்துவது இயல்பு. ஆனால், ஆணுறை அணிந்து, அதன் மேல் லியூபிரிகன்ட் பயன்படுத்துவது ஆணுறை சேதமாக காரணமாக அமையலாம்.

இரண்டு!

இரண்டு!

சிலர் ஒரே நேரத்தில் இரண்டு ஆணுறை பயன்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என கருதுகிறார்கள். ஆனால், இதனால் உராய்வு அதிகரித்து உடலுறவில் ஈடுபட சிரமமாகவும், ஆணுறை சேதமாகும் வாய்ப்புகள் தான் அதிகம்.

தவறு!

தவறு!

சரியாக ஆணுறை அணியாமல் அல்லது தரமற்ற, காலாவதியான ஆணுறைகளை பயன்படுத்தினால் கருத்தரித்தல், நோய் (பால்வினை) தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, சரியாக அணியவும், தரமான ஆணுறை பயன்படுத்துவும் கற்றுக் கொள்ளுங்கள்.

15%

15%

சரியாகவே ஆணுறை அணிய தெரிந்தாலும் கூட, சரியாக பயன்படுத்த தவறும் போது நூற்றில் 15 பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கருத்தரிப்பை தவிர்க்க ஆணுறை 100% உதவாது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அலர்ஜி!

அலர்ஜி!

சிலருக்கு லேடக்ஸ் ஆணுறைகள் பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படும். லேடக்ஸ் என்பது ரப்பர் போன்ற பொருளாகும். இதனால் ஊச்சுவிடுவதில் சிரமம், வீக்கம், தும்மல் போன்றவை கூட ஏற்படலாம்.

இதர ஆணுறை வகைகள்...

இதர ஆணுறை வகைகள்...

லேடக்ஸ் ஆணுறை தவிர்த்து, இயற்கையான தோல்களின் மூலம் தயாரிக்கப்பட்ட ஆணுறைகள், சின்தடிக் ரப்பரில் தயாரிக்கப்படும் ஆணுறைகளும் இருக்கின்றன. இவர் அலர்ஜிகளில் இருந்து பாதுகாக்கும். அதிக இன்பம் பெற உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ill Effects Of Using Condoms In Excess!

Ill Effects Of Using Condoms In Excess!
Story first published: Thursday, October 5, 2017, 11:14 [IST]