ஆண்களின் விறைப்பு தன்மையை அதிகரிக்கும் நாட்டுமருத்துவ குறிப்புகள்!

Written By:
Subscribe to Boldsky

மலட்டுத்தன்மை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்று தான். சிலர் பெண்களுக்கு மட்டும் தான் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை.

Home Remedies for Erectile dysfunction

ஆண் மலட்டுத்தன்மை என்பது ஆணுறுப்பு விறைப்பு தன்மை அடையாமல் இருப்பதாகும். இதனால் உடலுறவில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்படும். இந்த பிரச்சனையை போக்க சில நாட்டு மருத்துவ குறிப்புகளை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமுக்குரா கிழங்கு சூரணம்

அமுக்குரா கிழங்கு சூரணம்

அமுக்குரா கிழங்கு சூரணத்தை 10 கிராம் எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர ஆன்மை பெருகும்.

ஆண்மை பெருக..

ஆண்மை பெருக..

அமுக்குரா கிழங்கு, நிலப்பனை கிழங்கு, சதாவரி, சாலாப்மிசிரி, முருங்கை விதை, பூனைக்காலி விதை, தாமரை விதை, அதிமதுரம், நெல்லி வற்றல், முருங்கைப் பிசின், நீர்முள்ளி விதை, மதனகாமப்பூ, திராட்சை, எள், தேற்றான்கொட்டை, அத்திப் பழம், பூமி சர்க்கரை கிழங்கு, பருத்திக் கொட்டை, பிஸ்தா, அக்ரோட் பருப்பு, வெள்ளரி விதை, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பூசணி விதை, பசும் பால் போன்றவை ஆண்மையை அதிகரிக்கும்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

ஜாதிக்காய் மனஅழுத்தத்தைப் போக்கும், பாலுணர்வைத் தூண்டும். ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ சாப்பிடலாம். இதை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து, இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சிக் குடிக்கலாம். இது நரம்புத் தளர்ச்சியை போக்கும்.

மாதுளம் பூ

மாதுளம் பூ

மாதுளம் பூவைப் பசும் பாலில் வேகவைத்து, சிறிது தேன் கலந்து அருந்தினாலும் ஆண்மை பெருகும். ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

முருங்கை பூ

முருங்கை பூ

முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும். முருங்கை அதீத மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு விட்டு பின்னர் பசும்பால் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். மலட்டுத்தன்மை நீங்கும்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழம் தினமும் சாப்பிட்டு வரலாம். இதனை பிரஸ் ஆன பழமாகவும் சாப்பிடலாம் அல்லது நாட்டு மருத்துக்கடைகளில் கிடைக்கும் டிரை ப்ரூட்டாகவும் சாப்பிடலாம்.

கருஞ்சீரகம்

கருஞ்சீரகம்

கருஞ்சீரக எண்ணெயை ஆணுறுப்பில் தடவி வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

ஓரிதல் தாமரை

ஓரிதல் தாமரை

ஓரிதழ் தாமரையை பொடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டுவர, நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies for Erectile dysfunction

Home Remedies for Erectile dysfunction
Subscribe Newsletter