Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்களுக்குத் தெரியாத சில உடல் ஆரோக்கியம் குறித்த உண்மைகள்!
இங்கு உங்களுக்குத் தெரியாத சில உடல் ஆரோக்கியம் குறித்த உண்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உடல் ஆரோக்கியம் மீது யாருக்கு தான் அக்கறை இருக்காது. அதிலும் நோய்கள் அதிகம் பெருகியுள்ள தற்போதைய உலகில் ஒவ்வொருவருக்கும் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது சற்று அதிகமாகவே பயம் இருக்கும். ஆகவே உடல் ஆரோக்கியம் பாழாகக்கூடாது என்று ஒருசில பழக்கங்களை நாம் பின்பற்றி வருவோம்.
உதாரணமாக, தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என நம்மில் பலர் பின்பற்றுவோம். இதுப்போன்று ஏராளமான உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும் சில செயல்கள் உள்ளன. இக்கட்டுரையில் உங்களுக்குத் தெரியாத சில உடல் ஆரோக்கியம் குறித்த உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உண்மை #1
மொபைல் போனைப் பயன்படுத்தும் போது, வலது பக்க காதை விட, இடது பக்க காதில் வைத்து பேசுவதே சிறந்தது. ஏனெனில் வலது பக்க காதில் வைத்து பேசும் போது, அது மூளைக்கு மிக அருகில் இருப்பதால், மூளை பாதிக்கப்படும்.
அதேப் போல் 10 சதவீதத்திற்கும் குறைவாக சார்ஜ் இருக்கும் போது போனில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அப்போது கதிரியக்கங்கள் 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.

உண்மை #2
மாத்திரைகளை எடுத்த பின்பு, உட்கார்ந்தவாறே இருப்பதோ அல்லது தூங்கவோ கூடாது. மாறாக, சிறிது தூர நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் சிறு வேலைகளைச் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த மாத்திரை உடலினுள் நன்கு செயல்படும்.

உண்மை #3
ஸ்ட்ராபெர்ரி மிகவும் சுவையான ஓர் பழம். ஆனால் பலருக்கும் அந்த ஸ்ட்ராப்பெர்ரி உடலில் உள்ள யூரிக் அமில அளவை நடுநிலையாக வைத்திருக்க உதவும் என்பது தெரியாது. யூரிக் அமிலத் தேக்கம் இருப்பவர்கள், வாரத்திற்கு மூன்று முறை ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடித்தால், உடனடி பலனைப் பெறலாம்.

உண்மை #4
நம்மில் பெரும்பாலானோர் பாலை விட காபியைத் தான் அதிகம் குடிப்போம். ஆனால் சிறுவயதில் இருந்தே தினமும் ஒரு டம்ளர் பாலைக் குடிக்கும் பழக்கம் இருந்தால், முதுமைக் காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

உண்மை #5
தினமும் அதிகளவு நீரைக் குடிப்பது நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் நாம் அடிக்கடி நீரைக் குடிப்போம். ஆனால் பகல் நேரத்தில் அதிகளவு நீரையும், இரவில் குறைவான அளவில் நீரையும் குடிப்பதே நல்லது. இதனால் செரிமானம் சீராக நடைபெறும்.

உண்மை #6
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்று சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் தினமும் சிறிது துளசியை சாப்பிட்டால், சில வகையான புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடித்து வந்தால், கொழுப்புக்கள் உடலில் தேங்குவது குறையும். ஆனால், இந்த பழக்கம் ஒருவருக்கு சிறுவயதில் இருந்தே இருக்க வேண்டும்.

உண்மை #7
நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமானால், தினமும் சிறிது செர்ரி பழங்களை சாப்பிடுங்கள். இதில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். மேலும் நரம்புகளை அமைதியுடன் வைத்துக் கொள்ளவும் உதவும்.

உண்மை #8
தினமும் சிறிது செலரியை உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறைவதோடு, புற்றுநோய் அபாயமும் குறைந்து, ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

உண்மை #9
சீஸில் உள்ள ட்ரிப்டோஃபேன் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையைப் போக்கும். மேலும் இது ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதத்தையும் குறைக்கும்.

உண்மை #10
எவ்வளவு நேரம் தூங்குவது நல்லது? பல ஆய்வுகளில் 10 pm - 4 am வரை தூங்குவது நல்லது என தெரிய வந்துள்ளது. ஆனால் நம்மில் பலர் இரவு 12 மணிக்கு தூங்கி, காலையில் 8-9 மணிக்கு எழுகிறோம். இப்பழக்கம் இப்படியே நீடித்தால், அது உடல் ஆரோக்கியத்தை தான் பாதிக்கும்.



Click it and Unblock the Notifications
