நாயை படுக்கை அறைக்குள் அனுமதிப்பவரா நீங்கள்? உஷார்!

Written By:
Subscribe to Boldsky

நாய் பிரியர்கள் தங்களது நாய்களை தங்களது வீட்டில் ஒருவராக நினைத்து, வீட்டிற்குள்ளேயே வளர்ப்பார்கள். செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் தனிமை பயம், கவலை போன்றவை இருக்காது. ஆனால் எதற்கும் வரைமுறை வகுத்து வைத்துக்கொள்வது நல்லது. என்ன தான் செல்லப்பிராணியாக இருந்தாலும், அதற்கென குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக்கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுக்கை அறையில்

படுக்கை அறையில்

படுக்கை அறையில் உங்களது நாய்களை வைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்களது படுக்கையில் நாய்களை வைத்துக்கொண்டு தூங்குவது வேண்டாம். படுக்கையில் நாய்களை வைத்துக்கொண்டு தூங்குவது உங்களது தூக்கத்தை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் உங்களது செல்லப்பிராணிகளுக்காக உங்களது தூக்க நேரத்தை பற்றி கவலைப்படுவதில்லையாம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஆனால் பலர் தங்களது செல்ல பிராணிகளுடன் ஒரே படுக்கையில் படுத்து தூங்கும் போது, பாதுகாப்பாகவும், வசதியாகவும் உணருகின்றனர். இது அவர்களுக்கு மன நிறைவை தருவதாகவும் இருக்கிறது.

ஆய்வு

ஆய்வு

இது பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 40 சதவீத ஆரோக்கியமான நபர்களுக்கு தங்களது நாய்களுடன் படுத்து தூங்குவதால் எந்த ஒரு ஆரோக்கிய குறைபாடும் ஏற்படுவதில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களால் நாய்களை அருகில் வைத்துக்கொள்ளாமல் உறங்க முடிவதில்லையாம்.

மாறிவிடும்

மாறிவிடும்

நாய்கள் படுக்கையில் இல்லாமல் தூங்குவது சிரமமாக இருந்தாலும், கூட காலப்போக்கில் இது பழகிவிடும் என்பதே உண்மை. பல நாய் பிரியர்கள் தற்போது தங்களது பழக்கத்தை மாற்றிக்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரமின்மை

நேரமின்மை

பலர் அதிக நேரத்தை தங்களது அலுவலகத்தில் கழிப்பதால், செல்லப்பிராணிகளுடன் தங்களது நேரத்தை கழிக்க முடிவதில்லை. எனவே இவர்கள் தங்களது செல்லப்பிராணிகளை படுக்கை அறையில் வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஆனால் படுக்கையில் வைத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

do not sleep with your dog with same bed

do not sleep with your dog with same bed
Story first published: Friday, September 15, 2017, 12:00 [IST]
Subscribe Newsletter