Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
விருக்ஷாசனம் செய்தால் உங்கள் கால்களை உறுதியாக்கலாம்!!
விளையாட்டு வீரர்களுக்கு கால்களின் உறுதி மிக முக்கியம். பலம் வாய்ந்த கால்களால் வெற்றியை இன்னும் உறுதியாக்கலாம். கால்களை வலுப்படுத்த உடற்ப்யிற்சிகள் எத்தனையோ உள்ளது.

உடற்பயிற்சிகள் எப்படி கால்களை பலப்படுத்துகிறதோ, அதற்கு யோகா சற்றும் சளைத்ததில்லை. யோகாவில் மனம் உடல் திடப்படுத்த பலவிதமான ஆசனங்கள் உள்ளன. இதில் விருஷாசனா கால்களை வலுப்படுத்துகிறது.

விருஷாசனா :
விருக்ஷம் என்றால் விருத்தி என்று என்று பொருள். குறுகிய கால்களிலிருந்து விரிந்த மரம் போல் இந்த ஆசனத்தை செய்வதால் இப்பெயர் பெற்றுள்ளது.

செய்முறை :
முதலில் கால்களை நேராக வைத்து தடாசனாவில் நிற்க வேண்டும். முதுகை நிமிர்ந்து வைத்திருக்க வேண்டும்.
பின்னர் இடது காலை மடக்கி வலது தொடையில் பதியுங்கள்.

செய்முறை :
சம நிலைப் படுத்தி ஸ்திரமாக நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக கைகளை மேலே தூக்கி நமஸ்காரம் செய்வது போல் வையுங்கள்.

செய்முறை :
கண்களை நேராக பார்க்கவேண்டும். ஆடாமல் சில நொடிகள் நில்லுங்கள்.பின்னர் கால்களை கீழே வைத்து இப்போது வலது காலை மடக்கி இதேபோல் செய்ய வேண்டும்.

பலன்கள் :
கால்கள் வலுப்படுத்த உதவும். புஜங்கள் விரிவடையும். மனதை ஒரு நிலைப்படுத்தமுடியும். முதுகில் நெகிழ்வுத்தன்மை உண்டாகும்.

குறிப்பு :
ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.



Click it and Unblock the Notifications
