ஏன் கழிவறை இருக்கையில் பேப்பர் வைத்து பயன்படுத்தக் கூடாது என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம் வீட்டில் ஒரு விருந்தாளி வந்து ஓரிரு நாட்கள் தங்கி நமது கழிவறையை தாறுமாறாக பயன்படுத்தினாலே, அதற்கு பிறகு அதே கழிவறைக்கு செல்ல சற்று யோசிப்போம். நன்கு கழுவிய பிறகு தான் பயன்படுத்துவோம்.

ஒரு மனிதர் ஆரோக்கியமாக இருக்கிறாரா, இல்லையா என்பதை அவர் ஒரு நாளுக்கு எத்தனை முறை கழிவறை செல்கிறார் என்பதை வைத்தே கண்டறிந்துவிடலாம். குறைந்தபட்சம் 2 - 3 முறை ஒருநாளுக்கு கழிவறை செல்வது இயல்பு.

This Is Why You Should Never Put Toilet Roll On The Seat

போகவே இல்லை அல்லது போய்க் கொண்டே இருக்கிறது எனில் உங்கள் குடல், வயிறு போன்ற உறுப்புகளில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்பது அர்த்தம். அதே போல கழிவறையில் சுகாதாரம் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆனால், சுகாதாரம் என்ற பெயரில் தவறு செய்யக் கூடாது அல்லவா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசௌகரியம்!

அசௌகரியம்!

பெரும்பாலும், நமது வீடுகள் அன்றி, வேறு வீடு, அலுவலகம், மால் போன்ற வெளி பொது இடங்களில் இருக்கும் கழிவறைகளை பயன்படுத்தும் போது, எத்தனை பேர் பயன்படுத்தினார்களோ என்ற அசௌகரியம் இருக்கும்.

இதற்காகவே, ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக பொது இடங்களில் கழிவறை பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில் பெண்களுக்கு எளிதாக பிறப்புறுப்பு தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

பேப்பர் பயன்பாடு!

பேப்பர் பயன்பாடு!

பெரும்பாலும் இன்று வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்களிலும் வெஸ்டர்ன் மாடல் கழிவறை தான் பயன்பாட்டில் அதிகம் இருக்கின்றன. இங்கு கழிவறை பயன்படுத்தும் போது பலர் கழிவறை பேப்பரை இருக்கயில் படர வைத்து பயன்படுத்துவார்கள். இம்முறை சுகாதாரமானது அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கழிவறை இருக்கை!

கழிவறை இருக்கை!

கழிவறை இருக்கையில் நம் தோல் பட்டாலே தொற்று ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தான் பலர் பேப்பரை பயன்படுத்துகின்றனர். ஆனால், உண்மையில் இதன் காரணத்தால் தான் கிருமிகள் தொற்று அதிகரிக்கின்றன.

ஆம், வெஸ்டர்ன் கழிவறை இருக்கைகள் பொதுவாகவே பாக்டீரியா அதிகம் பரவாத வண்ணம் தான் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், நாம் அதன் மீது நாம் படர்த்தும் பேப்பரானது எளிதாக பாக்டீரியாக்களை ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளது.

இதையும் தெரிஞ்சுக்கங்க...

இதையும் தெரிஞ்சுக்கங்க...

இதுமட்டுமின்றி, கழிவறையில் பாக்டீரியாக்கள் என்பது கழிவறை இருக்கையில் மட்டும் தான் இருக்கும் என நீங்கள் எண்ணுவது தவறு.

வீடுகளின் கழிவறையை விட, பொது கழிவறைகளில் அந்த அறையிலேயே காற்றில் அதிக பாக்டீரியாக்களின் தாக்கம் இருக்கும். நீங்கள் நுழைந்தாலே அந்த காற்றில் கலந்திருக்கும் பாக்டீரியா உங்களை தொற்றும்.

ஃப்ளஷ்!

ஃப்ளஷ்!

பொதுவாக ஒருவர் கழிவறை சென்ற பிறகு ஃப்ளஷ் செய்யும் போதே பாக்டீரியாக்கள் கழிவறையில் இருந்து அந்த அறை முழுதும் மிக வேகமாக பரவுகின்றன. இதனால் தான் வீடுகளில் கூட பல்துலக்கும் பிரஷ்களை கழிவறையில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Is Why You Should Never Put Toilet Roll On The Seat

This Is Why You Should Never Put Toilet Roll On The Seat
Please Wait while comments are loading...
Subscribe Newsletter