For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெங்கு காய்ச்சலைப் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை !!

|

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு சுமார் 40, 571 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 137 பேர் இறந்தனர்.

2015 ஆம் ஆண்டு 99913 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 220 பேர் இறந்தனர். 2016 ஆம் ஆண்டில் டெல்லியில் மட்டும் 171 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டனர். இது கடந்த ஐந்து வருடங்களில் இப்போது டெங்குவினால் பாதிக்கப்படவர்களின் விகிதம் டெல்லியில் மிகவும் அதிகமாகும். இவர்களில் ஐந்து பேர் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Symptoms of Dengue fever

இதனால் டெல்லியில் தேங்கும் நீரை அகற்றுவதில் அதிக கவனம் எடுக்க வேண்டும் என டெல்லி சுகாதார அமைப்புகள் இப்போது டெங்குவை கட்டுப்படுத்த தீவிரமாக செயல்படுகின்றன.

டெங்கு காய்ச்சலுக்கு காரணம் :

டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலம் பரவும் விஷக் காய்ச்சல். ரத்தத்தில் ரத்தத் தட்டுக்களின் அளவு மிகவும் குறைந்து போய், உயிருக்கு உலை வைக்கும். இது மழைக்காலங்கலில் அதிகமாக பரவக் கூடியது.

இந்த காய்ச்சல் கொசுக்களின் மூலம் பரவுகிறது. இதற்கு பெண் கொசுவான ஏட்ஸ் கொசுவே காரணம். டெங்கு வைரஸினால் நான்கு விதமான தொற்றுக்கள் பரவுகின்றன. DEN 1, DEN 2, DEN 3 and DEN 4 என்பவைகளாகும்.

எப்படி பரவுகிறது. :

பெண் கொசுவான ஏட்ஸ் கொசுவின் லார்வாக்கள் நல்ல நீரில்தான் உருவாகின்றன. கழுவு நீரில் உருவாவதில்லை. தேங்கப்பட்ட நல்ல நீர்கள் உபயோகப்படுத்தாமல் இருந்தால் அவற்றில் இதன் முட்டைகள் உருவாகின்றன.

இவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை. மாறாக ஒரு இடத்தில் இந்த கொசுக்கள் உருவானால் வேகமாக மற்றொரு இடத்திற்கும் இந்த கொசுக்கள் பரவுகின்றன.

இந்தகொசுக்கள் இரவில் கடிப்பதில்லை. பகலில்தான். குறிப்பாக காலை வேளைகளிலும், மாலைகளிலும் கடிக்கின்றன. ஆதலால் அந்த சமயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதன் அறிகுறிகள் :

பொதுவாக டெங்கு கொசுக்கள் வெள்ளை உடல் பகுதியை கொண்டிருக்கும். மற்ற சாதரண வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களினால் உண்டாகும் காய்ச்சல் 1 வாரம் வரைதான் இருக்கும். டெங்கு கொசுக்கள் கடித்த 3-15 நாட்களுக்குள் காய்ச்சல் உண்டாகும். காய்ச்சலில் தீவிரம் குறைந்தது 10 நாட்களுக்கும் மேலாக இருக்கும்.

இரத்தப் போக்கு, வாந்தி, தொடங்கி, ரத்த ஓட்டத்தை கடுமையாக பாதிக்கும். கீழ்கண்ட அறிகுறிகள் 3 நாட்களுக்கும் மேல் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது அவசியம்.

திடீரென கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் சிவந்த தடிப்புகள் காணப்படுதல், கடுமையான தலைவலியுடன் கண்கள் வலி எடுத்தல், மூட்டு இணைப்புகள் கை, கால்களில் வலி, வாந்தி, மயக்கம் ஆகியவை உண்டாகும்.

எப்படி தடுக்கலாம் :

கட்டாயம் தேங்கும் நீர்களை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது உடனுக்குடன் உபயோகப்படுத்த வேண்டும். சாலையில் கிடக்கும் பாட்டில்கள், அட்டைகள், இள நீர் தொட்டிகள் போன்றவற்றில் மழை நீர் தங்கினால் கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாகிவிடும்.

வீட்டில் அழகிற்காய் வைக்கும் பூப் பாத்திரங்களில் உள்ள நீரை தினமும் மாற்ற வேண்டும். நீர் நிரம்பியுள்ள பாத்திரங்களை மூடியே வைக்க வேண்டும். கொசு கடிக்காத வகையில் களிம்புகளை உடலில் பூசிக் கொள்ளுங்கள். கொசுவை விரட்டும் சாடனங்கலை உபயோக்ப்படுத்துங்கள்.

டெங்குவை தடுக்கும் மற்றொரு உணவு மருந்து நில வேம்பு. நிலவேம்பு பொடியை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அருந்துங்கள். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

English summary

Symptoms of Dengue fever

Symptoms of Dengue fever
Desktop Bottom Promotion