மார்பக புற்று நோயைப் பற்றி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை !!

Written By:
Subscribe to Boldsky

மார்பக புற்று நோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்று நோய்களில் ஒன்று. இதனை ஆரம்ப நிலையிலேயே கவனித்துவிட்டால் சிரமமே இல்லாமல் எளிதாய் குணப்படுத்திவிடலாம்.

Symptoms of breast cancer

மற்ற புற்று நோய்களைப் போள் காலதாமதமாக இதன் அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. ஆரம்பத்திலேயே தெரிய வந்துவிடும். எனவே அவ்வப்போது நீங்களாகவே பரிசோதனை செய்வது மிகவும் நல்லது. அவ்வகையில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை கீழே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுய பரிசோதனை எப்படி செய்து கொள்வது ?

சுய பரிசோதனை எப்படி செய்து கொள்வது ?

மார்பை கழுவி லேசாக சோப்பை போட்டு அதன் பின் மார்பை பரிசோதித்தால் சிறு கட்டிகள் இருந்தாலும் எளிதாய் கையில் அகப்படும். எனவே வீட்டிலேயே செய்யும்போது இவ்வாறு செய்து பாருங்கள்.

மார்பில் சிறு கட்டிகள் :

மார்பில் சிறு கட்டிகள் :

உங்கள் மார்பை அழுத்தும் போது உருண்டையாக சிறி சிறு கட்டிகள் தென்படுகிறதா? மாதவிடாய் சமயத்தில் இவ்வாறு சிறு உருண்டைகள் தென்படுவதுண்டு.

அதனை குழப்பிக் கொள்ளாதீர்கள். எப்ப்பதும் இருந்தால் அவசியம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கடினமாக இருந்தால் :

கடினமாக இருந்தால் :

மார்பகம் வழக்கத்திற்கு மாறாக தடிமனாக கெட்டியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

மார்பக வலி :

மார்பக வலி :

மார்பகத்தில், தாங்க முடியாத வலி இருந்தால் உடனடியாக கவனியுங்கள். சிலருக்கு மாதவிடாய் சமயத்தில் வரும். அது சாதரணமானதே. ஆனால் வலி தொடர்ந்தால் உடனே கவனிக்கவும்.

காம்பில் நீர் வடிகிறதா?

காம்பில் நீர் வடிகிறதா?

மார்பக காம்பில் மஞ்சள் போன்ற திரவமோ அல்லது நீரோ வடிந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

சிலருக்கு குழந்தை பிறந்து சில வருடங்களுக்கு மார்பக காம்பில் இது போல் திரவம் வரலாம். ஆனாலும் பரிசோதித்திக் கொள்வது முக்கியம்

சரும எரிச்சல்?

சரும எரிச்சல்?

மார்பகத்தை சுற்றிலும் சரும எரிச்சல் இருந்தாலும் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனென்றால் மார்பகத்தில் உண்டாகும் எரிச்சலும் புற்று நோயின் முக்கியமான அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms of breast cancer

Symptoms of breast cancer that every woman should know about and must get it examined once they find the same.
Story first published: Thursday, October 27, 2016, 7:00 [IST]
Subscribe Newsletter