Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
மஞ்சளை எப்போதெல்லாம் உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என தெரியுமா?
மஞ்சள் ஓர் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள மருத்துவ உணவுப் பொருளாகும். பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள் மஞ்சளை நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
மஞ்சள் இயற்கையாகவே உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் உடற்சக்தி அதிகரிக்க உதவுகிறது.

எச்சரிக்கைகள்:
1) பித்தப்பை கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை தவிர்ப்பது நல்லது. மஞ்சள் பித்தப்பை பிரச்சனையை பெரிதாக்கும் தன்மை உடையது.
2) மஞ்சள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் திறன் உடையது. எனவே, குறைந்த இரத்த சர்க்கரை அளவு பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை தவிர்க்க வேண்டும்.
3) மஞ்சளை அதிகளவு உணவில் சேர்ப்பது, இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
4) அதிகமாக மஞ்சளை சேர்ப்பது கருவளத்தில் குறைப்பாட்டை உண்டாக்கும் இதனால், குழந்தை பெற்றுக் கொள்ள இருக்கும் தம்பதிகள் மஞ்சளை அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
5) இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சளை தவிர்த்துவிடுங்கள். இதனால், வயிறு சார்ந்த கோளாறுகள் ஏற்படலாம்.
மஞ்சளை எந்தெந்த உணவில் சேர்த்து சமைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என இனிக் காணலாம்...
முட்டை பொரியல், டோஃபுபோன்ற உணவுகளில் மஞ்சள் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இது உணவில் வண்ணம் சேர மட்டுமின்றி, ருசி மற்றும் ஆரோக்கியமும் அளிக்கிறது.
வறுத்து சமைக்கும் காய்கறி உணவுகளில் லேசாக மஞ்சளை தூவி சமைத்து சாப்பிடலாம். இத்துடன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லது. காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, மற்றும் வேர் காய்கறிகள் இதை நீங்கள் பின்பற்றலாம்.
காலே, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளை வேகவைத்து சாப்பிடும் போது லேசாக அதன் மேல மஞ்சள் சேர்த்து உண்ணலாம். மேலும், சைவம் மற்றும் அசைவ சூப்களில் கூட மஞ்சள் சேர்ப்பது நல்லது.
சளி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு பிரச்சனை உள்ளவர்கள் பால் / தேநீர் பருகும் போது அதில் சற்று மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் பெறலாம்.
அசைவ பிரியர்கள் சில்லி, கபாப், பர்கர் போன்ற உணவுகளில் மஞ்சள் சேர்ப்பது ஆரோக்கியத்தை தாண்டி, ருசியையும் அதிகரிக்க உதவும். மேலும், நீங்கள் இஞ்சி சேர்க்கும் அனைத்து உணவுகளிலும் மஞ்சளை சேர்க்கலாம்.
மருத்துவ நற்குணங்கள் கொண்டுள்ள மஞ்சளை, இஞ்சி மட்டுமின்றி, பூண்டு, வெங்காயம் சேர்க்கும் உணவுகளிலும் சேர்த்து உண்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


