Latest Updates
-
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
ஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா? இதப்படிங்க!!!!
உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான். ஒரு அங்குலம் கூட நகராமல், காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்கிறோம்.
ஆனால், உணவு மட்டும் அதே அளவு கலோரிகள் குறையாமல் உட்கொள்கிறோம். இதனால் கலோரிகள் கரையாமல் உடலில் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. டயட் மற்றும் அன்றாட வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதால் நீங்கள் உடல் பருமனை கட்டுபடுத்த முடியும்.....

நீராகாரம்
நாள் முழுதும் சரியான அளவு தண்ணீர் பருகுவது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. முக்கியமாக சிட்ரஸ் ஜூஸ் போன்றவை. இவை எப்போதும் வயிறு நிறைந்த உணர்வை தரவல்லது. இதனால் நீங்கள் அதிகமாக உட்கொள்ளும் முறையை தவிர்க்க முடியும்.

ஷேக் டயட்
ஷேக் ட்ரிங்க்ஸ் பருகுவது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தந்து, உடல் எடை அதிகரிக்காமலும் இருக்க உதவுகிறது. மேலும் இதனால் உடலில் அளவுக்கு அதிகமான கலோரிகள் சேராமல் பாதுகாத்து, உடல் பருமன் அடையாமல் இருக்கலாம்.

படிகள்
லிப்ட், எலிவேட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்த துவங்குங்கள். உட்கார்ந்தே வேலை செய்யும் முறையை கடைபிடிக்கும் நாம் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதால் மட்டும் தான் கலோரிகளை கரைக்க முடியும்.

வார இறுதியில் உடற்பயிற்சி
வாரம் ஐந்து நாள் வேலைக்கு செல்பவர்கள் நேரம் கிடைக்கவில்லை என உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை. குறைந்தபட்சம் வார இறுதியிலாவது உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் உடல்பருமன் அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.

ஏழு மணிக்கு இரவு உணவு
கட்டாயம் இரவு ஏழு மணிக்கே இரவு உணவை உட்கொள்ளும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். உணவருந்திய பிறகு குறைந்தபட்சம் 1-2 மணிநேரம் கழித்து தான் உறங்க செல்ல வேண்டும். இதனால் கலோரிகளை கரைக்க முடியும். இல்லையேல் இரவு உணவருந்திய கலோரிகள் முழுமையாக கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கும்.

பசியுடன் இருக்க வேண்டாம்
பசியுடன் இருந்து சாப்பிட வேண்டாம். இதனால் நீங்கள் அதிக கலோரிகளை உட்கொள்ள நேரிடலாம். எனவே, பசிக்கும் முன்னரே சரியான நேரத்திற்கு உணவருந்தும் முறையை கடைப்பிடிக்க துவங்குங்கள்.

கலோரி அறிந்து உண்ணுங்கள்'
பெரும்பாலும் நாம் மூளைக்கு வேலை தந்து தான் இப்போது உழைத்து வருகிறோம். உடல் உழைப்பு குறைவாக இருக்கும் போது கலோரிகள் அதிகம் உட்கொண்டால் கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்க தான் செய்யும்.



Click it and Unblock the Notifications