Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
அடிக்கடி நோய்வாய்படறீங்களா? இந்த மாஸ்கோ தெரபி செய்யுங்க!!
நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் பலவித தொற்றுக்களுக்கு நோய்களுக்கு ஆளாக நேரிடும். எப்பவும் உடல் நோயோடு இருந்தால் நன்றாகவா இருக்கும். உடல் பலம் தான் மனோபலத்தை இரட்டிப்பாக்கிறது.
உடல்தான் எல்லா வெற்றிகளுக்கும் ஆதாரம். உடலை பலமாக வைத்துக் கொள்ள ஆரோக்கியம் முக்கியம். ஆரோக்கியம் என்பது நோய்களை தூர விரட்டும் சக்தி. அவ்வளவே .
நீங்கள் அடிக்கடி நோய்வாய்படுகிறீர்களா? எப்போதும் உடல் சோர்வு உங்கள் அன்றாட வாழ்க்கையை முடக்குகிறதா? அப்படியென்றால் உங்களுக்கு இந்த மாஸ்கோ தெரபி மிகவும் பலமாக இருக்கும். என்னவென்று பாருங்கள்.

மாஸ்கோ தெரபி -1
செர்கி பைப்னோவ்ஸ்கி என்ற விரிவுரையாளர் ஒரு சிறந்த மாஸ்கோ சினோ தெரபி வல்லுநர். இவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு தெரபியை கண்டுபிடித்துள்ளார்.

செய்முறை -1
ஒரு அகன்ற டப்பில் 10- 15 செ.மி. குளிரூட்டப்பட்ட நீரை அல்லது ஐஸ் கட்டி போட்ட நீரை ஊற்றவும். குளிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

செய்முறை-2
இதில் உங்கள் பாதங்களை அமிழ்த்துங்கள். நீருக்குள் பாதத்தை முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டு இருங்கள்

செய்முறை- 3
15 நொடிகளுக்கு பின் கால்களை எடுத்து, நன்றாக ஒரு கெட்டி துணியில் அழுந்த துடையுங்கள். பின்னர் உல்லன் சாக்ஸை அணிந்து கொள்ளவும்.

குறிப்பு -1
இந்த தெரபியை தினமும் இரவில் படுப்பதற்கு முன் இதுபோல் செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பு -2
மிகவும் நோய்வாய்ப்படுபவர்கள் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை செய்யவும். இதனால் விரைவில் உடல் நலம் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications
