For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ஹெலிகாப்டர் பெற்றோரா' நீங்கள்?: அதிக அக்கறை ஆபத்து

By Mayura Akilan
|

Helicopeter Parent
குழந்தைகளை பாதுகாப்பாக கவனித்துகொள்கிறேன் என்ற எண்ணத்தில் அதீத அக்கறையுடன் செயல்படும் பெற்றோரா நீங்கள் ? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான். அதீக அக்கறை ஆபத்தாக முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஹெலிகாப்டர் பெற்றோர்கள்

குழந்தை எங்கே கீழே விழுந்து காயம்பட்டுக் கொள்ளுமோ என்று மேற்கண்ட பெற்றோர் கருதி விளையாடாமல் தடுப்பதால், அவர்களின் எடை கூடும் அபாயம் அதிகரிக்கிறதாம். இப்படி பிள்ளைகள் குறித்து எதற்கெடுத்தாலும் பயப்படும், அதீத அக்கறை காட்டும் தாய்- தந்தையரைத்தான் ஹெலிகாப்டர் பெற்றோர் என்கிறார்கள்.

இதுதொடர்பான ஆய்வை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இவர்கள் அமெரிக்காவில் 20 பூங்காக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். பூங்காவுக்கு வரும் குடும்பங்களைக் கவனித்தனர். அங்கு வந்துள்ள குழந்தைகளை, விளையாடாமல் அமைதியாக உட்கார்ந்திருப்பவை, ஓரளவு ஓடியாடுபவை, ரொம்பத் தீவிரமாக விளையாடுபவை என்று தரம் பிரித்தார்கள்.

அப்போது, அதிக அக்கறை பெற்றோர் தங்கள் குழந்தைகள் அதிகம் ஓடியாடாமல், விளையாட்டு அமைப்புகளில் ஏறி விளையாடாமல் பார்த்துக் கொண்டனர். குழந்தைகள் இயல்பாக விளையாடுவதைத் தடுத்த இந்தப் பெற்றோர், அவர்களை பெஞ்சுகளில் உட்கார வைப்பதில் கவனமாக இருந்தனர். இதனால் குழந்தைகள் சுறுசுறுப்பு தன்மை குறைந்தது.

அதீத அக்கறை ஆபத்து

இந்த ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான ஜேசன் பொக்காரோ, இன்று பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிகக் கவலை கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவேதான் அவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த கண்காணிப்பினால், குழந்தைகள் தங்கள் சமவயது நண்பர்கள், அண்டை அயலாருடன் விளையாடும் வாய்ப்புக் குறைகிறது. தொலைக்காட்சி அல்லது கணினி முன்னிலையிலேயே உட்கார்ந்திருக்கும் நிலை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.

பெற்றோர்களுக்கு எல்லை

தங்கள் ஆய்வின் அடிப்படையில், கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள், பொதுப் பூங்கா அமைப்பை வடிவமைக்கலாம், அதன் மூலம் பெற்றோரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் குழந்தைகளை நெருங்க முடியாமல், அமர்ந்து கண்காணிக்கும் வகையில் செய்யலாம் என்று கூறியுள்ளனர்.

English summary

'Helicopter parents' raising marshmallow kids | 'ஹெலிகாப்டர் பெற்றோரா' நீங்கள்?

Helicopter parents hover around, making sure their children are wrapped in cotton wool. Teachers are scared of outdoor excursions because of being sued if something goes wrong. It's easy to understand why so many children are afraid to take risks, prefer to play it safe and are scared of doing anything dangerous because they might get hurt.
Story first published: Friday, January 13, 2012, 10:13 [IST]
Desktop Bottom Promotion