Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வயிறு நோய் தீர்க்கும் காட்டுக்கொட்டைக் கிழங்கு!

தாது விருத்தி சூரணம்
இக்கிழங்கை துண்டுகளாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைத்து இடித்து தூளாக்கி சலித்து சூரணமாக தயாரிக்கலாம். இந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட தாது விருத்தியாகும். போக சக்தியைத் தூண்டும். இதனால் சிறுநீரகம் தொடர்புடைய நோய்களும் தீரும். வாதம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
சளி, கபம் குணமடையும்
இந்த கிழங்கின் சூரணத்தை தேனில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர கபம் நோய் குணமடையும். இஞ்சி சாற்றுடன் இந்த சூரணத்தை கலந்து சாப்பிட கபம் குணமடையும்.
அஜீரணத்தால் பசியின்மை ஏற்படும். இதனால் சாப்பிடவும் பிடிக்காது. இந்த நிலையில் காட்டுக்கொட்டைக்கிழங்கின் சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் போகும். அஜீரணம் சரியாகி பசி ஏற்படும். சீரகத்துடன் இத்தூளை சேர்த்து கஷாயம் போட்டும் சாப்பிடலாம்.
வயிற்றில் கசடு நீங்கும்
வயிற்றில் சேர்ந்துள்ள கசடுகளை நீக்க இதனை மலமிளக்கியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். இக்கிழங்கை பச்சையாக அரைத்து சிறிதளவு இளஞ்சூடான நீரில் கலந்து சாப்பிட்டால் இதனால் நன்றாக பேதியாகும். வயிற்றில் உள்ள கசடுகள் வெளியேறும். வாயுக்கள் வெளிப்படும். இதனால் ஆரோக்கியம் ஏற்படும்.
பேதி அதிகமானலோ, பேதியை நிறுத்த வேண்டும் என்றாலோ, புளித்த மோரையோ, எலுமிச்சம் பழச் சாற்றையோ சிறிது அருந்தினால் பேதி நின்றுவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
