Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும்
உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயை குணப்படுத்தும் மீன் எண்ணெய்

குழந்தைகளுக்கு சிறப்பான உணவு
படிக்கும் குழந்தகளுக்கு மீன் உணவு ஒரு மிகச் சிறந்த உணவு என்கின்றனர் ஆய்வாளர்கள். அதில் உள்ள டிஹெச்ஏ சத்தானது மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மீன் எண்ணெயில் டிஹெச்ஏ சத்து அதிகம் உள்ள மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அதிகம் பயனளிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உடல்பருமன் குறையும்
உடல் பருமனாக உள்ளவர்களின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மீன் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமனாக உள்ள 13 முதல் 15 வயதுக்குப்பட்ட 78 இளைஞர்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினருக்கு தினமும் பிரெட் உடன் 1.5 கிராம் மீன் எண்ணெய் சேர்த்து வழங்கப்பட்டது. இதுபோல் மற்றொரு பிரிவினருக்கு பிரெட் உடன் வெஜிடபிள் ஆயில் வழங்கப்பட்டது. பின்னர் 16 வாரங்கள் கழித்து அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு பரிசோதிக்கப்பட்டது.
உயர் ரத்த அழுத்தத்துக்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது மீன் எண்ணெய் சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை குறைந்திருந்தது. ஆனால் வெஜிடபிள் ஆயில் சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் குறையவில்லை. எனவே உடல் பருமனாக உள்ள இளைஞர்கள், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க மீன் எண்ணெய் தொடர்ந்து சாப்பிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ரத்தப் புற்றுநோய் கட்டுப்படும்
மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மம் ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது. பின்னர் பரிசோதித்தபோது அந்த எலிகள் அனைத்தும் குணமடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என இந்திய ஆராய்ச்சியாளர் சந்தீப் பிரபு தெரிவித்துள்ளார்.
எனவே நோய்களை கட்டுப்படும் மீன்களையும், மீன் எண்ணெய்களையும் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications