For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சரைப்பெட்டியில் மருந்து இருக்கையில் அஞ்ச வேண்டாம்

By Mayura Akilan
|

Household Remedies
அடுப்பங்கரையில் உள்ள அஞ்சரைப்பெட்டியில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டுமல்ல உடல் நலம் காக்கும் உண்ணத மருந்தாகவும் பயன்படுகிறது. கடுகு,சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் என வகை வகையாய் இடம் பெற்றிருக்கும் அஞ்சரைப்பெட்டியை அருமருந்து பெட்டி என்றே கூறலாம்.

மஞ்சள்

நோய் எதிர்ப்பு குணம் மஞ்சளில் அதிகம் உண்டு. வயிற்றுப் புண்களை குணமாக்கும். உடலில் அடிபட்ட காயங்களில் சிறிதளவு மஞ்சளை எடுத்து பூசினால் ரணம் குறையும். சளியை போக்கும்

கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்பார்கள். அந்தளவிற்கு நோய் தீர்க்கும் சக்தி கடுகுக்கு உண்டு. அனைத்துவகை உணவுப் பொருளும் சமைத்து முடித்தவுடன் சுவைக்காக தாளித்து கொட்டப்படும் கடுகு விஷபேதி, வயிற்றுவலி,ஜன்னி போன்ற நோய்களுக்கு ஏற்றது.

வெந்தயம்

உடல் சூட்டை குறைக்கும். நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும்

சீரகம்

உடலின் உள்ளே உள்ள நச்சுக்களை அகற்றுவதில் சீரகத்திற்கு ஈடு இணை இல்லை. இது அஜீரணம்,வயிற்றுவலி, பித்தமயக்கம் முதலிய நோய்களை போக்கும்.

மிளகு

திரிகடுகத்தில் ஒன்றாகிய மிளகு வயிற்றுக் கோளாறுகளை சீராக்கி பசியை அதிகரிக்கச்செய்யும். இது தொண்டை கமறலுக்கும், மூலரோகங்களுக்கும் ஏற்றது.

பெருங்காயம்

சாம்பார், ரசம் முதலியவற்றில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பெருங்காயம் வயிறு தொடர்பான நோய்களைப் போக்கும். வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி போன்ற நோய்களுக்கு ஏற்றது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாதாரணமாக இவற்றை கொடுக்கலாம்.

லவங்கம், கிராம்பு

அசைவ சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை அஜீரணத்தைப் போக்கும், வாந்தியை நிறுத்தும்.

English summary

Household Remedies for Common Ailments and Domestic Emergencies | அஞ்சரைப்பெட்டி இருக்க அச்சம் எதற்கு?

Just as there is no clear dividing line between food and medicine, there's also no dividing line between cooking spices and medicinal herbs. The astute herbalist must be resourceful and versatile, and ready to use whatever is at his disposal in the service of healing.
Story first published: Friday, December 2, 2011, 14:14 [IST]
Desktop Bottom Promotion