Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
நினைவாற்றலை அதிகரிக்கும் ஜின்கோ மாத்திரை

சரஸ்வதியைப் போல மூளையைத் தூண்டிவிடுவதால் புத்தியை தீட்சண்யமாக கூர்மையாக ஆக்குவதால் வல்லாரைக்கு ப்ராமி என்ற பெயரைக் கொடுத்துள்ளார்கள்.
இதேபோல் ஜின்கோ எனப்படும் சீனாவில் வளரும் மரத்தின் இலைகள் மூளை நரம்புகளை சுறுசுறுப்பாக செயல்படுத்துகிறது. பூமியில் உள்ள மரங்களிலேயே மிகப்பழமையான மரமான ஜின்கோ சீனாவைத் தவிர தற்பொழுது ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஆகிய நாடுகளின் பெரும் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.
இலைகள் பசுமை அல்லது மஞ்சள் வண்ண முடையவை. இலைகள், விதைகள் மருத்துவப்பயன் கொண்டவை. இலைகளும், கனிகளும், இலையுதிர்காலத்தில் சேகரிக்கப்படுகின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இம்மரத்தின் மருத்துவப்பயன்களுக்கு காரணமாக உள்ள வேதிப்பொருட்கள் ஃபிளேவனாய்டுகள், ஜின்கோலைடுகள், பைலோபலைடுகள்
மூளை நரம்புகளுக்கு வலுவூட்டும்
இலைகள் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி நினைவாற்றலையும், கவனத்தினையும் அதிகரிக்கிறது. வயோதிக ஞாபக மறதிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மிக அதிகமாக விற்பனையாகும் தாவரமருந்து ஜின்கோ, பல மில்லியன் மத்திய வயதினர் முதல் வயோதிகர்கள் வரை தினமும் ஜின்கோ மத்திரைகளை உட்கொள்கின்றனர்.
ஜின்கோ பிலோபா மூளை, கால்கள், இடுப்பின் உட்புறம் ஆகிய இடங்களில் உள்ள ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும். கோவார்க்டேஷன் எனப்படும் கண்டிஷனுக்கு இதைக் கொடுப்பார்கள். பக்கவாத நோய்களுக்குக் கூட மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
சிறுநீர் நோய்களுக்கு மருந்து
இலைகள் ரத்த ஓட்டத்தினை தூண்டி வலுவேற்றி மருந்தாகிறது. ஆஸ்த்மா மற்றும் அலர்ஜிக்கு எதிரான செயல்புரிகிறது. தசைபிடிப்பு வலி போக்க வல்லது. ஆக்ஸிகரணத்திற்கு எதிரானது. ரத்த அடர்த்தி அதிகரித்து உறைவதை தடுக்க வல்லது ஆஸ்துமாவை குணப்படுத்தும்.
விதைகள் ஊது மூச்சு ( Wheezing) விடுதலை தடுத்து சளியினை போக்குகிறது. பெண்களின் வெள்ளைப்போக்கினை தடுக்கவும், சிறுநீர்ப்போக்கு நோய்களுக்கும் மருந்தாகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
