Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அடிக்கடி உடலின் இந்த பகுதிகளில் வலிக்குதா? அப்ப இந்த உறுப்பு மோசமா இருக்குன்னு அர்த்தம்.. ஜாக்கிரதை..
Symptoms Of Thyroid Problem In Tamil: நமது உடலில் உள்ள தைராய்டு என்னும் சுரப்பியானது மிகவும் முக்கியமானது. இந்த தைராய்டு சுரப்பி கழுத்தின் முன்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்துள்ளது. இந்த சுரப்பி தான் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு முக்கிய காரணமாகும்.
எப்போது இந்த தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறதோ, அது இரண்டு வகையான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. அவை ஹைப்போதைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு.

இப்படி தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், அது உடலின் பல்வேறு உறுப்புக்களில் வலியை உண்டாக்கும். இந்த வலிகளுக்கு உடனடி சிகிச்சையை வழங்க வேண்டியது முக்கியம். இப்போது தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்களின் அளவு அதிகரித்தால், உடலின் எந்த பகுதிகளில் எல்லாம் ஒருவர் வலியை அனுபவிக்கக்கூடும் என்பதைக் காண்போம்.
கழுத்து
தைராய்டு பிரச்சனை தீவிரமாகும் போது, அது வெளிப்படுத்தும் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறி தான் அடிக்கடி கழுத்து வலியை சந்திப்பது. அதுவும் தைராய்டு சுரப்பி கழுத்துப் பகுதியின் முன்புறத்தில் அமைந்திருப்பதால், முதலில் தைராய்டு சுரப்பியில் பிரச்சனை இருந்தால், கழுத்தில் அதன் அறிகுறி தெரியும். அதுவும் கழுத்துப் பகுதியில் வலியை சந்திப்பதைத் தவிர, கழுத்துப் பகுதியைச் சுற்றி வீங்கியிருப்பது போன்று காணப்படும். இப்படி இருந்தால் தைராய்டு சுரப்பியில் பிரச்சனை உள்ளதென்று அர்த்தம்.
தாடை மற்றும் காது வலி
தாடை மற்றும் காது பகுதிகளில் வலியை அனுபவித்தால், தைராய்டு ஹார்மோன்களின் அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் இந்த வலியானது முதலில் கழுத்துப் பகுதியில் தொடங்கி அப்படியே மெதுவாக பரவும். இந்த அறிகுறிகளை ஒருவர் புறக்கணித்தால், பின் தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே கழுத்து மற்றும் தாடை பகுதிகளில் வலியை அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மூட்டு வலி
மூட்டுப் பகுதிகளில் வலியை சந்திப்பது தைராய்டு பிரச்சனையினாலும் இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் சப்அக்யூட் தைராய்டிடிஸ் வழக்குகளில், நோயாளிகள் மூட்டு வலியால் அவதிப்பட நேரிடும். அதுவும் இந்த மூட்டு வலியானது மெதுவாக முழங்கால்களுக்கும் பரவி மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். எனவே ஒருவர் தொடர்ச்சியாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தால், உடன மருத்துவரை அணுகுங்கள்.
பாதங்கள்
கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பிக்கும், பாதங்களில் ஏற்படும் வலிக்கும் எப்படி சம்பந்தம் இருக்கும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்களின் அளவுக்கு அதிகரிக்கும் போது, அது பாதங்களில் கடுமையான வலியை உண்டாக்கும். அதுவும் பாதங்கள் அசௌகரியத்துடன் இருப்பதோடு, கால்களில் எரிச்சலை சந்திக்க நேரிடும். குறிப்பாக நீண்ட தூரம் நடக்கும் போது அல்லது நிற்கும் போது இந்த வலியை அனுபவிகக நேரிடும்.
தசை வலி
கூடுதலாக தைராய்டு நோயாளிகளிடையே காணப்படும் மற்றொரு வலி தசை வலி. இந்த தசை வலியை நிறைய பேர் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் தசை வலியானது தைராய்டு பிரச்சனைகளின் அறிகுறிகளுள் ஒன்று. எனவே இம்மாதிரியான வலியை சந்தித்தாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications