Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க காதுகளில் இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்களுக்கு இந்த புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்...
Symptoms Of Throat Cancer In Tamil: உலகிலேயே இதய நோய்க்கு அடுத்தப்படியாக அதிக மரணத்திற்கு காரணமாக புற்றுநோய் உள்ளது. இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தொண்டை புற்றுநோய். இந்த வகை புற்றுநோயில் புற்றுநோய் செல்களானது தொண்டையில் வளர ஆரம்பிக்கும். புற்றுநோயானது மரபணுக்களில் பிறழ்வு ஏற்பட்டு, செல்கள் கட்டுப்பாட்டில்லாமல் வளர்ச்சி அடையும் போது ஏற்படுகிறது.
இப்படி கட்டுப்பாடில்லாமல் வளர்ச்சி அடையும் செல்கள் தொண்டையில் ஒரு கட்டியை உருவாக்கி தொண்டை புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று மயோ கிளினிக் கூறுகிறது. ஆயினும், இப்படி தொண்டை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பிறழ்வுகள் எதனால் ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. Cancer.net-ன் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 184,615 பேர் குரல்வளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவை தொண்டை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன?
தொண்டைப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் குறிப்பிட்ட காரணிகள் உளளன. மயோ கிளினிக்கின் கூற்றுப்படி, சிகரெட் பிடிப்பது, புகையிலையை மெல்லுவது, அதிகப்படியான மதுபானம், வைரல் தொற்றுகள், போதுமான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளாமல் இருப்பது, இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) மற்றும் குறிப்பிட்ட நச்சுப் பொருட்களை வெளிப்படுத்தும் வேலையை செய்வது போன்றவை அடங்கும்.
தொண்டை புற்றுநோய் மட்டுமின்றி, எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும், அவற்றை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளிக்க எளிமையாகவும் இருக்கும் மற்றும் புற்றுநோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கவும் முடியும். அதற்கு முதலில் புற்றுநோயின் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தொண்டை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
தொண்டை புற்றுநோய் இருந்தால் அதன் ஆரம்ப கால அறிகுறிகள் காதுகளில் தெரியும். அதுவும் காதுகளில் அடிக்கடி அல்லது தொடர்ச்சியான வலியை அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக தொண்டையில் வலியை அல்லது உணவுகளை விழுங்குவதில் சிரமப்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தொண்டை புற்றுநோயின் பிற அறிகுறிகள்
கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, தொண்டை புற்றுநோய் இருந்தால், பின்வரும் அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
* தொண்டையில் வலி அல்லது உணவை விழுங்குவதில் சிரமம்
* இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக தொண்டையில் கரகரப்பு நீடித்திருக்கும்
* தொண்டை அல்லது வாயின் பின்புறத்தில் கட்டிகள்
* கழுத்துப் பகுதியில் கட்டிகள்
* இரண்டு வாரத்திற்கும் மேலாக காது வலி நீடித்திருக்கும்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் தொண்டை புற்றுநோய் தான் உள்ளது என்று அர்த்தமல்ல. இந்த அறிகுறிகள் வேறு பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாகவும் உள்ளன. எனவே இந்த அறிகுறிகள் 2 வாரத்திற்கும் அதிகமாக நீடித்திருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
தொண்டை புற்றுநோயைத் தடுப்பது எப்படி?
தொண்டை புற்றுநோயைத் தடுப்பதற்கு என்று எந்த ஒரு வழியும் இல்லை. இருப்பினும், ஒருசில வழிகளின் மூலம் தொண்டை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். அந்த வழிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்
தொண்டை புற்றுநோய் வரக்கூடாதெனில், முதலில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இப்படி தவிர்ப்பதன் மூலம் தொண்டை புற்றுநோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம்.
மது அருந்துவதை நிறுத்தவும்
அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்த வேண்டும். மிதமான அளவில் எப்போதாவது ஒருமுறை மது அருந்தினால் பிரச்சனை இல்லை. இருப்பினும், மது உடலுக்கு கேடு. இப்பழக்கம் கட்டாயம் இருக்க வேண்டுமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆரோக்கியமான டயட்
பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். இதனால் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உடல் செல்கள் சேதமடைவதைத் தடுத்து உடலை பாதுகாப்பாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications