Latest Updates
-
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
பெரிமெனோபாஸின் அறிகுறிகள் என்னென்ன? பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?
பொதுவாகவே பெண்களுக்கு 12 முதல் 15 வயதிற்குள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும்.. அப்படி மாதவிடாய் வந்தவுடன், ஒவ்வொரு மாதமும் பெண்களின் உடலில் ஒரு முட்டை உற்பத்தியாகத் தொடங்குகிறது, இந்த முட்டை விந்தணுக்களுடன் இணைந்து கருவாக மாறி பின்னர் ஒரு குழந்தை பிறக்கிறது.
ஆனால் பெண்களுக்கு மாதவிடாய் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் வரும்.. பொதுவாகவே அது 45 முதல் 55 வயதிற்குள் உள்ள பெண்களுக்கு நின்றுவிடும்.. இந்த நிகழ்வு மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது.. ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பு ஒரு காலம் வரும்.. அந்த காலம்தான் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. அந்த பெரிமெனோபாஸ் வரும் முன் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்? பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

பொதுவாகவே மாதவிடாய் என்பது இயற்கையான விஷயமாக இருந்தாலும் பெண்களின் உடலுக்கும், மனதிற்கும் சற்று சோர்வையே தரும்.. அதிலும் இந்த மெனோபாஸ் கடினமான காலகட்டம், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கலாம். மாதவிடாய் நிற்கும் முன் வரும் அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்வோம்.
1. ஒழுங்கற்ற மாதவிடாய்
மாதவிடாய் நிறுத்தம் என்பது மாதவிடாய் மற்றும் பெரிமெனோபாஸ் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான நேரமாகும்.. இந்த காலகட்டத்தில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களில் மிகப்பெரிய ஏற்ற இறக்கங்கள் உள்ளன. மாதவிடாய் நின்ற 4 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பு பெரிமெனோபாஸ் தொடங்குகிறது. இது 40 முதல் 45 வயதில் ஏற்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் தொடர்ந்து முறைகேடுகள் ஏற்பட்டால், மெனோபாஸுக்கு முந்தைய கட்டம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
2. உடலின் பல பகுதிகளில் சூடாக உணர்வது (hot flashes)
வெப்பத்தின் திடீர் உணர்வுகள், அடிக்கடி வியர்வையுடன், குறிப்பாக இரவில் உடல் சூடாக இருப்பதாக உணர்வது.. சுமார் 70 சதவீத பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் முன் ஹாட் ஃப்ளாஷ் ஏற்படும். இந்த காலகட்டத்தில், இரவில் வியர்த்தல் முக்கிய அறிகுறியாகும். இதில், உடலின் பல பகுதிகளில் திடீரென கடுமையான வெப்பம் உணரப்பட்டு, அந்த இடத்தில் வியர்க்கத் தொடங்குகிறது. கழுத்து, தலை, மார்பு, முதுகு ஆகிய பகுதிகளில் சூடு உணரப்பட்டு தோலில் சிவந்து காணப்படும்.
3. யோனியில் வறட்சி
மாதவிடாய் நிற்கும் முன், பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அப்போது ஈஸ்ட்ரோஜன் குறையத் தொடங்கும்.. அதனால் யோனியில் வறட்சி ஏற்படத் தொடங்கும். இதன் காரணமாக தம்பத்திய உறவுகளில் ஈடுபடுவதில் சிரமம் இருக்கும்..
4. மூட்டு வலி
70 சதவீத பெண்களுக்கு பெரிமெனோபாஸ் காலத்தில் மூட்டு வலி ஏற்படும். இந்த காலகட்டத்தில், எலும்பு அடர்த்தி மற்றும் தசையின் வலிமை குறைகிறது. இது கீல்வாதம், உறைந்த தோள்பட்டை மற்றும் பிற வகையான மூட்டு வலிகளை ஏற்படுத்துகிறது.
5. அதிக எடை
பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் நிற்கும் முன் எடை அதிகரிக்கும். குறிப்பாக வயிற்றின் அருகே கொழுப்பு சேரத் தொடங்கும்..ஆனால் இதைப் பற்றி கவலைப்படத் தேவை இல்லை.. மாறாக வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
6. மறதி ஏற்படுதல்
பெண்களுக்கு இந்த மாதவிடாய் நிற்கும் முன்பு மனதில் குழப்பம் அதிகரிக்கிறது. அதனால் சில விஷயங்களை மூளை மறக்கிறது.. தலைக்கு மேல் ஏதோ ஒன்று சுழல்வது போல் தோன்றும்.. அதேபோல், கார் சாவியை மறப்பதும் சகஜம். வேலைப்பளு அதிகம் இருப்பது போல் தோன்றுவது...
7. மனநிலை மாற்றம்
மாதவிடாய் நிற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே மனநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிடும்.. சில நேரங்களில் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் சில நேரங்களில் கோபப்படுவீர்கள். இந்த நேரத்தில், ஏற்படும் மனச்சோர்வு. கவலை, அமைதியின்மை, கோபம், போன்ற பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு, ஆரோக்கியமான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, யோகா, தியானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, பிரியமானவர்களுடன் வெளியே செல்வது, விடுமுறை நாட்களை நன்றாகக் கழிப்பது.. பிடித்தமானவற்றை செய்வது.. இவை அனைத்து பெரிமெனோபாஸின் அறிகுறிகளின் விளைவை குறைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications