Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
வடித்த சாதத்தை விட பழைய சாதம் ஆரோக்கியமானதா? எப்படி?
அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?' என்று. சட்டென்று பழைய சோறு, கம்பங் களிதான்... வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது.
பலவித உணவுகள் ஒவ்வொரு நாளும் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும், அரிசி சாதம் சாப்பிடுவதில் இருக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் வேறு எதிலும் இருக்காது என்பது பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். வேற்றுநாட்டு உணவுகளை முயற்சி செய்து வந்தாலும் வீட்டுக்கு வந்து ஒரு பிடி சோறு சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும் என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். அதே போல, இந்திய உணவு என்றால் அரிசி அடிப்படை உணவு. குறிப்பாக, தென்னிந்தியாவில் விதவிதமான அரிசிகளும், வெவ்வேறு விசேஷங்களில் விருந்துகளில் சமைக்கப்படுகிறது.

பழைய சாதம் குறித்து நிபுணர்கள் என்ன சொலுகிறார்கள்
பலருக்கு சுடச்சுட சாதம் வடித்து, சூடாக சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். சிலருக்கு முதல் நாள் வடித்த சாதம் அல்லது காலையில் வடித்த சாதத்தில், ஐஸ் பிரியாணி என்று கூறப்படும் பழைய சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு வலுசேர்க்கும் என்று கால காலமாக கூறப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பழைய சாதத்தைவிட சுடச்சுட சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியமானதா என்பதை பற்றிய நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று இங்கே பார்க்கலாம்.
பழைய சாதம், அப்போது சமைக்கப்பட்ட சூடான சாதத்தை விட பல விதங்களில் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. சமைக்கப்பட்ட அரிசியில் இருக்கும் ஸ்டார்ச், குளிரவைக்கப்பட்டவுடன், அதன் தன்மை மாறிவிடுகிறது. அதாவது, உணவில் இருக்கும் ஸ்டார்ச் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, எளிதாக செரிமானம் ஆகக்கூடிய ஸ்டார்ச்சில் இருந்து ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் அதாவது குறைவான கிளைகேமிக் இன்டக்ஸ் கொண்ட, எளிதில் செரிமானம் ஆகாத ஸ்டார்ச் ஆக மாறுகிறது. இது அரிசியில் மட்டுமல்லாமல், அதிக ஸ்டார்ச் உணவுகள் எல்லாவற்றிலும் இப்படி மாறும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
ஸ்டார்ச் அதிகம் இருக்கும் அரிசி சாதம், உருளைகிழங்கு உள்ளிட்டவை எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. ஆனால் இந்த ஸ்டார்ச் குளிரூட்டப்பட்ட பிறகு இந்த உணவுகள் ரெஸிஸ்டன்ட் ஸ்டார்ச்சாக மாறி செரிமானம் ஆவதற்கு தாமதமாகும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது. அதுமட்டுமல்லாமல் பழைய சாதத்தில் உடலுக்கு தேவையான பாக்டீரியா மற்றும் புரோபயாட்டிக் ஆகியவை உற்பத்தியாகும். இது செரிமான கோளாறுகளை சரிசெய்வதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அதனால் நிச்சயம் சர்க்கரை நோயாளிகள் இந்த பழைச்சோறு சாப்பிடலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.இதனை ப்ரீபயாடிக் என்றும் சொல்கிறார்கள்.. இது நமது உடலின் ரத்தத்தில் எந்த விதத்திலும் சர்க்கரையின் அளவை உயர்த்தாமல் அதேசமயம், குடல் ஆரோக்கியமும் காக்கப்படுகிறதாம்.
பழைய சோறு தண்ணீரில் உள்ள சத்துகளும் பலன்களும்
உண்மையை சொல்லப்போனால், வடித்த சாதத்தை விட, இந்த பழைய சோறு தண்ணீரில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. வழக்கமாக சாதத்தில் உள்ள இரும்பு சத்தைவிட, 21 மடங்கு இரும்புச்சத்து இந்த நீராகாரத்தில் உள்ளதாம். உடலில் எதிர்ப்பு சத்துக்களை அதிகரிக்க செய்வதால்தான், இதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடுகிறார்கள். பாக்டீரியாக்கள்: இரவே சாதத்தில், தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட்டால், லட்சக்கணக்கான நல்ல, நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.. இதை வெறும் வயிற்றில் குடிக்கும்போது, உடல் உஷ்ணம் குறையும்... இது மிகச்சிறந்த மலமிளக்கி.. அல்சர் புண்களும் மெல்ல மெல்ல ஆறும்.. சிறுகுடல் ஆரோக்கியம் அடையும்.. எனர்ஜி நிறைந்த பானமாகவும், திகழ்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications