Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
ஃப்ளூ சீசன் ஆரம்பம்.. இந்தியாவில் அதிகரிக்கும் பன்றிக் காய்ச்சல்.. தடுக்கும் முறைகள் என்னென்ன?
பருவ நிலைக்கு ஏற்ப பறவை காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், என்று ஒவ்வொன்றும் புதிது புதிதாக வருகிறது. அப்படி வரும் காய்ச்சலில் சமீப காலமாக அதிகமாக வருவது ஃப்ளூ காய்ச்சல் எனப்படும் பன்றி காய்ச்சல்.
கொரோனா வைரஸ் காய்ச்சல் வந்து சென்ற பின்னர் பன்றிக்காய்ச்சல் சாதாரணமாகி விட்டது.. ஆனாலும் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பருவநிலை மாற்றம் காரணமாக மீண்டும் பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.

தற்போது காய்ச்சலோ அல்லது லேசான இருமலோ பாதிக்கப்பட்ட ஒருவரை நாம் பார்க்கிறோம்.. காரணம் சீசன் ஆரம்பமாகிவிட்டது.. வைரஸ் சீசன் காரணமாக இந்த பாதிப்புகள் இப்போது பொதுவானவை ஆகிவிட்டது.. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உச்ச காய்ச்சல் பருவங்கள் உள்ளன.. இந்த இரண்டு பருவங்களும் ஜனவரி முதல் மார்ச் மற்றும் மற்றொன்று பருவமழைக்கு பிந்தைய காலம் ஆகும்..
அப்போது மக்கள் திடீரென்று காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.. வானிலை மாறி பல்வேறு வைரஸ்கள், கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும் இடமாக மாறுவதால் இது நிகழ்கிறது. இந்தியாவில் இப்போது mpox கண்டறியப்பட்ட நிலையில் , நாட்டிற்குள் மேலும் ஒரு நோய் பரவியுள்ளது.. இருப்பினும் நோய் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதால் யாரும் பயப்பட வேண்டாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்...
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?
பன்றிகளின் சுவாசக் குழாயைத் தாக்கும் வைரஸால் ஏற்படும் சுவாச நோயாகும். இது பருவகால காய்ச்சலைப் போல பரவக்கூடியது. H1N1 வைரஸால் ஏற்படுகிறது, மனிதர்களிடையே பரவும் பன்றிக் காய்ச்சல் வைரஸின் முக்கிய வழி, பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போது அல்லது இருமும்போது வைரஸின் வெளிப்பாடு ஆகும்..
ஃப்ளூ சீசன்
இந்த ஃப்ளூ காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது. இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் தொற்று வைரஸ் ஆகும்.. இதனால் சுவாசத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.. அதுமட்டுமல்லாமல் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திக்கு வழிவகுக்கும்.. இந்த பருவத்தில் பொதுவான நோய்கள் காய்ச்சல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், உடல் வலி மற்றும் தசை வலி, சோர்வு மற்றும் பலவீனம், குளிர் மற்றும் வியர்வை. இதனுடன் இந்த பருவத்தில் ஏற்படக்கூடிய மற்ற பொதுவான நோய்களையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிற நோய்கள்
வல்லுனர்களின் கூற்றுப்படி, வைரஸ் தொற்றுகளுடன், இந்தியாவில் அதிகரித்து வரும் பிற நோய்கள் பன்றிக் காய்ச்சல் , டெங்கு, சிக்குன்குனியா டைபாய்டு, மிகக் குறைவான காலரா, சில கோவிட் கேஸ்கள் மற்றும் வழக்கமான இரைப்பை குடல் அழற்சி, வயிறு மற்றும் குடல் அழற்சி. வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும் நோய்கள் ஆகும்...
இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருகிறது
இந்தியாவில் மொத்தம் 9,000 H1N1 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. ஜூலை 2024 நிலவரப்படி 178 இதனால் பேர் இறந்துள்ளனர். தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (NCDC) வெளியிட்ட தரவுகளின்படி, இன்ஃப்ளூயன்ஸா A (H1N1) மூலம் அதிகபட்ச இறப்புகளைப் பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப், குஜராத் மற்றும் கேரளா முதலிடத்தில் உள்ளன. H1N1 வைரஸ் அல்லது பன்றிக்காய்ச்சல், முதன் முதலில் 2009 இல் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.. இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்தது.
பருவகால காய்ச்சலைப் போலவே, இதுவும் பாதிக்கப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும்போது சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது. தோற்றம் பன்றிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது, அதனால் அதன் பெயரைப் பன்றிக்காச்சல் என வைத்துள்ளனர்..
பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான குறிப்புகள்
காய்ச்சல் பரவாமல் இருக்க தும்மல் வரும் போது மூக்கை மூடுவது, இருமும்போது கைக்குட்டை அல்லது டிஷ்யூவைப் பயன்படுத்துவது, கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்ப்பது போன்ற அடிப்படை சுகாதாரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்... நல்ல சுகாதாரத்தைப் பேணுதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துதல், முகமூடிகள் அணிதல், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல், பரிசோதனை செய்தல், ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவரிடம் தெரிவிப்பதன் மூலம் இந்த காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.. காய்ச்சல், தலைவலி போன்றவை இதன் முக்கியமான அறிகுறிகள் ஆகும்...
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
