Latest Updates
-
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
உருளைக்கிழங்குனா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அப்ப உங்களுக்கான நல்ல செய்திதான் இது...!
உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மிகவும் விரும்பப்பட கூடிய காய்கறி வைகைகளில் ஒன்று. இதை அவரவர் விருப்பத்திற்கேற்ப பல வழிகளில் சமைத்து சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகள் முழுவதுமாக நிரம்பி இருக்கின்றன.
ஆனால் உருளைக்கிழங்கு உங்கள் சரும பராமரிப்புக்கு பெரிதும் உதவுகின்றன. சரும நிறத்தை வெண்மையாக மாற்றுவதிலிருந்து உடல் ஆரோக்கியம் வரை உருளைக்கிழங்கில் பல சிறந்த நன்மைகள் இருக்கின்றன. இங்கு அவை உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கின்ற என்று பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு அதிக மாவுச்சத்து நிறைந்த வேர் காய்கறி. இதில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்களின் மூலமாக திகழ்கிறது. அவற்றில் சில முக்கிய ஊட்டச்சத்துக்களையும் அதன் பயன்களையும் இங்கு பார்க்கலாம்.
கார்போஹைட்ரேட்டுகள்
இன்றைய காலகட்டத்தில் கார்போஹைட்ரேட்டு என்றவுடன் உடல் எடையை அதிகரிக்கும் என தவிர்க்கும் மக்களும் அதிகரித்திருக்கிறார்கள். உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரம் என்பது உண்மை தான், ஆனால் அவை உடலுக்கு தேவையான ஆற்றலின் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. அனைத்து ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு முக்கியம் என்பதால் இதை தவிர்ப்பது தவறு. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப அளவோடு உணவில் சேர்த்து கொள்வது நன்மை பயக்கும்.
நார்ச்சத்து
உருளைக்கிழங்கும் நார்ச்சத்துகளின் நல்ல மூலமாக இருப்பதால், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது இதய நோய், பக்கவாதம், வகை 2 நீரிழிவு மற்றும் குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை குறைப்பதில் தொடர்புடையது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. நார்ச்சத்து கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நம்மை முழுயாக உணர வைப்பதோடு, உணவு செரிமான மண்டல செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி9 (ஃபோலேட்) உள்ளிட்ட பல வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக
விளங்குவதோடு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல தாதுக்களின் சிறந்த மூலமாக திகழ்கிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை அதிகரிக்கின்றன. இயல்பான வளர்ச்சி மற்றும் வளர்ச்சி நிலைகளை ஆதரிக்கின்றன. மேலும் நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவுதல், காயங்களை குணப்படுத்துதல், நமது எலும்புகளை வலிமையாக்குதல் மற்றும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு அவசியமாகின்றன. செல்கள் மற்றும் உறுப்புகள் அவற்றின் வேலையைச் செய்ய உதவுகின்றன.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
உருளைக்கிழங்கில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் உட்பட பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகள் இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட பல நோய்களின் ஆபத்தை குறைக்கும் பண்புகளை கொண்டிருக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் செல்களில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்து, ஆக்ஸிஜனேற்றத்தால் ஏற்படும் சேதத்தைத் தடுப்பது அல்லது குறைப்பது போன்ற செயல்பாடுகளை செய்கின்றனர்.
தோலுடன் கூடிய 173 கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கின் ஊட்டச்சத்து மதிப்புகள்:
கலோரிகள்: 161
கார்போஹைட்ரேட்டுகள்: 36 கிராம்
ஃபைபர்: 3.8 கிராம்
புரதம்: 4 கிராம்
கொழுப்பு: 0.2 கிராம்
வைட்டமின் சி: 28%
வைட்டமின் B6: 27%
பொட்டாசியம்: 26%
மக்னீசியம்: 12%
இரும்பு: 10%
ஃபோலேட் (வைட்டமின் B9): 9%
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
