Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை குடித்தால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுமா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க!
கல்லீரல் என்பது உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். இந்த உறுப்பு தான் வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெருமளவில் உதவுகிறது. கல்லீரல் தான் இரத்தத்தில் இருந்து ஆபத்தான பொருட்களை நீக்குகிறது. எனவே கல்லீரலில் சிறு பாதிப்பு ஏற்பட்டால் கூட ஒட்டுமொத்த உடல்நிலையும் பாதிப்படைய கூடும். அதிலும் இன்றைய சமூகத்தில் அனைவரும் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை பருகி வருகின்றனர்.
சர்க்கரை இனிப்பு பானங்களை அதிகளவில் உட்கொள்வதால் கல்லீரல் புற்று நோய் உண்டாகிறது. சில சமயங்களில் நாள்பட்ட கல்லீரல் புற்று நோயால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை பானங்கள் எப்படி கல்லீரல் புற்று நோயை உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

கல்லீரல் புற்று நோய் ஏற்படக் காரணங்கள்
சில வாழ்க்கை முறை காரணிகள் கூட கல்லீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது. JAMATtrusted Source இல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வுப் படி, சர்க்கரை-இனிப்பு பானங்கள் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்குகின்றன.
மாதவிடாய் நின்ற பெண்களில் தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரை கலந்த பானங்களை பருகும் போது பெண்களுக்கு கல்லீரல் புற்று நோய் மற்றும் நாள்பட்ட கல்லீரல் புற்று நோயால் மரணம் ஏற்படுகிறது என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இனிப்பு பானங்கள் எப்படி கல்லீரல் புற்று நோயை உண்டாக்குகிறது?
சர்க்கரை இனிப்பு பானங்களுக்கும், கல்லீரல் புற்று நோய்க்கும் இடையே உள்ள தொடர்பை கண்டறியும் விதத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாதவிடாய் நின்ற நிலையில் உள்ள பெண்கள் கிட்டத்தட்ட 90,000 பெண்கள் இதில் கலந்து கொண்டனர். பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களைத் தொடர்ந்து நீண்ட கால தரவை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.
இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்கள் சர்க்கரை இனிப்பு பானங்களையே அருந்தி வந்தனர். அவர்கள் செயற்கை இனிப்பு பானங்களை எடுத்துக் கொண்டது 3 வருடங்களாக பதிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்கு 3 அல்லது அதற்கு குறைவாக பானங்களை எடுத்துக் கொண்டவர், ஒரு வாரத்திற்கு 1-6 முறை பானங்களை எடுத்துக் கொண்டவர்கள், ஒரு நாளைக்கு 1 அல்லது அதற்கு மேற்பட்ட முறை பானங்களை எடுத்துக் கொண்டவர்கள் என 3 பிரிவுகளாக பிரித்தனர்.
அந்த பெண்கள் கூறிய பதில்களின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் அவர்களை 3 குழுக்களாக பிரித்தனர். பிறகு கல்லீரல் புற்று நோய் மற்றும் நாள்பட்ட புற்றுநோய் பற்றி அவர்கள் ஆராய்ச்சி செய்தனர். பங்கேற்ற பெண்களின் புகைப்பிடிக்கும் நிலை, உடல்நிலை குறியீட்டு எண், உடல் செயல்பாடுகளின் அளவு என பல காரணிகளை அவர்கள் கணக்கிட்டனர்.
கல்லீரல் புற்று நோய் அபாயம் யாருக்கு அதிகம்?
இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது என்னவென்றால் ஒரு மாதத்திற்கு மூன்று அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை-இனிப்பு பானங்களை உட்கொண்ட பெண்களுடன் ஒப்பிடும்போது, தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரை-இனிப்பு பானங்களை உட்கொள்ளும் பங்கேற்பாளர்கள் கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோயால் இறக்கும் அபாயம் அதிகம் என்பது ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் உணவு ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமற்ற உணவால் உடல் பருமன், நீரிழிவு நோய் மட்டுமே ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால் ஆரோக்கியமற்ற உணவால் கல்லீரல் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது யாருக்கும் தெரிவதில்லை.
கல்லீரல் புற்று நோய் மற்றும் நாள்பட்ட கல்லீரல் புற்று நோய்
கல்லீரல் நம் உடலுக்கு வரும் பொருட்களில் பயனுள்ளவற்றை எடுத்துக் கொண்டு நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. இது கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை வளர்ச்சிதை மாற்றமாக மாற்ற உதவுகிறது.
நாள்பட்ட கல்லீரல் நோய் மிகவும் தீவிரமான நோயாகும். இது சிரோஸிஸ் என்ற மேம்பட்ட நிலையை உண்டாக்குகிறது. உலகம் முழுவதும் ஏற்படும் பெரும்பாலான இறப்பிற்கு இந்த சிரோஸிஸ் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. சுமார் 1.3 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் இந்த சிரோஸிஸால் இறக்கின்றனர். மேலும் அதிக மது அருந்துதல், உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் போன்றவையும் கல்லீரல் பாதிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
